நகைக்காக 3 வயது சிறுமி கடத்திக் கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்காக 3 வயது சிறுமி கடத்திக் கொலை

Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே, 3 பவுன் நகைக்காக 3 வயது சிறுமியை கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்தவர் சகாபுதீன்,32. இவரது மகள் சஹானாபேகம்,3. சஹானா பேகம் நேற்றுமாலை , 5 பவுன் டாலர் செயின், ஒரு பவுன் தூக்கு கம்மல், 2 பவுனில் கொலுசு, 2 பவுன் வளையல் ஆகியவற்றை அணிந்து விளையாடி கொண்டிருந்தார். சஹானாபேகம், திடீரென்று மாயமானார். தன் குழந்தையை தேடி கண்டுபிடித்துத்தருமாறு கோட்டைப்பட்டிணம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசாரும் விசாரணையை துவக்கினர். இதற்கிடையே கோட்டைப்பட்டிணம் கடற்கரையை ஒட்டி, சாக்குமூடை ஒன்று அனாதையாக கிடந்துள்ளது. சந்தேகடைந்த அப்பகுதியினர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சாக்குமூடையை பிரித்து பார்த்தபோது, தலையில் பலத்த காயத்துடன் குழந்தை சஹானாபேகம் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக குழந்தையை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறினர். ஆத்திரமடைந்த சகாபுதீன் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர், குழந்தையை கடத்திச்சென்று, நகைகளை பறித்தபின், கொலை செய்து பிணத்தை கடற்கரையில் வீசிச்சென்ற கொலையாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை