DMK plan to make alliance with congress | காம்ரேடுகள் இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி: தி.மு.க., புது வியூகம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காம்ரேடுகள் இல்லை என்றால் காங்கிரசுடன் கூட்டணி: தி.மு.க., புது வியூகம்

Updated : ஏப் 01, 2013 | Added : மார் 30, 2013 | கருத்துகள் (108)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
DMK plan to make alliance with congress

லோக்சபா தேர்தலுக்கு, "மெகா' கூட்டணி அமைக்கும் வகையில், தே.மு.தி.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகளை இழுக்க, தி.மு.க., தரப்பு விரும்புகிறது.
நிபந்தனை: ஆனால், தே.மு.தி.க.,வை தவிர மற்ற கட்சிகள், அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெறுமானால், கடைசி கட்டத்தில், ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட நிபந்தனைகளுடன், காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., புது வியூகம் அமைக்க திட்டமிட்டுள்ளது. ஐ.மு., கூட்டணியிலிருந்து தி.மு.க., வெளியேறியதால், மத்திய அரசு கவிழும், முன் கூட்டியே தேர்தல் வரும் என்ற யூகங்கள் டில்லி அரசியல் வானில் நிலவுகின்றன. சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆதரவில், தற்போது மத்திய அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருப்பினும், மத்திய அரசு தற்போது முலாயம் சிங் கைப்பிடியில் இயங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியை முலாயம் சிங் கடுமையாக விமர்சிப்பதால், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ள பார்லிமென்ட் கூட்டத் தொடரின் போது, மத்திய அரசை கவிழ்க்கும் செயலில் முலாயம் சிங் ஈடுபடுவார் என்ற சந்தேகம், காங்கிரசுக்கு உருவாகியுள்ளது.
கூட்டணி தீவிரம்: இதனால், மத்திய அரசுக்கு, எந்த நெருக்கடியும் ஏற்படாமல் இருக்க, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகிய இருவரின் ஆதரவை காங்கிரஸ் நாடி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில், ம.பி., டில்லி, சத்தீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மாநில சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் முன் கூட்டியே வருமா? என்ற கேள்வியும் உருவாகியிருப்பதால், தமிழக அரசியல் கட்சிகள், லோக்சபா தேர்தலுக்கான கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அமைச்சரவையிலிருந்து, தி.மு.க., வெளியேறியதில், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, டி.ஆர்.பாலு, அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் மற்றும் தி.மு.க., இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு விருப்பம் இல்லை. அதனால் தான், "காங்கிரஸ் கட்சியை கவிழ்க்க மாட்டோம்' என, தி.மு.க., செயற்குழுவில் பொதுச்செயலர் அன்பழகன் பேசினார். கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், "ஜெயலலிதா போன்ற ஒரு சிலரின் அபிலாஷையின் படி தி.மு.க., மத்திய அரசிலிருந்து தற்போது வெளியேறி விட்டது. இதனால் என்ன நடந்து விட்டது' என, கேள்வி எழுப்பியுள்ளார். கருணாநிதியின் திடீர் ஆதங்கத்தை பார்க்கும் போது, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் தொடரும் வாய்ப்பு இருப்பதாக, அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்திய அரசின் பல்வேறு கமிட்டிகளில், தி.மு.க.,வினர் உறுப்பினராக இருப்பதால், அவர்கள் யாரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவில்லை.

பங்கீடு: இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: இலங்கை தமிழர்கள் பிரச்சனையை மையப்படுத்தி, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தி.மு.க., விலகியது. காங்கிரஸ் வெளியேறினால் தான் தே.மு.தி.க.,வுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி பங்கீடு செய்ய முடியும் என்றும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., மற்றும் சிறிய கட்சிகளுடன் ஒருங்கிணைந்து, "மெகா' கூட்டணி அமைக்க முடியும் என, கருணாநிதி தரப்பு விரும்புகிறது. தே.மு.தி.க.,வை தவிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., ஆகிய கட்சிகள் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றால், கடைசி நேரத்தில் காங்கிரஸ் கட்சியை இழுத்துக் கொள்ளவும், கருணாநிதி தரப்பு திட்டமிட்டுள்ளது. கடைசி நேரத்தில், காங்கிரசுக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதி பங்கீடு வழங்கி, கொடுக்கிற தொகுதிகளை பெற்றுக் கொள்ள வைக்கும். இதன் எதிரொலியாகத்தான், தி.மு.க., செயற்குழுவில் அன்பழகன் பேசுகையில், "மதவாத சக்திகள் தலை தூக்காமல் இருப்பதற்காக, காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்கிறோம்' எனக் கூறி, கருணாநிதியின் மனசாட்சியை வெளிபடுத்தினார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


- நமது நிருபர் -


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Noordeen Thirikoodapuram - Riyadh,சவுதி அரேபியா
31-மார்-201319:31:13 IST Report Abuse
Noordeen Thirikoodapuram கொஞ்ச நாளைக்கு முன் தான் காங்கிரேசுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்றார....அரசியல்வாதி என்றால் முன்னுக்கு பின் முரணாக பேசுவதும் பொய் சொல்லுவதும் தான் என்பது சில அரசியலர்களின் இலக்கணமோ
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
31-மார்-201319:30:37 IST Report Abuse
Yoga Kannan முதலில் பூனை வெளியே வரட்டும் ...... அதன் பிறகு பூகம்பம் எந்த அளவுகளில் என்பதை கண்டறிவோம்... கூட்டணியின் பலமும் ,,,,,மக்களின் மன நிலையும் தான் வெற்றி வாய்ப்பை கண்டறியும் ..... இங்கே கூறுகின்ற கருத்துகள் விட முன்னோடியான கருத்து கணிப்பு எல்லாம் பொய்யாகி போன நேரங்கலலேல்லாம் உண்டு....அது போல தான் Facebook ....TWITTER ,,,,,, பதிவுகள் ,,,,
Rate this:
Share this comment
Cancel
Noordeen Thirikoodapuram - Riyadh,சவுதி அரேபியா
31-மார்-201319:27:51 IST Report Abuse
Noordeen Thirikoodapuram காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை என்றால், தி.மு.க.வுக்கு கௌரவ தோல்வி கிடைக்கும்......காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி போட்டால், டெப்பாசிட் காலி ஆவது நிச்சயம்.........கலைஞர் தன் காலம் முடிவதுக்குள், தி.மு.க.வை அதல பாதாளத்துக்குள் தள்ளி விடுவார்.....எந்த கட்சியால் வாழ்வு பெற்றாரோ, அந்த கட்சியையே சொந்த, குடும்ப நலனுக்காக அடகு வைக்க தயங்காத தன்னிகரில்லாத தானை தலைவர் கலைஞர்
Rate this:
Share this comment
Cancel
Rsvramkumar Kumar - doha,கத்தார்
31-மார்-201318:23:28 IST Report Abuse
Rsvramkumar Kumar ம. தி. மு.க உடன் எந்த கட்சி கூட்டணி வைக்கின்றதோ அக்கட்சி கணிசமான ஓட்டுகளை பெரும் என்பது சத்தியம் ஆகிவிட்டது என்பதே இதற்கு சான்று இருந்தாலும் அதிமுக [ம. தி. மு.க] வை கூட்டணி வைக்கவில்லை என்றல் நஷ்டம் அதிமுக சந்திக்க நேரிடும் என்பது உறுதி
Rate this:
Share this comment
Cancel
lalubab - Orissa,இந்தியா
31-மார்-201317:54:09 IST Report Abuse
lalubab என்னை பொறுத்த வரை காங்கிரசும் திமுகவும் இனைந்து போட்டியிட்டால் தான் நல்லது. இரண்டு கட்சிகளையும் ஒரு சேர ஒதுக்கிவிட மக்களுக்கு நல்ல வாய்ப்பு.
Rate this:
Share this comment
Cancel
elzhalan - belgium ,யுனைடெட் கிங்டம்
31-மார்-201317:48:03 IST Report Abuse
elzhalan இனிமேல் புதிதாக கட்சி தொடங்கும் அரசியல் வாதிகூட சட்று யோசிட்சிதான் முடிவெடுப்பார்கள் உங்களுடன் கூட்டணி வைக்க ..,.சும்மா கதைய உட்டு கிட்டு இருந்த தமிழர்கள் ஒன்னும் முட்டாள் இலை.....இப்பெல்லாம் ரொம்ப மக்கள் தெளிவா இருக்காங்க ......அத சொல்லி இத சொல்லி குட்டையை கொழப்ப முடியாது குட்டை எல்லாம் தெளிஞ்சிருச்சி உங்களைவிட புத்திசாலியா இருக்காங்க .............
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
31-மார்-201317:09:52 IST Report Abuse
Krish Sami பா ஜ க அணி , மூன்றாவது அணி. காங்கிரஸ் அணி - இந்த மூன்றில் ஒன்றுதானே வர முடியம்? யார் வந்தாலும் அவர்களுடன் தி மு க ஒட்டிக்கொள்ளலாம், ரெண்டு மூணு சீட்டு வெல்ல முடிஞ்சாலும் போதும். தி மு க இருக்கே அது சீட்டு கட்டுல இருக்கற ஜோக்கர் போல. எங்க வேண்டுமானாலும் சேர முடியும், டெல்லியில் இருந்துக்கொண்டு தமிழ் நாட்டுக்கு எல்லா இன்னல்களையும் தரவும் முடியும். தமிழ் நாட்டு மக்கள் தெளிவா இருக்கணும். ஒரு சீட்டு கூட தி மு க வுக்கு போய் விடக்கூடாது. போனா, டெல்லி தொந்தரவிலிருந்து தப்பவே முடியாது, அவ்வளவு கெட்டிக்காரர் கருணாநிதி. இவர்கள், யாருடன் சேர்ந்து வந்தாலும் 0/40 என்பதில் கவனமாக இருக்கணும். கவனம், கவனம், கவனம்.
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
31-மார்-201316:47:00 IST Report Abuse
K Sanckar ஆப்பை பிடுங்கிய குரங்கு போல ஆகி விட்டார் கருணாநிதி. அவசரப்பட்டு மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறி விட்டார். இப்போது வருத்தபடுகிறார். போலும். இலங்கை பிரச்னையும் தீராது. மத்திய அரசும் வெளி உறவு கொள்கையை விட்டு கொடுக்காது. போதாகுறைக்கு ஜெயலலிதா சட்ட சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி விட்டார். டெசோ மாநாட்டு தீர்மானம் புஸ்வாணமாக போய் விட்டது. வை கோ, வீர்மணி ஆகியோர் கூட ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள். மேலும் பாராட்டுகிறார்கள் . அழகிரி , டி ஆர் பாலு போன்றவர்கள் மத்திய அரசில் இருந்து வெளியேறிய முடிவை எதிர்கிறார்கள். எல்லாம் பதவி ஆசை தான். சி பி ஐ எப்போது மீண்டும் தாக்குமோ என்று அச்சம் வேறு. மறு நாளே ஸ்டாலின் வீட்டில் ரைடு என்றால் கனிமொழி வழக்கு என்ன ஆகுமோ தெரிய வில்லை. எல்லாம் மன உளச்சல். வந்து விட்டது. ஆகவே தான் தேர்தல் கூட்டணி என்று பிதற்ற ஆரம்பித்து விட்டார்.
Rate this:
Share this comment
Mohanadas Murugaiyan - Ras al Khaima,ஐக்கிய அரபு நாடுகள்
31-மார்-201319:37:44 IST Report Abuse
Mohanadas Murugaiyanதமிழக சட்டசபை தீர்மானம் தி.மு.க. உள்பட அனைவரின் ஆதரவோடுதான் நிறைவேற்றப்பட்டிருக்கிறது... ஆனால் தமிழ்நாட்டின் தீர்மானங்களுக்கு எல்லாம் மத்திய அரசு மதிப்பளிக்கவேண்டியதில்லை என்று மத்திய அமைச்சர் சொல்கிறார் ... அதன் கருத்துக்களை வலியுறுத்த மாநில அமைச்சர்கள் யாரையும் கூட டெல்லிக்கு அனுப்பவில்லை ஜெயலலிதா...... அவரை பொறுத்தவரை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் பிரச்சினை முடிந்துவிடும்.... தமிழக மக்கள் கேள்விகேட்க மாட்டார்கள்..... ஆனால் தி.மு.க. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை வெளிநாட்டு தூதுவர்களையும் ,ஐ.நா. அதிகாரிகளையும் சந்தித்து கொடுத்து இலங்கை மேல் நடவடிக்கை எடுக்க ஆதரவு கோரினார்கள்..... டெல்லியில் நடந்த டெசோ மாநாட்டில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேச தயாராக இருந்த தலைவர்களையும் சந்தித்து பேசி அவர்கள் கலந்துகொள்ளாமல் செய்தவர்கள் அ.தி.மு.க.வினர்.... அதனால்தான் பி.ஜே.பி.உள்பட பலரும் இலங்கையுடன் வெளியுறக் கொள்கையில் மாற்றம் செய்ய தேவையில்லை என்று இப்போது சொல்கிறார்கள்... இப்போது சொல்லுங்கள் உண்மையான அக்கறை யாருக்கு....??? துரோகம் செய்பவர்கள் யார்.....??? ...
Rate this:
Share this comment
Cancel
Bala Balasubramanian - Bangalore,இந்தியா
31-மார்-201315:37:08 IST Report Abuse
Bala Balasubramanian ஈழம், தமிழக தேர்தல்களில் இது வரை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது இல்லை. மாணவர்களின் போராட்டம், தி.மு.க. வுக்கு ஒரு தடுமாற்றத்தை தந்துள்ளது என்பதுதான் உண்மை. பதவியில் இருந்தவர்களில், எம்.ஜி.ஆர் க்கு பிறகு ஈழம் குறித்து உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவரும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
31-மார்-201315:11:45 IST Report Abuse
JALRA JAYRAMAN 40/40 அது தான் கலைஞரின் அரசியல் கணக்கு வெற்றி பெற வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை