TN Government orders closure of Sterlite copper smelter | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது: காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு

Updated : ஏப் 01, 2013 | Added : மார் 30, 2013 | கருத்துகள் (35)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
TN Government orders closure of Sterlite copper smelter

தூத்துக்குடி: ரசாயனவாயு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பிரச்னையில், தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, காற்று மற்றும் நீரை மாசுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை, நேற்று மூடப்பட்டது.

தூத்துக்குடியிலிருந்து, 15 கி.மீ., தூரத்தில், மதுரை பை-பாஸ் ரோட்டில், "வேதாந்தா' என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உள்ளது. ஆஸ்திரேலியாவில் இருந்து, தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதை உருக்கி, தாமிர பிளேட்டுகள், அதைச்சார்ந்த பொருட்களாக மாற்றி, இங்கிருந்து, வெளியிடங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த, 1993ல், இந்த ஆலைக்கு, முதல்வராக இருந்த ஜெ., அடிக்கல் நாட்டினார். 1996ல், இங்கு, உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த ஆலை, 5,000 பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு, கந்தக அமிலம் உற்பத்தி உள்ளிட்ட பல பிளான்ட்டுகள் உள்ளன. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த ஆலையை மூடவேண்டும் என, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ மற்றும் போராட்டக் குழுவினர், 17 ஆண்டாக, தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். வைகோ, சமூக அமைப்புகள் தொடர்ந்த வழக்கில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாகக்கூறி, இந்த ஆலை இயங்க, 2010 செப்., 28ல், சென்னை ஐகோர்ட் தடை விதித்தது. அதை எதிர்த்து ஆலை நிர்வாகம், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதையேற்று, 2010 அக்., 18ல், ஐகோர்ட் உத்தரவிற்கு, இடைக்கால தடைவிதித்த சுப்ரீம் கோர்ட், ஆலை இயங்க அனுமதியளித்தது. 2012 நவ., 6ல், ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான அனுமதியை, சுப்ரீம் கோர்ட் நீடித்தது. இந்த ஆலையை மூடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், வைகோ தொடர்ந்த வழக்கில், விசாரணை முடிந்த நிலையில், ஏப்., 2ல், தீர்ப்பு கூறப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
திடீர் வாயு கசிவு: இதனிடையே, மார்ச் 23ம் தேதி அதிகாலை, இந்த ஆலையின், கந்தக அமில முதல் பிளான்ட், பழுது சரி செய்யப்பட்டு இயக்கப்பட்டபோது, அதிலிருந்து, கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்து காற்றில் கலந்தது. அந்த காற்றை சுவாசித்த, தூத்துக்குடி நகர், புறநகர் பொதுமக்கள் பலருக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல், இருமல் போன்ற உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இந்த ஆலையை மூட வேண்டுமென, பொதுமக்கள், கலெக்டர் ஆஷிஷ்குமாருக்கு மனு அனுப்பினர். கந்தக-டை-ஆக்சைடு வாயு கசிந்த, பிளான்டை ஏன் மூடக்கூடாது என, ஆர்.டி.ஓ., லதா, ஆலை நிர்வாகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆலையை ஆய்வு செய்த, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், உறுப்பினர் செயலர், விளக்கம்கேட்டு, தனியாக நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, வைகோ தலைமையில், போராட்டக் குழுவினர், மார்ச் 25ல், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடவும், மார்ச் 28ல், ஆலையை முற்றுகையிடவும் முயன்றனர். கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராடின. இதனிடையே, ஆலை தரப்பினர் தந்த விளக்கம் திருப்தி இல்லாததாலும், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, கந்தக-டை-ஆக்சைடு அதிகளவு கசிந்து, பொதுமக்களின் உடல்நலம் பாதித்து, காற்று, நீரை மாசுபடுத்தியதாக குற்றம் சாட்டிய, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கார்த்திகேயன், பொதுமக்களின் புகார், கலெக்டர் அறிக்கை அடிப்படையில், காற்று மாசு தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் சட்ட படி, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட, நேற்று முன்தினம் இரவு, ஆலை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அதன் நகல், கலெக்டர், மின் வாரியம், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பப்பட்டது. அதை ஏற்று, ஆலைக்கான மின் இணைப்பை, மின் வாரியத்தினர் துண்டித்தனர். கலெக்டர் உத்தரவுப்படி, நேற்று காலை, ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்ற ஆர்.டி.ஓ., லதா, தாசில்தார் ஆழ்வாரம்மாள், மாசு கட்டுப்பாடு வாரியத்தினர், ஆலையை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். அதன்படி, ஆலையிலுள்ள அனைத்து பிளான்ட்டுகளிலும், உற்பத்தி நிறுத்தப்பட்டு, அவை படிப்படியாக மூடப்பட்டன. தொழில்நுட்ப காரணங்களால், ஆலையை முற்றிலும் மூட, 30 மணி நேரத்திற்கும் மேலாகுமென, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொண்டாட்டம்: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு, வரவேற்பு தெரிவித்து, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், பொதுமக்கள், வியாபாரிகள், போராட்டக் குழுவினர், தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது, மக்களின், 17 ஆண்டு கால தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என, அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதனிடையே, மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், இந்த உத்தரவை எதிர்த்து, ஆலை தரப்பில், ஐகோர்ட்டில், ஓரிரு நாளில், மேல்முறையீடு செய்யப்படுமென, எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வருக்கு வைகோ பாராட்டு: "ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்துள்ளதற்கு, தமிழக முதல்வருக்கு பாராட்டுகள்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கூறினார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள, தாமிர உருக்கு ஆலையான, ஸ்டெர்லைட் ஆலையால், நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் ஆகியன நஞ்சாக மாறி வருகிறது. கடல்வாழ் உயிரினங்களும், விவசாய நிலமும் வெகுவாக பாதித்துள்ளது. எனவே, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என, 17 ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 23ம் தேதி, ஆலையிலிருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடி பகுதி மக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பல இடங்களில், மரம், செடி, கொடிகள் நிறம் மாறி கருகிப் போயின. இதையடுத்து, ஆலையை மூடக் கோரி, கடந்த மூன்று நாட்களாக, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் சரியான நடவடிக்கையை, முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ளதற்கு, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆலை மூடப்பட்டதால், தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தரவும், அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆலையை திறக்கக்கோரி மனு: மூடப்பட்ட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை, மீண்டும் திறக்க வேண்டுமென வலியுறுத்தி, அதன் பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் கோகுல் தாசிடம், மனு கொடுத்தனர். ஆலை மூடப்பட்டதால், தாங்கள் வேலையிழந்து, தங்களின் குடும்ப வாழ்வாதாரம், கடுமையாக பாதிக்கப்படுமென, அதில் குறிப்பிட்டுள்ளனர். அது போல, தொழிலதிபர்களின் கூட்டமைப்பும், இந்த ஆலையை திறக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
31-மார்-201319:00:58 IST Report Abuse
Nagarajan, Panagudi மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஒரு நல்ல முடிவை மிகவும் தாமதமாக தைரியமாக அரசு உதவியுடன் செயல்படுத்தியிருப்பது பாராட்டுதற்குரியது.இதைபோல்தமிழ்நாட்டில் கணிமவலத்தை கொள்ளை யடிக்கும் செங்கல் சூலைக்கு கட்டுப்பாடு விதித்தல் நன்றாக இருக்கும். குடிசை தொழில் என்ற பேரில் அமோகமாக நடைபெட்டு வரும் செங்கல் தொழில் லட்சத்தில் வருமானம் கண்டு குறைந்த லெவி யுடன் அரசை ஏமாற்றி கோடியில் புரளுகிறார்கள் செங்கல் தொழில் முதலாளிகள்.செங்கலை சூளைக்கு ஏற்றப்படும் நெருப்பு புகை மண்டலம் அருகில் உள்ள இயற்க்கை வளங்களை /விவசாய நிலங்களை மாசுபடுத்துகிறது.இவர்கள் மாதம் இரண்டு சூலைகளை ஏற்படுத்தி கொள்ளை லாபம் பார்கிறார்கள்.அனால் அரசுக்கு இவர்கள் கட்டும் லெவி மிகமிக குறைவு. இதனை கருத்தில் கொண்டு செங்கல் தொழிலுக்கு வரைமுறை ஏற்படுத்தினால் அரசுக்கு வருமானம் பெருகும்.
