E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மோடியை சந்திக்க அமெரிக்க குழுவுக்கு லஞ்சம் தரப்பட்டதா? காங்கிரஸ் புகாரால் புதிய சர்ச்சை
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 ஏப்
2013
00:41
பதிவு செய்த நாள்
மார் 30,2013 23:17

ஆமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, சமீபத்தில், அமெரிக்க குழுவினர் சந்தித்துப் பேசினர். இந்த குழுவினர், இந்தியா வரவும், அவர்கள் மோடியை சந்தித்து புகழவும், லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க குடியரசு கட்சியைச் சேர்ந்த, இல்லினாய்ஸ் மாகாண எம்.பி., ஆரோன் ஷோக் தலைமையில், 18 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க குழு, இந்தியா வந்துள்ளது. அதில், வெளிநாடு வாழ் இந்தியர், ஷாலப் குமாருடன், பல எம்.பி.,க்களும், தொழிலதிபர்களும் வந்துள்ளனர்.



மோடிக்கு அழைப்பு: கடந்த வியாழக்கிழமை இந்த குழுவினர், குஜராத் முதல்வர், நரேந்திர மோடியை, காந்தி நகரில் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு வர்த்தகம், முதலீடு வாய்ப்பு போன்றவை குறித்து விரிவாக பேசப்பட்டது. அத்துடன், அமெரிக்காவுக்கு வரும்படி மோடியை, அக்குழுவினர் வரவேற்றனர். ஆனால், முதல்வர் மோடியை சந்தித்த, அமெரிக்க குழுவினருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர், அர்ஜுன் மோத்வாடியா குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது: அமெரிக்க குழுவினர் இந்தியா வந்து செல்ல, அவருக்கு 8.68 லட்சம் வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின்னரே, அவர்கள் அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ளனர்.



மன்னிப்பு கேட்க வேண்டும்: இது ஒரு மோசடி வேலை. இதற்கு பொறுப்பேற்று, முதல்வர் மோடி பதவி விலக வேண்டும்; மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அர்ஜுன் மோத்வாடியா கூறியுள்ளார்.



காங்கிரஸ் தகவல் தொடர்பாளர், ரஷீத் ஆல்வி கூறுகையில், ""மோடியை புகழ்ந்து பேசவும், அமெரிக்க குழுவினர், இந்தியாவுக்கு வருவதற்கான விசா பெறவும், லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது வெட்கக் கேடானது,'' என்றார்.




காங்கிரஸ் கட்சியினரின் இந்தக் குற்றச்சாட்டை, அமெரிக்காவை சேர்ந்த, வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான, பா.ஜ., பிரிவின் அமைப்பாளர், விஜய் ஜோலி மறுத்துள்ளார். "அமெரிக்க எம்.பி.,க்கள் குழுவினரும், வர்த்தக குழுவினரும் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து, இந்தியா சென்றுள்ளனர். இதில், முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை' என, கூறியுள்ளார்.



"பார்லி.,யில் ஒப்புதல்': அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்தவரும், இந்தியாவுக்கு விஜயம் செய்த அமெரிக்க குழுவுக்கு தலைமை வகிப்பவருமான, ஆரோன் ஷோக் கூறியதாவது: எங்கள் அமெரிக்க அரசில் உரிய நிர்வாகத்தினர் ஒப்புதல் அளித்த பின், குறிப்பாக, அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் தந்த பின்னரே, நாங்கள் இந்தியா வந்துள்ளோம்; முதல்வர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளோம். எங்களின் பயணம் குறித்து கேள்வி கேட்பது, அமெரிக்காவையே கேள்வி கேட்பது போன்றது. இவ்வாறு ஆரோன் ஷோக் கூறினார்.




தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (50)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
01-ஏப்-201300:11:02 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi இவர் பதவிக்காக எதையும் செய்யதுனிந்தவர்.எபது பல சந்தர்ப்பங்களில் அறிய முடியும்.லஞ்சம், ஊழல் இவற்றில் காங்கிரசும் பீ.ஜே பி யூம் ஒருவரை மிஞ்சி மற்றொருவர்.இதையும் தாண்டி இந்தியா முன்னேறுவது பல நல்ல சாதாரண மக்களால்தான் என்பதை புரிந்து அமைதியான பாதுகாப்பான வாழ்க்கைக்கு அனைவரும் பாடுபட வேண்டும்.இந்த இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்
Rate this:
8 members
0 members
8 members
Share this comment
Cancel
manu putthiran - chennai ,இந்தியா
31-மார்-201319:35:44 IST Report Abuse
manu putthiran தான் திருடி பிறரை நம்பால்-இந்த பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது...கேடுகெட்ட காங்கிரஸ்..இவனுங்கெல்லாம் மிக கேவலமான பிறப்புகள்...
Rate this:
4 members
0 members
21 members
Share this comment
Cancel
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
31-மார்-201318:46:35 IST Report Abuse
Nagarajan, Panagudi ஊழலில் ஊறிப்போன காங்கிரஸ் இதை சொல்லுவதற்கு தகுதியற்றது. இதன் மூலம் தெரிவது என்னவென்றல் காங்கிரஸ் இன் வற்புறுத்தலின் பேரிலேயே அமெரிக்க மோடிக்கு விசா வழங்குவதை தாமத படுத்துகிறது.
Rate this:
2 members
0 members
16 members
Share this comment
Cancel
Annanin Viluthugal - Male,மாலத்தீவு
31-மார்-201318:30:33 IST Report Abuse
Annanin Viluthugal இந்த பணம் சரியான முறையில் சென்றதா அல்லது ஹவாலா மூலமாக சென்றதா. சிபிஐ என்ன செய்து கொண்டு இருக்கிறது...
Rate this:
6 members
0 members
5 members
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
31-மார்-201318:11:50 IST Report Abuse
Ramasami Venkatesan திரு மோடி பி ஜே பி யின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் இந்திய பிரஜைகளின் ஒட்டுமொத்த ஆதரவு பெற்று அமோக வெற்றி அடைந்துவிட்டால் தாங்கள் அழிந்துவிடுவோம் என்ற பயமே - இப்படி அவர் பெயரை கெடுத்து ஜனங்களின் ஆதரவு பெற ஒரு சகுனி சூதாட்டம் குறுக்கு வழியில் ஆடுகிறார்கள் காங்கிரஸ் சாணக்கியர்கள். இது எடுபடாது மேலும் காங்கிரஸ் பலவீனமடைய ஏதுவாகிவிடும்.
Rate this:
7 members
0 members
41 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
31-மார்-201316:00:26 IST Report Abuse
Pannadai Pandian காங்கிரஸ் அகில இந்திய அரசியலிலும் திமுக தமிழக அரசியலிலும் எவ்வளவு கீழ்தர அரசியலும் செய்யும். அதன் அளவுக்கு இழுப்புத்தன்மை (ELASTICITY) அவர்களுக்கு உண்டு. இந்த குற்றச்சாட்டும் அவர்கள் எந்த அளவுக்கு கீழ்த்தரமானவர்கள் என்பதை காட்டுகிறது, வேறொன்றுமில்லை.
Rate this:
7 members
1 members
79 members
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
31-மார்-201313:17:00 IST Report Abuse
Sriram V Cangress lost the mental balance, Loksabha defeat in the next election is making them mad. So they are talking all this. They are be like road side party and not like national party of more than 100 years old
Rate this:
3 members
0 members
21 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31-மார்-201312:36:19 IST Report Abuse
kumaresan.m " இது போன்ற குற்ற சாற்றுகளை காங்கிரஸ் கட்சி கூறுவதற்கு தகுதி அற்றது ,ஏனெனில் பல ஊழல்கள் ,கொள்ளைகள், மற்றும் இந்தியாவில் வெளிநாட்டு வணிக வளாகம் அமைப்பதற்கு கொடுக்கப்பட்ட லஞ்சம் இன்னும் பல சொல்லிக்கொண்டே செல்லலாம் .....இது ஒரு அரசியல் காழ்புணர்ச்சியின் காரணம் என்று தோன்றுகிறது "
Rate this:
4 members
0 members
36 members
Share this comment
Cancel
E.V. SRENIVASAN - Muscat,ஓமன்
31-மார்-201312:28:19 IST Report Abuse
E.V. SRENIVASAN ஒரு வேளை இதனை கூறும் காங்கிரஸ் கட்சியினரை குறிப்பாக சோனியா காந்தியை சந்திப்பவர்கள் எல்லோரும் இப்படித்தான் ஏற்பாடு செஇயபடுகிரார்கலூ என்னவோ? அப்படியே எல்லோரும் நடந்த்கொள்வார்கள் என்று காங்கிரஸ் எண்ணுகிறதோ என்னவோ? மோடிக்கு அப்படி செய்யவேண்டிய தேர்வையே இல்லை. ஒரு பள்ளியில் பேச மோடியை அனுமதிக்க வில்லை எனபோழுது, அதே பள்ளியில் பேச இருந்த அத்தனை பெரும் தங்கள் உரையார்ருவதனை வாபஸ் வாங்கிய பொழுதே காங்கிரஸ் கட்சிக்கு இது தெறிந்திருக்க வேண்டும். என்ன செய்வது, காங்கிரசில் திரு பென்னி பிரசாடும் திரு திக் விஜய சிங்குமே பெரும் தலைவர்கள் என்று இருக்கும் பொழுது இதனை எதிர்பார்க்க முடியுமா?
Rate this:
4 members
0 members
67 members
Share this comment
Cancel
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
31-மார்-201311:03:21 IST Report Abuse
S Rama(samy)murthy என் தாய் நாட்டிற்கு எந்த அளவிற்கு துரோகம் செய்ய வேண்டுமோ அந்த அளவு இந்த காங்கிரஸ் செய்து விட்டது . இந்த கர்மபூமி அவர்களை தண்டிக்கும் .சுப ராம அம்பலம் காரைக்குடி
Rate this:
86 members
0 members
159 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.