| E-paper

 
Advertisement
தேர்தலில் காங்கிரஸ் தனித்தே நின்று வெற்றிபெறும் : ஈரோட்டில் இளங்கோவன் நம்பிக்கை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு:""தேர்தலில் காங்கிரஸ் தனித்தே நின்று வெற்றிபெறும் என்பதே தொண்டர்களின் எண்ணம். எங்களை பொருத்த வரை, நாங்கள் தனித்து நிற்பதை தான் மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளோம்,'' என, காங்., முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார். ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்குப்பின், முன்னாள் மத்திய இணை அமைச்சர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:ஈழத்தில் போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்கள் நல்வாழ்வு பெறவேண்டும். அவர்களின் எதிர்காலம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என, போராடுபவர்களை பாராட்டியும், அதே நேரம், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கல்லூரிக்கு திரும்ப வேண்டும்.இலங்கை பிரச்னைக்காக இந்திய அரசு என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்து கொண்டு தான் உள்ளது. மத்திய அரசு, இலங்கை பிரச்னைக்கு என்னென்ன செய்தது என்பதை பத்திரிகைகளில் விளம்பரமாக விரைவில் தர உள்ளது. இலங்கையில் மத்திய அரசாங்கம் செய்யும் திட்டங்களை குறும்படங்களாக, ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும்.பன்னாட்டு நிதி வேண்டும், பல நாடுகளுக்கு சென்று நீதி விசாரணை வேண்டுமென்பது சாத்தியமல்ல. தனி ஈழம் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். பொருளாதார தடை என்பது, அதன் சாதக பாதகங்களை யோசித்து தான் முடிவெடுக்க முடியுமே தவிர, தீர்மானம் நிறைவேற்றினால், தடை போட்டதாக அர்த்தமாகி விடாது.காமென்வெல்த் மாநாடு இலங்கையில் நடக்குமானால், அதில் பங்கேற்கக்கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. "அன்னமிட்ட கை, நாட்டை காப்பற்றியது கை' என, எம்.ஜி.ஆர்., சொல்லியிருக்கார். சமையல் எரிவாயு வழங்கவுள்ளோம், அதற்கு ஏற்றவாறு மண்ணெண்ணெய் அளவை குறைத்து கொண்டிருக்கிறோம். தேர்தலில் காங்கிரஸ் தனித்தே நின்று வெற்றிபெறும் என்பதே தொண்டர்களின் எண்ணம். எங்களை பொருத்த வரை, நாங்கள் தனித்து நிற்பதை தான் மேலிடத்தில் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
munna MURALI.TRT - chennai,இந்தியா
30-மார்-201311:08:32 IST Report Abuse
munna MURALI.TRT அடடடே என்ன ஒரு துணிச்சல் பேச்சுதைரியம் இருந்தால் தனித்து நில்லும் நின்று பாரும்இம்முறை பணமோ பச்சை சிரிப்பு பேச்சோ செல்லாது மாணவர்கள் முடிவெடுத்து விட்டனர் இனி நீங்கள் தமிழகத்தில் இருந்ததற்கான அடையாளமே இருக்காதுஎன்ன ஒரு வஞ்சகம்உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால் இப்படிதான் பொருப்பற்ற கருத்தை கூறுவீர்கள
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Peranandam - Kuwait,குவைத்
29-மார்-201317:31:52 IST Report Abuse
Peranandam திரு இளங்கோவன் அவர்களின் பேச்சு பராட்டுகுரியது காங்கிரஸில் இருந்தாலும் தந்தை பெரியாரின் பேரன், சொல்லின் செல்வர் சம்பத் அவர்களின் புதல்வர் என்பதை அழுத்தமாகவும் உறுதியாகவும், தெளிவாகவும் பதிவுசெய்துள்ளார்.
Rate this:
6 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.