Corruption in medical insurance scheme | மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு : சட்ட ரீதியான நடவடிக்கை பாயுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு : சட்ட ரீதியான நடவடிக்கை பாயுமா?

Added : ஏப் 01, 2013 | கருத்துகள் (5)
Advertisement
மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு : சட்ட ரீதியான நடவடிக்கை பாயுமா?,Corruption in medical insurance scheme

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், முறைகேடு செய்துள்ள, தனியார் மருத்துவமனைகளின் பெயரை, அரசு, பகிரங்கமாக வெளியிடுவதுடன், அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.

தி.மு.க., அரசு கொண்டு வந்த, மருத்துவ காப்பீடு திட்டத்தை மேம்படுத்தி, கடந்த ஆண்டு, ஜனவரி முதல், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாநில அளவில், 700க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள், 100க்கும் அதிகமான, அரசு மருத்துவமனைகள், இத்திட்டத்தில், சிகிச்சை அளித்து வருகின்றன.காப்பீடு திட்டத்தில் கிடைக்கும் வருவாயின் மூலம், அரசு மருத்துவமனைகளின், உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், இத்திட்டத்தால், தனியார் மருத்துவமனைகள் தான் அதிகளவு பயனடைந்து வருகின்றன.இந்நிலையில், சென்னையில், ஐந்து மருத்துவமனைகள் உட்பட, மாநில அளவில், 35 தனியார் மருத்துவமனைகள், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தை, முறைகேடாக பயன்படுத்தியதற்காக, திட்டத்தில் இருந்து, ஒரு மாதம் முதல் ஓராண்டு வரை, நீக்கப்பட்டுள்ளன.அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான, மருத்துவ காப்பீடு திட்டத்தில் முறைகேடு செய்துள்ள, தனியார் மருத்துவமனைகளுக்கு, அரசு அளித்துள்ள இந்த தண்டனை போதுமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, சமூக சமத்துவத்திற்கான, மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:முறைகேடு செய்துள்ள தனியார் மருத்துவமனைகளின் பெயர்களை, அரசு, பகிரங்கமாக வெளியிட வேண்டும். அம்மருத்துவமனைகளை திட்டத்தில் இருந்து நிரந்தரமாக நீங்குவதுடன், அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு முறைகேடுகள் நடக்காமல் இருக்க, இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.

அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதன் மூலம், அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளின் பங்களிப்பை படிப்படியாக குறைக்கலாம்.இவ்வாறு, ரவீந்திரநாத் கூறினார்.

தமிழ்நாடு சுகாதார திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:மருத்துவ காப்பீடு திட்ட முறைகேட்டில் ஈடுபட்ட, தனியார் மருத்துவமனைகளுக்கு, தற்போது, தரப்பட்டுள்ள தண்டனையே போதுமானது. அவற்றின் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுத்தால், மருத்துவ சேவை பாதிக்கப்படும். அவற்றின் பெயரை பகிரங்கமாக வெளியிட முடியாது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
01-ஏப்-201308:02:50 IST Report Abuse
Samy Chinnathambi ஆளுங்கட்சி ஆசி இருந்தா என்ன வித முறைகேட்டில் வேண்டுமானாலும் ஈடுபடலாம்
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
01-ஏப்-201307:38:25 IST Report Abuse
Appan இந்த மருத்துவ மனைகளை மூடிவிட வேண்டும். Zero tolerance policy will only bring discipline.
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
01-ஏப்-201306:19:53 IST Report Abuse
s.maria alphonse pandian முதல்வர் செருப்பு காலோடு ICU வில் நுழைந்தால் அதை எதிர்த்து கேள்வி கேட்காத அனைத்து மருத்துவமனைகளும் ஓகே....கேள்வி கேட்கும் மருத்துவமனைகள் மருத்துவ காப்பீடுக்கு தகுதியற்றவை....அப்படித்தானே?
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
01-ஏப்-201310:47:04 IST Report Abuse
Baskaran Kasimaniஅவ்வளவு தானா? இனி யார் வேண்டுமானாலும் ICU க்குள் செருப்பை தூக்கிக்கொண்டு வேண்டுமானாலும் செல்லலாம் என்று GO போட்டாலும் போடுவார்கள் .....
Rate this:
Share this comment
Cancel
pu.ma.ko - Chennai,இந்தியா
01-ஏப்-201304:44:24 IST Report Abuse
pu.ma.ko மருத்துவ காப்பீடே முறைகேடான விஷயம். அரசு இதற்க்கு செலவழிக்கும் தொகையை மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்த, நல்ல இலவச சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம். ஒரு பக்கம் டாஸ்மாக்கும் இன்னொரு பக்கம் இலவச மருத்துவ காப்பீடும், வாழ்க தமிழகம். அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் தங்கள் பையை நிரப்பிக்கொள்ள தோதான திட்டங்களை எப்போதும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை