சஸ்பெண்ட் காலம் குறைத்தது ஒரு நாடகம்:தே.மு.தி.க., -கொ.ப.செ., சந்திரகுமார் சாடல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சஸ்பெண்ட் காலம் குறைத்தது ஒரு நாடகம்:தே.மு.தி.க., -கொ.ப.செ., சந்திரகுமார் சாடல்

Updated : மார் 29, 2013 | Added : மார் 29, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ""ஓராண்டு சஸ்பெண்ட் செய்ததை, ஆறு மாதங்களாக குறைத்தது ஒரு நாடகம்,'' என, சஸ்பெண்ட் செய்யப்பட்ட, ஈரோடு கிழக்கு தொகுதி, தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ., சந்திரகுமார் கூறினார்.தே.மு.தி.க., கொள்கை பரப்பு செயலாளரும், ஈரோடு கிழக்கு தொகுதி (சஸ்பெண்ட் செய்யப்பட்ட) எம்.எல்.ஏ.,வுமான சந்திரகுமார், சூரம்பட்டியில் தனி அலுவலகத்தை திறந்து வைத்தார்.பின், நிருபர்களிடம் அவர் பேசியதாவது:சட்டசபையில், ஆறு தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து, நாளை ஈரோடு காளைமாட்டு சிலை அருகே, கட்சி நிறுவனர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா தலைமையில் பொதுகூட்டம் நடக்கிறது.சட்டசபையில், எம்.எல்.ஏ., தகுதியை இழக்க செய்யலாம். ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் என்னை, எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுத்தை மாற்ற முடியாது. தற்போது, எங்களுக்கான சலுகையையும் பறிக்க பார்க்கின்றனர்.எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அதிகாரிகளை சந்தித்து, மனுக்கள் கொடுத்து, கோரிக்கை விடுத்து வந்தோம். அதேபோல், பதவி நீக்கம் செய்தாலும், மக்கள் சேவையை தொடர்ந்து என்னால் செய்ய முடியும். மக்கள் கோரிக்கை மனுக்கள் பெற தனி அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. இதை யாராலும் தடுக்க முடியாது.ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து, ஆறு மாதமாக குறைக்கப்பட்டது, ஒரு நாடகம். பழி வாங்கும் நோக்கில், ஆறு பேரை சஸ்பெண்ட் செய்துள்ளனர்.சட்டசபையில், நடந்த கைகலப்பு தொடர்பாக, கேமரா பதிவில் காட்டப்பட்டுள்ளது. சட்டசபையில் மொத்தம், ஆறு கேமரா உள்ளது. இதில், 2 நிமிடம் முதல், 12 நிமிடம் வரை எடிட் செய்யாமல், பதிவானதை வெளியிட வேண்டும், என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை