No plans now to withdraw support to UPA: Mulayam Singh | மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை : முலாயம்| Dinamalar

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை : முலாயம்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை : முலாயம்

லக்னோ: மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறும் எண்ணம் எதுவும் இல்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் கூறியுள்ளார்.
இது குறித்து முலாயம் சிங் கூறுகையில், நேற்றைய பேட்டியில் சமாஜ்வாடி ஆதரவு தொடர்பாக பிரதமர் எந்த அடிப்படையில் கூறினார் என்பது தெரியவில்லை. இப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கான ஆதரவை வாபஸ் பெறுவது தொடர்பாக கட்சியில் ஆலோசனை நடத்தவில்லை. ஐ.மு. கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சியின் ஆதரவை வாபஸ் பெறுவது பற்றி கேள்வியே இல்லை. இன்னும் 8-9 மாதங்களில் இந்த அரசின் பதவிக்காலம் முடியும் நிலையில் இப்போது ஏன் வாபஸ் பெற்று கவிழ்க்க வேண்டும்


பிரதமர் ஆவதற்கு ஆசை உள்ளதா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அதுபற்றி நினைக்கவில்லை என்றார்.


சமாஜ்வாடி ஆதரவை விலக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் கூறியதையடுத்து, பார்லிமென்டிற்கு முன்கூட்டியே தேர்தல் வருவது தவிர்க்க முடியாது என்று பா.ஜனதா கருத்து தெரிவித்தது.


இதற்கிடையில் பா.ஜ., செய்தி தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை முலாயம்சிங் வாபஸ் பெற வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இனியும் அவர் பிரதமராக முடியாது. 3 வது அணி என்பது பயனற்றது. இது வெறும் வரலாறாகத்தான் இருக்கும் என்றார்.





உ.பி., மாநிலத்துக்கு உதவி: சிதம்பரம் : உ.பி., மாநிலத்துக்கு தேவையான உதவி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கூறினார். லக்னோவில் புதிய வங்கி கிளை துவக்க விழாவில் பேசிய சிதம்பரம், முதல்வருக்கும், அவரது சகாக்களுக்கும் இதற்கான உறுதிமொழியை வழங்குவதாகவும், உ.பி., மாநில வளர்ச்சிக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை