Professor polish for chappells to collect money for education | அனாதை குழந்தைகளின் கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர் | Dinamalar
Advertisement
அனாதை குழந்தைகளின் கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திருச்சி:அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டுநன்கொடை சேகரிக்கிறார்.

சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார், 32. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், 3, என்ற மகனும் உள்ளனர்.திருச்சிக்கு வந்த அவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், அமெரிக்கன் மருத்துவமனை, ரயில்வே ஜங்ஷன் ஆகிய இடங்களில் அமர்ந்து, பொதுமக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டார்.

சபாரி உடை அணிந்து பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்ட அவர், "நான் உங்கள் செருப்புகளை துடைக்கிறேன். நீங்கள் ஏழை குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள்' என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்திருந்தார்.

குழந்தைகளின் கல்வி கண் திறக்க நிதிசேகரிப்பது பற்றி அவர் கூறியதாவது:சிறுவயதிலிருந்தே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், என்ற எண்ணம் எனக்கு உண்டு. சென்னை லயோலா கல்லூரியில், பி.ஏ., தமிழ் படித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதற்காக, பகுதி நேரமாக வேலைகள் பார்த்தேன்.கேட்டரிங் முதல், கவுரவ ஆசிரியர் பணி என, இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை பகுதி நேரமாக செய்து, மூன்று சக்கரசைக்கிள், செயற்கை கால் போன்றவற்றை வாங்கி, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்கினேன்.
கடந்த, 1998 முதல், 2004ம் ஆண்டு வரை, மாற்றுத்திறனாளிக்கான சேவை செய்தேன். அப்போது, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும், சிறப்பான கல்வி கொடுக்க வேண்டும், என்ற எண்ணம்மேலோங்கியது.

அதையடுத்து, பாடியநல்லூர் மருதுபாண்டியர் நகரிலிருந்த என் தந்தையின் நிலத்தில், கருணைக்கரங்கள் மற்றும் பள்ளியை துவக்கினேன். தற்போது, ப்ரீ கேஜி முதல், ஐந்தாவது வகுப்பு வரை, 170 ஆதரவற்ற, அனாதை குழந்தைகள்படிக்கின்றனர். பள்ளியில் பணிபுரியும், எட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புச் செலவு என, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் வரைசெலவாகிறது.நன்கொடை என்று பிரபலங்களிடம் கையேந்துவதை விட, பொதுமக்களின் பங்களிப்பை பயன்படுத்த வேண்டும், என்று நினைக்கிறேன்.அதனால் தான், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமர்ந்து, அவர்களின் ஷூ, செருப்புகளை பாலிஷ் செய்து, நன்கொடை வசூலிக்கிறேன். பாலிஷ் செய்வதற்கு, பொதுமக்கள் கொடுப்பதை வாங்கிகொள்கிறேன்.இவ்வாறு, அவர்கூறினார்.

அவருடைய உதவும் எண்ணத்துக்கும், உறுதுணையாக இருக்க நினைப்பவர்கள், 98848 69566 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-ஏப்-201305:43:22 IST Report Abuse
பெருவை பார்த்தசாரதி செல்வக்குமாரின் சேவைக்குத் தேவையான செல்வம் கொழிக்கட்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
03-ஏப்-201309:37:53 IST Report Abuse
p.manimaran வாழ்த்துக்கள் செல்வகுமார். உங்கள் பனி சிறக்க வேண்டும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Mugilan - Singapore,சிங்கப்பூர்
02-ஏப்-201314:59:59 IST Report Abuse
Mugilan நன்றி தினமலர் அவருடைய போன் நம்பர் கொடுத்ததற்கு. அவருடன் பேச முடிந்தது, மேலும் அவருக்கு உதவ வாய்பளிததர்க்கும் நன்றி
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
01-ஏப்-201310:36:20 IST Report Abuse
Divaharan இவர் ஏழை குழந்தைகளுக்காக இந்த அளவுக்கு சென்று சேவை செய்கிறார். சில ஆசிரியர்கள் படிக்கும் பிள்ளைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுகிறார்கள் . அவர்களுக்கும் இது மாதிரி செய்ய சொல்லலாம் . அப்பொழுது இது மாதிரி எண்ணங்கள் வராது
Rate this:
1 members
1 members
39 members
Share this comment
Cancel
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
01-ஏப்-201310:34:09 IST Report Abuse
ngopalsami திரு செல்வகுமார் அவர்களே உங்களின் இந்த மாபெரும் பணிக்கு எங்களின் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம், வாழ்த்துகிறோம். நம் நாட்டில் ஒரு சில மனிதர்கள் இவ்வாறு நினைத்தாலே போதும். எண்ணற்ற அனாதை குழந்தைகளுக்கு நல்வழி காட்டலாம். கூடிய விரைவில் எங்களின் சிறு நன்கொடையும் உங்களுக்கு வந்து சேரும்.மற்றுமொருமுறை உங்களின் சேவைக்கு எங்களின் பாராட்டுகள். தொடர்ந்து நல்ல முறையில் நடக்க பிரார்த்திக்கிறோம்.
Rate this:
1 members
0 members
32 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
01-ஏப்-201310:30:08 IST Report Abuse
mirudan செல்வக்குமார் அவர்களின் எண்ணம் முயற்சிகள் பாராட்ட பட வேண்டியது தான், ஆனால் இவர் செய்யும் செயல் ஏற்று கொள்ள முடிய வில்லை. ஒரு செருப்பு பாலிஸ் போட எவ்வளவு கொடுப்பார்கள் ? இவர் ஒரு பேராசிரியர் இவரின் கல்வி அறிவை கொண்டு இவரின் முயற்சியை எட்ட வேண்டும் விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடு பட கூடாது
Rate this:
15 members
1 members
53 members
Share this comment
Cancel
subha - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஏப்-201310:06:20 IST Report Abuse
subha உங்கlaது வொர்க் thodaradum .....
Rate this:
1 members
1 members
7 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
01-ஏப்-201309:55:48 IST Report Abuse
R.Saminathan நல்லது செய்ய யாரு வேணுமானாலும் வரலாம்,,ஆனால் அந்த நல்ல வேளையில் தீமைகளை மட்டும் மக்களுக்கு செய்ய கூடாது..,பேராசிரியர் திரு.செல்வக்குமார் அவர்களுக்கு எனது வாழத்துக்கள்,
Rate this:
0 members
1 members
16 members
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
01-ஏப்-201306:36:24 IST Report Abuse
Anniyan Bala இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதரா? உங்களை போன்ற நல்லார் இருப்பதால் தான் ஏதோ இந்த உலகம் இயங்கி கொண்டிருக்கிறது. தங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
01-ஏப்-201303:50:41 IST Report Abuse
Sivakumar Manikandan நீங்கள் பாலிஷ் போடும் ஷூ, செருப்புகலை கொண்டு அடித்தாலும் நம்ம ஊரு ????????????????????????................புத்தி வராது....................
Rate this:
0 members
0 members
45 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்