Advertisement
தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனம் முடங்குமா? பொறுத்திருங்கள் என்கிறார் அரசு கேபிள் எம்.டி.,
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 ஏப்
2013
00:41
பதிவு செய்த நாள்
மார் 30,2013 23:16

தமிழக அரசின் கேபிள் "டிவி' நிறுவனம் இயங்குமா என்ற கேள்வி உருவாகியுள்ளது. கேபிள் "டிவி' மற்றும் கேபிள் ஒளிபரப்பு ஆகியவற்றை நடத்த, மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை என, மத்திய அரசு தெரிவித்த பின்னும், தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம் என, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் கூறுகிறது.

தமிழகத்தில் கேபிள், "டிவி' ஒளிபரப்பு ஒரு நபர் ஆதிக்கத்தை ஒழிக்க, 2007ல், அரசு கேபிள், "டிவி' நிறுவனம் துவங்கப்பட்டது. இதன் பின், நிறுவன செயல்பாடுகள் கிடப்பில் போடப்பட்டன. 2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அரசு கேபிள், "டிவி' நிறுவனத்துக்கு, அ.தி.மு.க., அரசு புத்துயிர் கொடுத்தது.



விண்ணப்பம்: தமிழகத்தில், "டிவி' ஒளிபரப்பு முழுவதையும், அரசு கேபிள் நிறுவன கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள, 61.50 லட்சம் இணைப்புகளை, அரசு கேபிள் "டிவி' நிறுவனம் பெற்றது. இந்நிலையில், நாட்டில் உள்ள நான்கு பெரிய நகரங்களின் ஒளிபரப்பை, மார்ச் 2012க்குள் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என, தொலை தொடர்புத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அரசு கேபிள் நிறுவனம், டிஜிட்டல் உரிமம் வேண்டி, தொலை தொடர்புத் துறைக்கு விண்ணப்பித்தது.



கிடப்பில்..: இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தொலை தொடர்புத் துறை, "டிவி' சேனல் நடத்துவது, ஒளிபரப்பை வழங்குவது ஆகிய கேபிள் தொழிலை, மத்திய, மாநில அரசுகளுக்கும், அதன் நிறுவனங்களுக்கும் வழங்கக் கூடாது என்ற, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) பரிந்துரையை சுட்டிக் காட்டி, விண்ணப்பத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டது. இதனால், சென்னை மாநகரில் டிஜிட்டல் மயமாவதில் பெரும் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் மயமாக்குவதன் அடுத்த கட்டமாக, கோவை மாநகரில், கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குவதும் முடங்கியுள்ளது. தொலை தொடர்புத் துறை, டிஜிட்டல் உரிமம் வழங்காததை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அளித்த பதில் மனுவில், "டிராய் பரிந்துரைப்படி, அரசு நிறுவனங்களுக்கு, "டிவி' சேனல் நடத்துவது, ஒளிபரப்பை வழங்குவது ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க முடியாது. ஆந்திரா, மேற்கு வங்கம், பஞ்சாப் மாநிலங்கள் கேபிள் ஒளிபரப்புக்கு அனுமதி கோரியது நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனத்துக்கு உரிமம் வழங்க முடியாது' எனக் கூறியுள்ளார். இந்நிலையில், அரசு கேபிள் "டிவி' நிறுவனத்தின் ஒளிபரப்பு முடங்கும் நிலை உருவாகியுள்ளது.



இதுகுறித்து, அரசு கேபிள் "டிவி' நிறுவன நிர்வாக இயக்குனர், விவேகானந்தன் கூறியதாவது:



தீர்ப்பு வரட்டும்: டிஜிட்டல் உரிமம் கோரும் விண்ணப்பத்தின் மீது, தொலை தொடர்புத் துறை முடிவெடுக்காமல் உள்ளது. டிராய் பரிந்துரைகள் 2008ல் தான் வழங்கப்பட்டன. அதற்கு முன், தமிழக அரசு கேபிள் "டிவி' நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. பிற, மாநிலங்களின் அனுமதி கோரும் விண்ணப்பங்களை நிராகரித்து விட்டோம் என கூறும் மத்திய அரசு, தமிழகத்தின் விண்ணப்பத்தை ஏன் நிராகரிக்காமல் உள்ளது. எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கிறோம். அரசு கேபிள் "டிவி' நிறுவனம் இயங்கும்; ஒளிபரப்பை தொடரும். இவ்வாறு, விவேகானந்தன் கூறினார்.



ஈகோ வேண்டாம்: அரசு கேபிள் நிறுவனத்தின், தேவையற்ற "ஈகோ'வால், ஆபரேட்டர்கள் தான் பாதிக்கின்றனர் என, தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, குற்றம் சாட்டுகிறது. இதுகுறித்து, கூட்டமைப்பின் செயலர், நாகர்கோவில் ஆறுமுகம் கூறியதாவது: தமிழகத்தில், கேபிள் தொழில் தனியார் ஆதிக்கத்தை ஒழிக்க, அரசு கேபிள் நிறுவனம் உதவியாக இருக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், அரசு கேபிள் நிறுவனத்துக்கு, ஒளிபரப்பை வழங்கக் கூட, சட்டத்தில் இடமில்லை என்றாகிவிட்டது. இந்நிலையில், கேபிள் ஆபரேட்டர்கள் தனித்து இயங்க, அரசு கேபிள் நிறுவனம் உதவியாக இருக்க வேண்டும் என, தமிழக முதல்வருக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்களால், ஆபரேட்டர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாகத் தான், கேபிள் ஆபரேட்டர்கள், கூட்டுறவு முறையில் இணைந்து, டிஜிட்டல் ஒளிபரப்பை சென்னையில் துவங்கியுள்ளனர். எனவே, ஆபரேட்டர்களுக்கு வழிவிட்டு, கேபிள் ஒளிபரப்பை தமிழகத்தில் சீரமைக்க, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஆறுமுகம் கூறினார்.



- நமது சிறப்பு நிருபர் -






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yezhai thamizhan - Rio,பிரேசில்
31-மார்-201319:20:09 IST Report Abuse
yezhai thamizhan சட்டம், ஒழுங்கு, நீதி, கட்டமைப்பு (infrastructure ) , அனைவருக்கும் சமமான வாய்ப்பு, மத்திய அரசு என்றால் வெளியுறவு, ராணுவம், முறையான தேர்தல் போன்றவையில் மட்டும் தான் கவனம் செலுத்தவேண்டும். இந்த கால கட்டத்தில் கேபிள் கம்பெனி, சாராயக்கடை, பேப்பர் கம்பெனி, போக்குவரத்து, போன்றவை அரசின் வேலை இல்லை. சாராய கடை தவிர அரசு கைவைத்த எந்த தொழிலாவது நஷ்டமில்லாமல் நடத்தப்படிருக்கிறதா?
Rate this:
2 members
1 members
1 members
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
31-மார்-201315:15:51 IST Report Abuse
MJA Mayuram அரசு கேபிள் டி.வீ கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்டவை அப்போதே அது சில நிர்வாக பிரச்சனைகளை எதிர்நோக்கியது...நிர்வாகத்திறன் கொண்ட கலைஞராலேயே அதை சரிப்ன்னுவதில் சிக்கல் என்றால் பாவம் எந்த திட்டமுமே போடாத இந்தம்மாவால் என்ன செய்ய முடியும் ?
Rate this:
5 members
0 members
9 members
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
31-மார்-201313:34:53 IST Report Abuse
மும்பை தமிழன் தமிழக அரசே முடங்கி தானே கிடக்கிறது இது என்ன பெரிய விஷயம்
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
Cancel
சத்தி.ம Saththi.M - ( Peace and Love to all) - பெங்களூரு,இந்தியா
31-மார்-201311:59:05 IST Report Abuse
சத்தி.ம  Saththi.M - ( Peace and Love to all) மாநிலஅரசு விசயத்தில் தலையிட முடியாது நு சுப்ரீம் கோர்ட்டு சொல்லுச்சே, அது இந்த விசயத்தில் பொருந்தாதா ?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
adithyan - chennai,இந்தியா
31-மார்-201310:21:00 IST Report Abuse
adithyan இதில் அரசு சட்டம் இயற்றப்பட்டுள்ளதா என்பது கேள்வி. நிர்வாகமுரையில் (administrative) கூறப்படும் முடிவுகள் செல்லாது. அது மட்டும் அல்லாது குறிப்பிட்ட சட்டம் இயற்றப்பட்ட நாள் முதல் தான் அமுலுக்கு வரும் அதற்க்கு முன் கொடுக்கப்பட்ட அனுமதிகளுக்கு இந்த சட்டம் செல்லாது. TRAI சொலும் முடிவுகள் செல்லாது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
31-மார்-201308:33:21 IST Report Abuse
Samy Chinnathambi என்னவோ பாத்து நல்லதா செய்யுங்கப்பா, உங்கள் தயவை தான் அனைத்து தாய் மார்களும் நம்பி இருக்கிறார்கள்...
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
31-மார்-201308:32:24 IST Report Abuse
g.s,rajan கூடா நட்பின் வேலைதான் இது ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
31-மார்-201306:25:39 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் அரசு சம்பந்தமே இல்லாமல் கடிகாரக் கம்பெனி நடத்துகிறது மொபட் கம்பெனி நடத்தியது டிராக்டர்,, செருப்புத் தொழிறசாலைகள் கூடத்தான் தனியார் ஏகபோகத்தைத் தடுக்க வங்கிகள் நடத்துகிறது ஆனால் அதே தனியார் ஏகபோகத்தைத் தடுக்க மக்களுக்கு சரியான தகவல் தொழில்நுட்பம் கிடைக்க கேபிள் டீவீ நடத்தக்கூடாதேன்பது என்ன நியாயம்? தூர்தர்ஷன் சானல்கள் தவிர DTH கூட நடத்துகிறதே அதுமட்டும் சரியா? எல்லாம் தனியாரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவர்கள் வாழ மத்திய காங்கிரஸ் +திமுக செய்யும் வேலை
Rate this:
4 members
0 members
18 members
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
31-மார்-201305:05:09 IST Report Abuse
Loganathan மாநில அரசுகள் ஒலிபரப்ப ட்ராய் அனுமதி கொடுக்க கூடாது என்பதற்கு சரியான காரணங்கள் தெரியவில்லை.அரசியல் நிர்பந்தங்கள் காரணங்களால் இருக்கலாம்.
Rate this:
3 members
0 members
9 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
31-மார்-201300:57:32 IST Report Abuse
Thangairaja இந்த ஈகோவால் தானே தமிழ்நாடே சீரழிந்து கொண்டிருக்கிறது.
Rate this:
4 members
0 members
10 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.