புதுடில்லி : கல்வி உரிமை சட்டத்தை(ஆர்.டி.இ.,) மார்ச் 31ம் தேதிக்கும் அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு பிறப்பித்திருந்த உத்தரவு இன்னும் பெரும்பாலான மாநிலங்களில் அமல்படுத்தப்பட படாமல் உள்ளது. கல்வி பெறும் உரிமை சட்டம் அமல்படுத்தப்படாததால் பள்ளிகளில் மீண்டும் குழந்தைகள் சேர்க்கை அளவு குறையும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் புள்ளி விபர அறிக்கையின்படி 40 சதவீதம் துவக்கப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமலும், 33 சதவீதம் பள்ளிகள் பெண் குழந்தைகளுக்கு கழிப்பறை வசதி இல்லாமலும், 39 சதவீதம் பள்ளிகள் மாற்றுதிறனாளி குழந்தைகளை பராமரிக்கும் திறன் இல்லாமலும் உள்ளன.