மதவாதத்தை ஏற்க முடியாது இலங்கை அதிபர் பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கொழும்பு:""எனது அரசு, மத மற்றும் இனவாதத்தை ஆதரிக்காது,'' என, இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்து உள்ளார்.

இலங்கையில், மாமிச உணவுகளில், "ஹலால்' முத்திரை இடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கு புத்த மதத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாமிச உணவுகளில் தற்போது, "ஹலால்' முத்திரை இடப்படுவதில்லை.
இலங்கையில், முஸ்லிம் தீவிரவாதம் பரவி வருவதாகக் கூறி, கடந்த வாரம், இஸ்லாமியர் நடத்தும் துணி கடை மீது, புத்த மதத்தினர் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக, ஆறு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, மத விழா ஒன்றில் ராஜபக்ஷே பங்கேற்று பேசியதாவது:இலங்கை ஜனநாயக நாடு. இங்கு, புத்த மதத்தினர் அல்லாதவர்களுக்கும் சம உரிமை உண்டு. மதவாதம், இனவாதம் போன்றவற்றை, என் அரசு அனுமதிக்காது.மத தீவிரவாதம் ஆயுத கலாசாரத்துக்கு வழி வகுக்கும்; இதனால், இலங்கைக்கு அவப்பெயர் தான் உண்டாகும். புத்த மதத்தினர், மற்றவர்களின் மத சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும். தாய் நாட்டை நேசிப்பவர்கள், மற்றவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும்.இவ்வாறு, ராஜபக்ஷே பேசினார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (57)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithi Esvaran - Chennai,இந்தியா
02-ஏப்-201313:35:03 IST Report Abuse
Vaithi Esvaran ஹலால் பற்றி முஸ்லிம் அன்பர்கள் எழுதி உள்ளதை அப்படியே ஏற்றுகொள்கிறோம். சுத்தம் சோறு மட்டுமல்ல இறைச்சியும் போடும் போல. நான் சைவம். இருந்தாலும் இறைச்சியை சற்று சுகாதாரத்துடன் உண்பவர்களை பாராட்டியே ஆகவேண்டும் . ஆற்றின் மீது கோபம் கொண்டு ஒருவன் குளிப்பதை கைவிட்டதை போல முஸ்லிம்கள் சொன்னார்கள் என்று ஹலால் முறையில் செய்த உணவினை தவிர்ப்பது உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
01-ஏப்-201312:40:29 IST Report Abuse
sitaramenv தன்கையராஜ் என்று ஒரு வாசகர் கருத்து எழுதியுள்ளார். வேண்டாத பெண்டாட்டி என்றால் கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்பார்கள். ராஜபக்ஷே அவர்களை விமர்சிக்கும் போது மோடி எங்கே இருந்து வந்தார்..? ராஜபக்சேக்கு பிடிக்க வில்லை என்றால் இலங்கையை சுற்றிலும் மாபெரும் கடல் உள்ளது.....எந்தப்பக்கம் வேண்டுமானாலும் போய் விழலாம். .....கடிதம் எழுதிய அன்பரும் அவரோடு உடன்கட்டை ஏறலாம்.......வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை இது போன்ற தெளிவற்ற பிதற்றலுக்கெல்லாம்.
Rate this:
Share this comment
Cancel
Selva - Bangalore,இந்தியா
01-ஏப்-201312:24:44 IST Report Abuse
Selva இதற்கு பெயர்தான் "சாத்தான் வேதம் ஓதுகிறது".....
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
01-ஏப்-201311:59:58 IST Report Abuse
Sham சாத்தான் வேதம் ஓதுகிறது... என்பது இதுதானா...
Rate this:
Share this comment
Cancel
manokaran - kanchipuram,இந்தியா
01-ஏப்-201311:43:29 IST Report Abuse
manokaran தமிழன், ஆரியர்களை உள்ளே விட்டதால்தான் நமது கலாச்சாரமே அழிந்தது. இதை தினமலர் ஆதாரத்தோடு வெளியிட முடியுமா? தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும் போது எப்படி தமிழர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்ப்படும். இன்று தமிழர்களுக்கு தேவை ஒற்றுமை. இதை செய்வார்கள நம்மவர்கள் ???????
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
01-ஏப்-201311:32:32 IST Report Abuse
ganapati sb தமிழர்களுக்கு தனி மாநில அந்தஸ்தும் சம உரிமையும் கொடுத்துவிட்டு இப்படி பேசினால் பரவாயில்லை
Rate this:
Share this comment
Cancel
saeikkilaar - ramanathapuram,இந்தியா
01-ஏப்-201311:30:14 IST Report Abuse
saeikkilaar மத வாதம் எல்லாம் எனக்கு பிடிக்காது, பிண வதம் தான் எனக்கு பிடிக்கும் என்று சொல்லாமல் சொல்கிறார்
Rate this:
Share this comment
Cancel
munna MURALI.TRT - chennai,இந்தியா
01-ஏப்-201311:29:18 IST Report Abuse
munna MURALI.TRT அடபாவி நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட. நீ பேசுற ஸ்டைல் பார்த்த நீதான் அந்த கலவரத்தையே பிளான் பண்ணியிருப்ப போல இருக்கே. தமிழர்களை போல முஸ்லிம்களை சாதாரணமாக நினைத்து விடாதே. எங்களை சோனியா முக வஞ்சித்து விட்டனர்..ஆனால் முஸ்லிம்களை காப்பாற்றுவோர் நிறைய பேர் உள்ளனர்..எல்லோரையும் சீக்கிரமா பகைத்துகொள் உனக்கு நரகம் நிச்சயம் கிடைக்கும்..
Rate this:
Share this comment
Cancel
Mr y - thamizhnadu,இந்தியா
01-ஏப்-201311:28:35 IST Report Abuse
Mr y ராஜபக்ஷே என்ற ஒரு கொடியவன் தற்போது ஒரு விஷயத்தில் தெளிவு காண்கிறான்.. ஹலால் என்பது ஒருவருடைய தனி விஷயம்... பொது விஷயம் அல்ல... நமது நாட்டில் உள்ள பகுத்தறிவு பகலவங்கல்கூட சொல்ல தயங்கும் ஒரு உண்மை எப்படி சாதாரண மாமிசம் ஹலால் உணவு ஆகிறது என்பது ...
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
01-ஏப்-201311:07:54 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் இப்போது புத்த தீவிரவாதம் தான் பெரிதும் தலை விரித்து ஆடுகிறது.. இலங்கையில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. அது போல் பர்மாவில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்