Rate this:
Share this comment
Cancel
Arun - sydney,ஆஸ்திரேலியா
31-மார்-201313:21:03 IST Report Abuse
Arun தொழில் சாலை நிர்வாகம் புதிய தொழில்நுப்பம் கொண்டு கசிவோ அல்லது கழிவை சரி செய்து நிர்வாகம் நடத்த தவறிவிட்டது. தொழிலாளர் ரத்தத்தை மட்டும் உறிஞ்சு, அவர்களின் நலனை பாதுகாப்பது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
MJA Mayuram - chennai,இந்தியா
31-மார்-201313:01:49 IST Report Abuse
MJA Mayuram வைகோ சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்கிறார்....அம்புடுத்தேன்
Rate this:
Share this comment
Cancel
kannan - Tuticorin,இந்தியா
31-மார்-201311:18:57 IST Report Abuse
kannan Good action .But at the same time, Very good time for politicians and higher government officials to get hefty amount as bribe in order to the factory again.The same story happened so many times in previous years .Naturally the company top management will appeal to high court and then they will assure that they will take corrective action.My question is why the government still allowing to expand the present copper plant to double the capacity and to become the biggest copper plant in single place in the world. Now they are putting power plant ( 2x 80MW ) for their present and future expansion plant. i also point out that Vedanta chairman Agarval is richest nri after Reliance ambani and he can do anything as he lkes. Another main thing i would like to inform the public that generally all major chemical plants are located on the sea shore (e.g. SPIC,TUTICORIN THERMAL POWER PLANT ,TAC,DCW,COASTAL ENERGEN ,TITANIUM ) Kannan ,Tuticorin.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
31-மார்-201310:32:08 IST Report Abuse
Pannadai Pandian இப்போதெல்லாம் தோனி மாதிரி நல்ல பார்ம்ல சிக்ஸர் மழையா பொழிகிறார் ஜெயா. இந்த ஸ்டெர்லைட் மூடுவிழா ஒரு விஷயத்தில் நல்லது இல்லை என்றாலும் மக்கள் மனதை கவருவதில் தொடர்ந்து முன்னேற்றம் காணுகிறார்.
Rate this:
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
01-ஏப்-201302:02:52 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேஇது போல டாஸ்மாக்கையும் மூடினா நல்லா இருக்கும்,...
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
31-மார்-201310:30:28 IST Report Abuse
Pannadai Pandian ஆலை மாசு கட்டுப்பாட்டு விஷயத்தில் பைல் ஆகி மூடப்பட்டது சரிதான். ஆனால் வேலை இழந்த ஆயிரக்கணக்கானோர் என்ன செய்வர் ??? அரசு அவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகள் தருமா ???
Rate this:
Share this comment
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-மார்-201318:15:46 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் வேலை போனால் வேறு வேலை தேட இயலும்..உயிரே போனால் வேறு உயிர் கிடைக்குமா?...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
31-மார்-201309:24:38 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் நான் திரு.வைகோ அவர்களின் பல கருத்துக்களுக்கு எதிரானவன் என்றாலும் மாசை அள்ளித்தெளித்து உயிரை காவு வாங்க துடித்த கொடிய sterlite ஆலையை மூடக்கோரி போராடியதை மனதார வரவேற்கிறேன்...அவர் இவ்விஷயத்தில் காட்டிய அக்கறை போன்ற வேறு எந்த அரசியல் வாதியும் காட்டவில்லை என்று கூறினால் அது மிகை ஆகாது..
Rate this:
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
31-மார்-201308:08:47 IST Report Abuse
sundararaman மிக நீண்ட போராட்டத்தின் முழு வெற்றிக்கு சொந்தக்காரர் திரு.வைகோவும் அவரது ஆதரவாளர்களும்தான். உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார். திராவிட பாரம்பரியத்தில் வந்தாலும் தி.மு.க.தலைவர்களை போல குடும்ப நலனுக்காக பொதுநலனை அடகு வைக்காமல், பொதுநலனுக்காக தமது அரசியல் எதிர்காலத்தையே பாழாக்கிக் கொண்டவர் வைகோ. அவருக்கு எமது பாராட்டுக்கள். இப்போதாவது தமிழக அரசு விழித்துக்கொண்டதே.
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
31-மார்-201316:56:22 IST Report Abuse
சு கனகராஜ் திமுகவினர தமது குடும்பத்துக்கு ஒரு பாதிப்பு என்றால் கவர்னரை நேரில் சந்திக்கவும் ஜனாதிபதியிடம் மனு கொடுக்கவும் பிரதமர் வீடு வாசலில் காத்து கிடக்கவும் தயங்க மாட்டார்கள் ஆனா வைகோ அவர்கள் தன்னலமற்ற அரசியல்வாதியாக மிளிர்கிறார் வரும் பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு உரிய அங்கிகாரத்தை தமிழக மக்கள் மீண்டும் வழங்க வேண்டும் இது நடு நில்யானவர்களின் கருத்தாகும் ...
Rate this:
Share this comment
Cancel
smeyyappan - Rajapalayam,இந்தியா
31-மார்-201307:03:00 IST Report Abuse
smeyyappan congrats to VAIKO. Meyyappan
Rate this:
Share this comment
Cancel
Loganathan - Madurai,இந்தியா
31-மார்-201305:31:05 IST Report Abuse
Loganathan தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் மிக குறைவு.சில காரணங்களால் மூட படுகின்றன.வேலை வாய்ப்புக்கு பிற மாநிலங்கள் குறிப்பாக குஜராத்துக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
Rate this:
Share this comment
Alagu Muthu - Tutico,இந்தியா
31-மார்-201310:04:34 IST Report Abuse
Alagu Muthuஅங்கு வேலை பார்பவர்கள் பலபேர் வடமாநிலத்தவர் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை