E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விடைத்தாள் சேதம் விவகாரத்தில் மறுதேர்வு கிடையாது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 ஏப்
2013
00:39
பதிவு செய்த நாள்
மார் 30,2013 23:33

சென்னை: ""விருத்தாசலத்தில், 10ம் வகுப்பு விடைத்தாள்கள் சேதம் அடைந்த விவகாரத்தில், மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. தமிழ் முதற்தாளில், மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, கடந்த 29ம் தேதி, தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. கடலூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவ, மாணவியரின் விடைத்தாள்கள், பி.முட்லூர் தபால் நிலையம் மூலமாக, திருச்சி மாவட்டத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. பார்சல் செய்யப்பட்ட விடைத்தாள் கட்டுகள், விருத்தாசலத்தில் ரயிலில் ஏற்றப்பட்டது. ரயில் புறப்பட்ட சிறிதுநேரத்தில், ஒரு விடைத்தாள் கட்டு, கீழே விழுந்ததில், பல விடைத்தாள்கள் சேதம் அடைந்தன. இந்த விவகாரம், ரயில் திருச்சி சென்றபின், தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக, தேர்வுத்துறை, தீவிர விசாரணை நடத்தி வருகிறது. சேதம் அடைந்த விடைத்தாள்களை, ரயில்வே ஊழியர்கள், தீ வைத்து எரித்த சம்பவம், கல்வித்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


இயக்குனர் அறிவிப்பு: இந்த பிரச்சனையில், தேர்வுத்துறையின் முடிவு குறித்து, இயக்குனர் வசுந்தராதேவி கூறியதாவது: சம்பந்தப்பட்ட பார்சலில் இருந்த விடைத்தாள்கள், சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அதில், எத்தனை விடைத்தாள்கள் சேதம் அடைந்தன என்பது குறித்து, ஆய்வு செய்து வருகிறோம். சேதம் அடைந்த விடைத்தாள்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு, மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது. சம்பந்தப்பட்ட மாணவர்கள், தமிழ் முதற்தாளில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ, அதே மதிப்பெண், இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும். முதல் தாளில், 100க்கு, 90 மதிப்பெண்கள் பெற்றிருந்தால், இதே மதிப்பெண், இரண்டாம் தாளுக்கும் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட மாணவர்கள், முதல் தாளில், தோல்வி அடைந்திருந்தால், இரண்டாம் தாளில், தேர்ச்சிக்குரிய மதிப்பெண்கள் வழங்கப்படும். இதற்கு முன் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் யாருக்கும் பாதிப்பு வராது. இவ்வாறு இயக்குனர் கூறினார்.


சேதம் அடைந்த விடைத்தாள் பார்சலில், 357 விடைத்தாள்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதில், 200 விடைத்தாள்கள் மட்டுமே, சேதம் இல்லாமல் தப்பி உள்ளன. மீதமுள்ள 157 விடைத்தாள்கள் கடுமையாக சேதம் அடைந்தும், அதில், பல விடைத்தாள் துண்டுகளை, ரயில்வே ஊழியர்கள் தீயிட்டு கொளுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே, 157 மாணவர்களும், தமிழ் முதற்தாளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறார்களோ, அதே மதிப்பெண், தமிழ் இரண்டாம் தாளுக்கு வழங்கப்படும்.




விசாரணை: விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி இயக்க இணை இயக்குனர் சசிகலா நேற்று விசாரணை நடத்தினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ், ஆர்.டி.ஓ., ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள் விருத்தாசலம் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் விசாரித்தனர். சேதமான விடைத்தாள்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ்.ஏ.,) இணை இயக்குனர் சசிகலா, விடைத்தாள்கள் சேதமடைந்தது தொடர்பாக, விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நேற்று விசாரணை செய்தார்.


இதற்கு முன் நடந்த சம்பவம்: கடந்த, 2008ம் ஆண்டு, ஏப்ரல் 24ம் தேதி இரவு, வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த, விடைத்தாள் திருத்தும் மையத்தில், திடீரென தீ பிடித்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த, 10ம் வகுப்பு தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட, பல்வேறு பாடங்களின், 50 ஆயிரத்து 20 விடைத்தாள்கள், தீயில் எரிந்து சாம்பலாயின. தேர்வுத்துறை அதிகாரிகள், நேரில் சென்று விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை அளித்தனர். எரிந்த விடைத்தாள்கள் அனைத்தும், விழுப்புரம் மாவட்ட மாணவர்களுடையது என்பது, விசாரணையில் தெரிந்தது.

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக, அவர்கள், அரையாண்டு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. ஒருதாள் கொண்ட தேர்வு எனில், அரையாண்டு தேர்வை அடிப்படையாக கொண்டு, மதிப்பெண் வழங்கப்படுகின்றன. இரு தாள் கொண்ட தேர்வுகள் எனில், ஒரு தாளில் பெற்ற மதிப்பெண், பாதிக்கப்பட்ட மற்றொரு தேர்வுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழ் முதற்தாளில் பெறும் மதிப்பெண்கள், இரண்டாம் தாளுக்கு வழங்கப்பட உள்ளது.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
04-ஏப்-201321:22:09 IST Report Abuse
R Bala Sundaram எந்த துறை யாரிடம் இருந்தாலும் நிர்வாகத்தை சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டிய நடத்தும் பொறுப்பு அந்த நிர்வாகத்தின் மேலாளிரிடம் உள்ளது . இதிலிருந்து எந்த துறையிலும் வேலை செய்பவர்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பது நன்கு தெரிகிறது,அதனால்தான் இந்த தவறு நடந்தது . இவர்களுக்கு பணம் ஒன்றுதான் முக்கியம். அதிகபடியான பணம் (லஞ்சம்) கொடுத்தால் நன்றாக வேலை செய்வார்கள் ,பொறுப்பு நம் நாட்டை ஆளுபவர்களுக்கும் இல்லை ,அதிகாரிகளுக்கும் இல்லை ,மக்களுக்கும் இல்லை ,ஏனென்றால் வேலை செய்து சாப்பிட்ட மக்களை (அரசியல் லாபத்திற்காக). உட்காரவைத்து எல்லாம் இலவசனாக கொடுத்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி பொறுப்பு வரும் .எல்லாவற்றையும் அனுபவிக்கவேண்டியதுதான்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Mynuddeen Ibrahim - Madurai,இந்தியா
31-மார்-201315:29:26 IST Report Abuse
Mynuddeen Ibrahim மாணவர்கள் முதல் தாள் எழுதியதைவிட நன்றாக இரண்டாம் தாள் எழுதியிருக்கலாம் . அப்ப்டியிருக்கும்பொழுது ஒரே மதிப்பெண் வழங் குவது எப்படி நியாயமாகும் ?? அதுபோக இரண்டாம் தாளில் வங்கிபடிவ கேள்விக்கு முழுதாக 5 மதிப்பெண் வழங்கப்பட உள்ளது ?? இதை எப்படி கண்டு பிடிப்பது?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Alamelu Krishnan - chennai,இந்தியா
31-மார்-201310:54:18 IST Report Abuse
Alamelu Krishnan மாணவன் முதல் டாள் எழுதியதைவிட நன்றாக இரண்டாம் தாள் எழுதியிருக்கலாம் . அப்ப்டியிருக்கும்பொழுது ஒரே மதிப்பெண் வழங் குவது எப்படி நியாயமாகும் .ஒரு மொழி ஆசிரியை என்ற முறையில் கேட்கிறேன்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
31-மார்-201310:50:33 IST Report Abuse
pattikkaattaan இந்த தவறுக்கு காரணமான ரயில்வே ஊழியர்களின்மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்படிருக்கிறது என்று தெரியவில்லை குறிப்பிட்ட பார்சல்கள் வைக்கப்படிருந்த பெட்டியை ஒழுங்காக மூடி பூட்டியிருந்தால் எப்படி விடைத்தாள் மூட்டைகள் வெளியே விழுந்திருக்கும் ?... தவறுக்கு முழு காரணமும் ரயில்வே RMS ஊழியர்களே ... இதில் கல்வித்துறை ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரைப்படி செயல்பட்டுள்ளார்கள் ... இனி வரும் காலங்களில் ரயில்வே நிர்வாகம் விடைத்தாள்களை பொறுப்புடன் கையாளவேண்டும் ... தவறு செய்த ஊழியர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ... மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடாதீர்கள் ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
31-மார்-201310:27:29 IST Report Abuse
kumaresan.m என்ன ஒரு அலட்சியம்??? ,மிகவும் கண்டிக்கத்தக்க செயல் ,மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மத்திய மற்றும் மாநில அரசு துறை ஊழியர்கள் மற்றும் ஆசியர்களின் ,தேர்வு துறை அதிகாரிகளின் செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது .....இது போன்று மெத்தனமாக பதில் சொல்லும் தேர்வு துறை ஆணையரின் மேல் வழக்கு போடவேண்டும் ....விசாரணையின் முடிவு என்ன என்று தெரியவில்லை ? தவறுசெய்தவர்களுக்கு தண்டனை என்ன என்பது ஒன்றும் இல்லை ? இது தான் அரசு துறையில் வேலைசெய்வர்களின் லட்சணம் ??? குறிப்பாக முதல் தாள் கடினமாகவும் ,இரண்டாம் தாள் சுலபமாகவும் இருந்திருக்க வாய்புள்ளது ,,,இதனை வைத்து எப்படி மதிப்பெண் தீர்மானிக்க முடியும் ???
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
karthi - banglore,இந்தியா
31-மார்-201309:27:02 IST Report Abuse
karthi நான் லாம் அரையாண்டு தேர்வு ல 70 தான் வாங்குனேன். அப்புறம் நல்ல படிச்சு public la 95 வாங்குனேன். அப்படிப்பட்ட மாணவர்கல் பாவம்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
31-மார்-201300:45:53 IST Report Abuse
Hasan Abdullah இதே போல் முடிந்த 12ம் வகுப்பு விடைத்தாள்கள் நாகர்கோயில் ரயில் நிலையத்தில் விழுந்து கிடந்தது, இப்போது 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் விருத்தாச்சலத்தில் ஓடையில் கிடக்கிறது, இதை அரசு தேர்வுதுறையின் வீழ்ச்சி என்று சொல்லாமல் பின் இதையெப்படி சொல்ல்வது. கல்வி துறை கவனமில்லாமல் செயல்படுகிறது என்று தானே அர்த்தம். இந்த ஆட்சி எல்ல துறைகளிலும் தோல்வி அடைந்து வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இதே ரயில்வே-இன் RMS மூலம் தினமும் எத்தனயோ லட்ச கடித போக்குவரத்து நடக்கிறது, அவற்றில் எல்லாம் இந்த மாதிரி தவறுகள் நடப்பதில்லை, ஆனால் மிக முக்கியமாக பாதுகாக்கப்படவேண்டிய விடைத்தாள்கள் அலட்சியபோக்குடன் கையாளப்பட்டுள்ளது என்றால், அது அரசின் தோல்வி. அல்லது ஆளுங்கட்சியில் உள்ள சில விஷ கிருமிகள் தங்களது வேண்டப்பட்ட மாணவர்கள் பலன் அடைய இது போன்று செய்வது போன்று தெரிகிறது.
Rate this:
17 members
0 members
92 members
Share this comment
மாயவரத்தான்.... - பேங்காக்,தாய்லாந்து
31-மார்-201305:07:21 IST Report Abuse
மாயவரத்தான்....விஞ்ஞானி கருத்து சொல்லிட்டாரு. ரயில்வே துறையும் மாநில அரசிடம் தான் இருக்கு. அதனால் தோல்வின்னு சொல்லாம விட்டாரே. இதே பரிட்சைப் பேப்பர்கள் இன்னும் லட்சக்கணக்கில் பாதிப்படையாமல் இருக்கிறதே. அதற்கு என்ன சொல்வீர்? 2008-ல் தீப்பிடித்து எரிந்ததற்கும் இந்த ஆட்சி தான் காரணமா? ரயில்வே தபால்கள் குப்பை போல் குவிந்து கிடந்து போஸ்ட் மேன் எல்லாம் மாட்டும் காட்சிகள் அவ்வப்போது நாளிதழ்களில் வெளி வந்து கொண்டு தான் இருக்கின்றன. எனக்கென்னவோ உலகம் முழுதும் குண்டு வைக்கும் கும்பல் தான் இந்த சதிச் செயலுக்கும் காரணமாக இருந்திருக்கும் என்று சொல்வது எப்படி அபத்தமோ அதை விட படு அபத்தம் ஆளுங்கட்சி விஷக்கிருமிகள் என்று புலம்புவது...
Rate this:
8 members
2 members
17 members
Share this comment
Narayanan - chennai,இந்தியா
31-மார்-201314:04:39 IST Report Abuse
Narayananநீங்கள் சொல்வது முற்றிலும் சரி யாரோ. செய்த தவறுக்கு அரசை குறை சொல்வதை தவிர்க்கவும் ...
Rate this:
8 members
2 members
17 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.