Advertisement
சென்னையை சேர்ந்த 7 ரவுடிகள் வாலாஜாவில் கைது
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 மார்
2013
16:46

வேலூர்: சென்னையை சேர்ந்த, ஏழு ரவுடிகளை, வாலாஜாபேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த கீழ் புதுப்பேட்டையில் நேற்று மதியம், 1 மணிக்கு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த, "இன்டிகா' காரை மடக்கி சோதனை செய்தனர்.காருக்குள் இரண்டு நவீன துப்பாக்கிகள், ஒரு பேனா துப்பாக்கி, கத்தி, தோட்டாக்கள், லேப் - டாப் இருந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தனர்.சந்தேகமடைந்த போலீசார் அவர்களை வாலாஜாபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு வேலூர், டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி, எஸ்.பி., ஈஸ்வரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.விசாரணையில், சென்னை டி.நகரை சேர்ந்த, "சிடி' மணி, 30, ஆறுமுகம், 25, எம்.ஜி.ஆர்., நகர் வினோத்குமார், 24, ராம்குமார், 25, சி.ஐ.டி., நகரை சேர்ந்த வினோத்குமார், 23, ஜெய்கணேஷ், 30, புதிய பால கிருஷ்ணாபுரம் வெங்கடேசன், 37, என்பதும், ரவுடிகளான இவர்கள் சென்னையில் நடந்த, 17 கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிந்தது.இவர்கள் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ரவுடிகள் சுரேஷ், கார்த்திக் கொலை வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள், போலீசாரிடம் சிக்காமல், வாலாஜா பேட்டை அருகே பால கிருஷ்ணாபுரம் வெங்கடேசன் வீட்டில் தங்கி இருந்ததும், சென்னையைச் சேர்ந்த பிரபல புள்ளியை போட்டுத் தள்ள சென்ற போது பிடிபட்டதும் தெரிய வந்தது.வாலாஜா பேட்டை போலீஸார் பிடிபட்ட, ஏழு பேரையும் இன்று கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.