E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இலங்கை மக்களின் வாழ்வுக்காக பல கோடி கொடுத்தது இந்தியா : ஜி.கே.,வாசன் பேட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

29 மார்
2013
13:48
பதிவு செய்த நாள்
மார் 29,2013 11:24

சென்னை: இலங்கை வாழ் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட இந்திய அரசு பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது என்றும் , இவர்கள் சம உரிமை பெற இந்தியா முழு முயற்சி எடுத்து வருகிறது . இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நீர்த்து போக செய்து விட்டது என்பது தவறானது . இது உண்மையல்ல என்றும் , இந்தியா முழு முயற்சி எடுத்து தீர்மானத்தை நிறைவேற்ற உதவி செய்தது என்றும், மாணவர்களின் உணர்வுகள் மதிக்கப்படும். இந்த உணர்வுகளை பிரதமரிடம் அழுத்தமாக தெரிவிப்போம் என்றும் மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.,வாசன் இன்று சென்னையில் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களுக்கு மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழர் நலனுக்காகவும், வாழ்வுக்காகவும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம். மாணவர்களின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் அல்லாமல், இந்திய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. மாணவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னின்று செயல்படும்.
மத்திய அரசிடம் மாணவர்களின் உணர்வுகளை நான் அழுத்தமாக பிரதிபலிப்பேன். அதன் மூலம் இலங்கை தமிழ் மக்கள் பாதுகாப்பும், சம உரிமை பெற்றுத்தரப்படும் நிகழ்வும், சிங்களவர்கள் தமிழர்கள் இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும். மாணவர்கள் தங்களது போராட்டத்திற்கு களங்கம் ஏற்பட யாரையும் அனுமதிக்கக்கூடாது. வருகின்ற நாட்களில் தேர்வு நடைபெற உள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். மீண்டும் மாணவ நண்பர்கள் தங்களுடைய கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.

ஐ.பி.எல்., முடிவுக்கு வரவேற்பு :

சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல்., போட்டிகளில் எதிர்ப்பு குறித்து கூறும்போது, விளையாட்டிற்கும் அரசியலுக்கும் நேரடி தொடர்பு இல்லைஎன்றாலும், தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து முடிவு எடுக்க வேண்டும். இலங்கை வீரர்கள் சென்னையில் பங்கேற்காமல் இருக்கும் ஐ.பி.எல்., நல்ல முடிவு எடுத்திருப்பதை வரவேற்கிறேன். நவம்பர் மாதத்தில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இதில் என்னுடைய தனிப்பட்ட கருத்து, வருகிற நாட்களில் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் மாற்றம் இல்லை என்றால் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டில் நடத்த, இலங்கைக்கு எதிராக ஓட்டுப்போட்ட நாடுகள் முயற்சி எடுக்க வேண்டும். அதனடிப்படையில் பிரதமர் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் மீது ஐ.நா.,வில் கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா இரண்டாவது முறை ஆதரித்தது. இந்த செயல்பாடு, அங்கு வாழும் மக்களின் நம்பிக்கையையும், சம உரிமையையும் கொடுக்க வேண்டும் என்பதை உலக நாடுகளுக்கு நாம் தெரிவிக்கும் கருத்து என்பது தான் பொருள். இந்த தீர்மானத்துக்கு 25 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இலங்கை தமிழ் மக்களுக்கு பல கோடி ரூபாய்கொடுத்து இந்தியா உதவி செய்கிறது. மருத்துவமனை பள்ளிக்கூடங்கள், சாலைகள், சைக்கிள், கம்ப்யூட்டர், வீடுகள் என பல திட்டங்களை தீட்டி பல திட்டங்களை செயல்படுத்தும் நாடு இந்தியா. இதற்கென இந்தியா பல கோடிகளை கொடுத்து உதவி வருகிறது. இந்த நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

இந்தியா செய்யும் ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். இந்த தீர்மானம் நீர்த்து போக இந்தியா தான் காரணம் என கூறப்படுவதை ஏற்க முடியாது. அது உண்மையானதல்ல. தீர்மானத்தை திருத்துவதற்கு தனிப்பட்ட நாடாக இந்தியாவிற்கு தகுதியும், உரிமையும் கிடையாது. பல நாடுகள் சேர்ந்து கொண்டு வரும் தீர்மானம் ஆகும். இவ்வாறு வாசன் கூறினார்,





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (26)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M.sekar - orchard,சிங்கப்பூர்
30-மார்-201314:01:40 IST Report Abuse
M.sekar நீங்க குடுத்ததும் போதும் தமிழ் மக்களை கொன்னதும் போதும் நிருத்துங்க முதல்ல... தமிழன் உணர்வோட நீங்க போராட வேண்டாம் ஆனா என்னோட சொந்தங்களா வச்சு அரசியல் பண்ணாதிங்க .... முடுஞ்ச தமிழன இருங்க .. இல்ல தமிழன இருக்க விடுங்க ...கண்டிப்பாக ஒரு நாள் நீதி கிடைக்கும் ...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
30-மார்-201312:29:12 IST Report Abuse
saeikkilaar நாங்க தொட்டிலையும் ஆட்டுவோம், பிள்ளையும் கிள்ளிவிவெடுவோம்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
30-மார்-201311:13:33 IST Report Abuse
amukkusaamy விழலுக்கு இறைத்த நீர்...நீரே ஒரு வேஸ்ட் ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
30-மார்-201309:21:20 IST Report Abuse
krishna ராடார் கொடுத்து உதவியது நீங்க, ராணுவ உதவி செஞ்சீங்க எல்லாம் பண்ணிட்டு தமிழர்களுக்கு உதவியா
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
கார்த்திகேயன் - Coimbatore,இந்தியா
30-மார்-201308:27:33 IST Report Abuse
கார்த்திகேயன் வர்ற ellectionn la காங்கிரஸ்க்கு ஆப்பு உண்மையா ஆகிருச்சு.... இனி தமிழன எதிர்க்கிறவர்கள் அது ஆளும் கட்சினாலும் சரி எதிர் கட்சி நாளும், சரி.... சப்ப கட்சினாலும் சரி..... தமிழ் "நாடு" ல ஆட்சி அமைக்க வாய்ப்பு தரமாட்டோம்.... உண்மையான தமிழ் மக்கள் மட்டுமல்ல.... மனிதனையும் மனித உணர்வை நேசிக்கும் மக்களும்.... இதனை அறிவார்கள் சுயநலத்திற்காக சலாம் போடும் முட்டாள் மக்களைதவிர... அப்படி உங்கள் வீட்டில் யாரும் இருந்தால் நமது நாட்டிற்காக அவர்கள் கொன்றுவிடுங்கள்....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
En Tamil Inamada - kabul,ஆப்கானிஸ்தான்
30-மார்-201313:32:25 IST Report Abuse
En Tamil Inamadaசரியான பதிலடி இருக்குடா உங்களுக்கு..விட்டுக்கு ஒரு மாணவன் இருக்கான் ..பெதங்கவங்கள சமாதிக்க வச்சு ஒட்டு போடுவாங்க ...காங்கிரஸ் நி தமிழ் நாட்டுல காலி....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
நாதன்.K.R.வாரியார் - சென்னை,இந்தியா
30-மார்-201307:08:59 IST Report Abuse
நாதன்.K.R.வாரியார் இப் பதவிகளெல்லாம் (மத்திய அமைச்சர், M.P, M.L.A, M.C) காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் இதுவே கடைசி தடவை. அப்புறம் இந்தமாதிரி பேட்டியெல்லாம்??????????????????????
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
30-மார்-201306:58:11 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி நீங்கள் கோடி கொடுத்தது கேடி இடம்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
suman - Madurai,இந்தியா
30-மார்-201300:14:41 IST Report Abuse
suman காங்கிரசு இலங்கைக்கு கொடுத்த ஆயுதம் பல கோடி.. அதனால் நின்றது ஆயிரம் ஆயிரம் தமிழர்களின் நாடி ... காங்கிரஸ்காரன் எல்லாருமே சரியான கேடி .. நீயும் அந்த இத்தாலிகாரியின் ஜாடிக்கு ஏற்ற மூடி ... 2014 ஆண்டு செல்லும் இதற்கு நீதியை தேடி.. எல்லா கயவர்களும் அப்போது போகவேண்டும் ஓடி (பாராளுமன்றத்தில் மற்றும் இலங்கையில் இருந்து)...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Drv Samy - trichy,இந்தியா
29-மார்-201316:33:58 IST Report Abuse
Drv Samy இங்கு கிட்டதட்ட அனைவருமே காங்கிரசை தமிழ்நாட்டில் ஒழிதெரிய வேண்டும் என்றே கருத்து தெரிவிகிறார்கள் இதை பார்கையில் தமிழன் விழித்து கொள்ள ஆரம்பித்து விட்டான் என்றே நினைகிறேன்.. ஆனால் இது நடக்க வேண்டும் அப்படி நடக்குமே ஆனால் அதுவே ஈழ தமிழர்களுக்கு, நாம் தரும் ஆதரவு உண்மை என உலகத்துக்கு தெரியும் அது நம் போரட்டங்களுக்கும் தமிழர்களை மதிக்காமல் இருக்கும் ஒரு ஒரு கட்சியையும் நம்மை திரும்பி பார்க்க வைக்கும் ,பின் தமிழனை சீண்ட எவனும் சிந்திப்பான் .., இதை நாம் உறுதி மொழியாய் எடுத்து நிறைவேற்ற வேண்டும் ... தமிழன் என்று சொல்லடா தலை நிமிருந்து நில்லடா...
Rate this:
4 members
0 members
28 members
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
29-மார்-201316:30:46 IST Report Abuse
LAX " இந்த நிதி முறையாக செலவிடப்படுகிறதா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது." இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல? நம்ம நாட்டுக்குள்ள, மாநிலங்கள்ல மக்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதிகளே முறையா செலவிடப்படாமல் அந்தந்த துறையினரால் கணிசமாக பங்கு பிரிக்கப்பட்டு சொந்த பாக்கெட்டுகளுக்கு சென்றுவிடுகிறது. இதுல அடுத்தநாட்டுக்கு அனுப்பற நிதி முறையா செலவிடப்படுகிறதான்னு ஆராயறீங்களாக்கும்? அந்த நிதி அந்த நாட்டுக்கு போய் சேர்வதற்குள்ளேயே எத்தனை பர்சன்டேஜ் அடிக்கப்படுகிறதோ? ஒரு அளவே இல்லாம அநியாயத்துக்கு ஜோக் அடிக்கறீங்களே?
Rate this:
2 members
0 members
51 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.