கோவை: விஸ்வ இந்த பரிஷத் அமைப்பின் பிரவீண் தொகாடியா இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: இலங்கை தமிழர்களை பாதுகாக்க மத்திய அரசு சுத்தமாக தவறிவிட்டது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழக மீனவர்களை தமிழக மீனவர்கள் என பார்க்காமல், இந்திய மீனவர்கள் என கருதி அவர்களை பாதுகாக்க, விமானப்படை மற்றும் கப்பல்படையை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தமிழகத்தில் கோவில்களில் சிறப்பு கட்டணம், நுழைவு கட்டணம் என பல கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகிறது. இதனை நிறுத்த வேண்டும். சிறை தண்டனையை ஏற்றுக்கொள்ள சஞ்சய் தத் தயாராக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.