E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு தேர்வுத்துறை திணறல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 ஏப்
2013
00:40
பதிவு செய்த நாள்
மார் 30,2013 23:21

சென்னை: தேர்வுத் துறையையும், இதனோடு சம்பந்தப்பட்ட அரசு தகவல் தொகுப்பு விவர மையத்தையும் (டேட்டா சென்டர்) வலுப்படுத்த, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு துறை வட்டாரங்களும் எதிர்பார்க்கின்றன. இல்லை எனில், வரும் ஆண்டுகளில், இந்த இரு துறைகளிலும், பெரிய குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டுவிடும் என, துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்வுத்துறை இயக்குனரகம், 1975ல் ஏற்படுத்தப்பட்டபோது, எத்தனை பணியிடங்கள் ஒதுக்கப்பட்டதோ, அதே பணியிடங்கள் தான், இன்றைக்கும் இருக்கின்றன. இயக்குனரகம் மற்றும் மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் சேர்த்து, ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 500. இதில், 120 பணியிடங்கள், காலியாக இருக்கின்றன. கடந்த 98ல், பிளஸ் 2 தேர்வை, 3.63 லட்சம் மாணவர்களும், 10ம் வகுப்பு தேர்வை, ஐந்து லட்சம் பேரும் எழுதினர். ஆனால், நடப்பு ஆண்டில், பிளஸ் 2 தேர்வை, 8.5 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். பிளஸ் 2 மாணவர் எண்ணிக்கை, மூன்று மடங்கும், 10ம் வகுப்பு மாணவர் எண்ணிக்கை, இரு மடங்கையும் தாண்டிவிட்டது. மேலும், ஆசிரியர் பயிற்சி தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, எட்டாம் வகுப்பு தனித்தேர்வு என, ஆண்டுக்கு, 20க்கும் மேற்பட்ட தேர்வுகளை, தேர்வுத்துறை நடத்தி வருகிறது. அனைத்து தேர்வுப் பணிகளும், ஆண்டு முழுவதும் அடுத்தடுத்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு ஏற்ப, துறையை வலுப்படுத்தவோ, காலி இடங்களை நிரப்பவோ, கூடுதலாக புதிய பணியிடங்களை ஏற்படுத்தவோ, தேர்வுத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, துறை அலுவலர்களின் குற்றச்சாட்டு. கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ச்சியாக ஏற்படும் குளறுபடிகள் காரணமாக, தேர்வுத்துறை திணறி வருவதாகவும், அவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 28ம் தேதி நடந்த 10ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், ஐந்து மதிப்பெண்களுக்கு உரிய விடைகளை நிரப்ப தேவையான வங்கி செலானை, மாணவர்களுக்கு வழங்காதது, இதுவரை நடந்த குளறுபடிகளில், உச்சகட்டமாக உள்ளது. கேள்வித்தாள் அச்சடிப்பது, வினியோகம் உள்ளிட்ட பணிகளை, வேறு யாரிடமும் ஒப்படைக்காமல், இயக்குனரே, நேரடியாக கவனிப்பதாக, துறை வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், ""தனக்கும் எதுவும் தெரியவில்லை; இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்,'' என, இயக்குனர் வசுந்தராதேவி கூறுவது, விந்தையாக உள்ளது. பரிதாபத்தில் டேட்டா சென்டர்: தேர்வுத்துறை நிலை இப்படி என்றால், இந்த துறையோடு சம்பந்தப்பட்ட, டேட்டா சென்டரின் நிலைமை, இன்னும் மோசமாக உள்ளது. இந்த மையம், நிதித்துறையின் கீழ் இருக்கிறது. ஆனால், கல்வித்துறை பணிகளை செய்து வருகிறது. "தம் துறை பணிகள் நடக்காதபோது, நாம் ஏன் கண்டுகொள்ள வேண்டும்' என்ற மன நிலையில், நிதித்துறையும், "பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படாதபோது, நாம் என்ன செய்ய முடியும்' என்ற நிலையில், கல்வித்துறையும் உள்ளன. இந்த பிரச்சனையை தீர்க்க, டேட்டா சென்டரை, பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டுவந்து, இந்த மையத்தை வலுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, துறை அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த மையத்தில், வெறும் ஏழு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் தான் உள்ளனர். 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலி. தகவல்களை தொகுத்து, மேற்பார்வையிடும் அதிகாரிகள் நிலையில், மூன்று பணியிடங்கள் காலி. இந்த பதவியில் கூட, ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்துள்ளனர். கம்ப்யூட்டர்களும், தொழில்நுட்பங்களும், மிக, மிக பழமையானவை என, துறை ஊழியர்கள் வேதனைப்படுகின்றனர். நடப்பு ஆண்டில், மதிப்பெண்களை தொகுக்கும் பணிக்காக, 70 பேரை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்துள்ளனர். ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு, ஒரு ரூபாய் என்ற வீதத்தில், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகையில், 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக, டேட்டா சென்டர் செலவழிக்க உள்ளது. மாணவர்களின் மதிப்பெண்களை தொகுக்கும் பணியில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்வது, நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமா என, தெரியவில்லை. டி.என்.பி.எஸ்.சி.,-டி.ஆர்.பி., போன்ற அமைப்புகள், விடைத்தாள்களை, "ஸ்கேன்' செய்து, நவீன முறையில், விடைத்தாள்களை மதிப்பீடு செய்து, மிக விரைவாக, தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றன. அதேபோன்ற தொழில்நுட்பத்தை, தேர்வுத்துறையிலும் புகுத்த வேண்டும் என, துறை அலுவலர்கள் வலியுறுத்துகின்றனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
31-மார்-201313:25:45 IST Report Abuse
naagai jagathratchagan ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு தேர்வுத்துறை திணறல்....இது என்ன திடீர்ன்னு ஏற்பட்ட பிரச்சனையா ....எதோ நேற்று காலை நிகழ்ந்த விபத்து போல உள்ளது ...அதுவும் தேர்வுகள் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தி முடிந்த நிலையிலும் 10ம் வகுப்பு இன்னும் சில தினங்களில் முடியும் தருவாயில் ...என்ன திடீர் ஞானோதயம் ... எதுவும் தெரியவில்லை இனிமேல் தான் விசாரிக்க வேண்டும்,'' என, இயக்குனர் வசுந்தராதேவி கூறுவது, விந்தையாக உள்ளது. தற்காலிக நியமனம் ...பொதுத்தேர்வு எழுதிய 12 மற்றும் 10 வகுப்பு மாணவர்களை ஆண்டவன் தான் காப்பாற்றவேண்டும் ...
Rate this:
0 members
0 members
26 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31-மார்-201313:09:33 IST Report Abuse
kumaresan.m " அரசு துறையில் பணி புரிவோர்களின் பொறுப்பு ,நேரம் தவறாமை ,விடுப்பு எடுப்பது , அடுத்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவை எட்டுதல் ,சிக்கனம் மற்றும் செலவீனங்களை குறைதல் ,,,,,இவைகள் ஒரு கிலோ எவ்வளவு என்று கேட்பார்கள் ???
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31-மார்-201313:04:01 IST Report Abuse
kumaresan.m " வருடத்தில் ஒருமுறை இரண்டு தேர்வுகள் ( 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ) மற்றுமே நடைபெறுகிறது ,தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஒரு முறை ஆக மொத்தம் மூன்று முறை ,இதனை செயல்படுத்த முடியவில்லை ,இதே பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்காமல் இந்துறையை தனியார் வசம் கொடுத்து பாருங்கள் ...ஒரு சில மாதங்களில் அதிவேக முன்னேற்றம் தெரியும் ....வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெறும் ...நிர்வாக திறமை வெளிப்படும் ...செலவுகள் மிச்சப்படும் ...அணைத்து அரசு இயந்திரம் எல்லாம் இப்படிதான் செயல்படும் ,இதில் தேர்வு துறை என்பது மட்டும் விதிவிலக்கா ?
Rate this:
0 members
0 members
25 members
Share this comment
Cancel
பாலமுருகன் - விருத்தாசலம்,இந்தியா
31-மார்-201311:17:07 IST Report Abuse
பாலமுருகன் அனைத்து அரசு துறைகளிலும் பற்றாகுறை உள்ளது. அதைவிட அரசு உழியரின் திறனை அளவிட எந்த நடைமுறையும் இல்லாத காரணத்தினால் குதிரையும் கழுதையும் ஒரே சம்பளம் பதவி உயர்வு பெற்று வருகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
31-மார்-201308:43:11 IST Report Abuse
g.s,rajan வேலை இல்ல வேலை இல்ல அப்படின்னு ஒரேடியா புலம்பறாங்க ஆனா அரசாங்க வேலை கிடைச்சா யாரும் ஒழுங்கா செய்ய மாட்டேங்குறாங்க ,ஏன் என்று புரியவில்லை ? ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
31-மார்-201308:26:26 IST Report Abuse
Samy Chinnathambi ஊழியர்களின் பற்றாகுறையால் திணறவில்லை, அரசின் நிர்வாக திறமையின்மையால் அனைத்து துறைகளும் திணறுகின்றன...
Rate this:
0 members
0 members
53 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
31-மார்-201301:03:25 IST Report Abuse
NavaMayam அரசு ஊழியர்கள் பற்றாகுறையால் திணறுகிறதா .... இல்லை அரசு உழியர்களின் , பணியில் பற்று குறைவால் திறனுகிறதா....
Rate this:
0 members
0 members
33 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
31-மார்-201300:51:27 IST Report Abuse
Thangairaja அப்போ ரெண்டு வருசத்தில் ரெண்டு லட்சம் பேர் தேர்வாகி எங்கே போனார்கள்........டாஸ்மாக்குக்கு மட்டும் தான் முன்னுரிமையா.......
Rate this:
1 members
0 members
25 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.