E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
லோக்சபா தேர்தல் குறித்து காங்கிரஸ் மேலிடம் பலே வியூகம்: மே 8ம் தேதிக்கு பின் முக்கிய முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

01 ஏப்
2013
06:29
பதிவு செய்த நாள்
ஏப் 01,2013 00:07

லோக்சபாவுக்கு முன்னதாகவே தேர்தல் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து, மே மாதம் முடிவெடுக்கிறது காங்கிரஸ் மேலிடம்.

நம்பிக்கை : பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசிலிருந்து, தி.மு.க., வெளியேறிய பின், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆதரவுடன், மீதமுள்ள பதவிக்காலத்தை ஓட்டி விடலாம் என, காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால், சமீப நாட்களாக, முலாயம் சிங் பேசி வரும் முரண்பட்ட பேச்சுக்களால், "மத்திய அரசு கவிழலாம், லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் வரலாம்' என, வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன. ஆனாலும், முழு பதவிக்காலத்தையும் தன் அரசு பூர்த்தி செய்யும் என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கையுடன் பேசி வருகிறார். தினம் ஒரு மாதிரியாக பேசி வரும், முலாயம் சிங், அரசுக்கு வெளியிலிருந்து அளித்து வரும் ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டால், லோக்சபாவில் பலத்தை நிரூபிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், காங்கிரஸ் மேலிட தலைவர்களும், மத்திய அரசில் இடம் பெற்றுள்ள முக்கிய அமைச்சர்களும் துவக்கியுள்ளனர்.திரிணமுல் காங்கிரஸ் தலைவரான, மேற்கு வங்க முதல்வர் மம்தாவை இழுப்பது, ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சரிக்கட்டுவது, உதிரி கட்சிகளை வளைப்பது என, பெரும்பான்மை எண்ணை தொடும் வகையிலான காரியங்கள், முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆலோசனை:



அதேநேரத்தில், கூட்டணியிலிருந்து அவ்வப்போது கட்சிகள் வெளியேறி, நாளுக்கு நாள் மத்திய அரசு பலவீனமடைந்து வருவது, மிரட்டல் விடுக்கும் சில கட்சிகளின் கோரிக்கைகளுக்கு ஆட்படுவது போன்றவை, மத்திய அரசுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, லோக்சபா தேர்தலை முன்னதாகவே நடத்தி விட்டால் என்ன என்றும், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் ஆலோசிக்கத் துவங்கியுள்ளனர்.கட்சித் தலைவர் சோனியாவிடமும், ராகுலிடமும் இந்த யோசனையை, முக்கிய தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ராகுல் காந்தியின் தொடர் ஆலோசனை கூட்டங்களில், இடம்பெறும் தலைவர்கள், இந்த கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். இருந்தாலும், கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நேரத்தில், இந்த விஷயத்தில், இப்போதைக்கு முடிவெடுக்க, காங்கிரஸ் மேலிடம் தயாராக இல்லை. நாட்டிலேயே இன்றைக்கு, காங்கிரசுக்கு ஓரளவு வெற்றி முகம் உள்ள ஒரே மாநிலம், கர்நாடகம் என, காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கின்றனர். காங்கிரஸ் அங்கு ஆட்சியைப் பிடிப்பது எளிதாக இருக்கும் என்றும் நம்புகின்றனர்.

முடிவு:



கர்நாடகா தேர்தல் வெற்றியை அடுத்து, அதையே உற்சாக களமாக மாற்றி, பொதுத் தேர்லுக்கு சென்று விடலாம் என, நினைக்கின்றனர். அதனால், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும், மே, 8ம் தேதிக்குப் பிறகு, லோக்சபா தேர்தலை முன்னதாகவே நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்க உள்ளது.கர்நாடகாவை அடுத்து, அக்டோபர், நவம்பர் மாதங்களில், டில்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. இவை அனைத்திலுமே, காங்கிரசுக்கு பெரிய சரிவுகள் ஏற்படலாம் என, நம்பப்படுகிறது.அதனால், கர்நாடகா தேர்தல் முடிவுகள் வெளியானதும், தெளிவான வியூகம் வகுத்து, பொதுத் தேர்தலை எப்போது நடத்துவது என, காங்கிரஸ் மேலிடம் உறுதியான முடிவை எடுக்கலாம் என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது டில்லி நிருபர் -





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
01-ஏப்-201304:50:31 IST Report Abuse
Sekar Sekaran இவர்களது அரசியல் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் இருந்து ஆரம்பிக்கவேண்டுமே தவிர..பேரம் பேசுவதிலிருந்து அல்ல. நாட்டில் தீவிரவாத பயம் ஒருபுறம்..நாட்டை சுற்றிலும் உள்ள பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் ஊடுருவல் மறுபுறம்..எங்கும் ஊழல் எதிலும் ஊழல்..காங்கிரஸ் என்றாலே ஊழல்..பங்காளி கட்சிகளும் ஊழல்..என்கிற சூழலில் இவர்களது எண்ணம் எப்பாடுபட்டாவது ஆட்சியில் நீடிப்பதே என்கிற நிலைமை கவலைக்குரியது. நாட்டில் உயர்ந்து வரும் விலைவாசி என்பது இப்போது ஏழைகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தும் என்பது சந்தேகமே இல்லை. காங்கிரஸ் மட்டும் அறுபது ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அதே சமயம் நாட்டின் மக்களின் வறுமை கோடு என்பது இப்போது ஒட்டுமொத்த இந்தியர்களின் கழுத்தை இருக்கும் தூக்கு கயிறு போல இறுகி வருகின்றது. கர்நாடக என்றில்லை நாட்டில் எங்குமே காங்கிரஸ் வெற்றி என்ற சொல்லையே எட்டிவிடவே கூடாது. வியூகம் என்பது இப்போது மக்கள் எண்ணங்களில் உள்ளது...இவர்களை தோற்கடிப்பதே என்பதுதான் அந்த எண்ணம்..எண்ணம் நிச்சயம் வெற்றி பெரும்..அது எப்போதுமே காங்கிரசின் எண்ணத்திற்கு எதிரான தீர்மானத்தையே எதிரொலிக்கும்..முடிவானது..இறுதியானதும் கூட..
Rate this:
17 members
0 members
59 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
01-ஏப்-201304:41:05 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தேதியை முடிவு செய்யுங்கள்....இனி நேர்மையான வழியில் (மீண்டும் சொல்கிறேன் - நேர்மையான வழியில் ) காங்கிரஸ் ஒரு நாளும் இந்த தேசத்தில் பதவிக்கு வர முடியாது.
Rate this:
16 members
1 members
85 members
Share this comment
T.R.Radhakrishnan - Nagpur,இந்தியா
01-ஏப்-201305:42:35 IST Report Abuse
T.R.Radhakrishnanசுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கும், நேர்மைக்கும் ஸ்நானப் ப்ராப்தி கிடையாது.......
Rate this:
11 members
0 members
61 members
Share this comment
Cancel
Indiya Tamilan - Madurai,இந்தியா
01-ஏப்-201303:56:51 IST Report Abuse
Indiya Tamilan லோக்சபா தேர்தல் குறித்து காங்கிரஸ் என்ன வியூகம் வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் தமிழகத்திற்கு வியூகம் வகுத்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் மறந்துவிடுங்கள் தமிழகத்தை.
Rate this:
12 members
0 members
130 members
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
01-ஏப்-201301:45:51 IST Report Abuse
பொன்மலை ராஜா வெள்ளையனை வெளியேற்றி 15.08.1947 அன்று இந்தியா பெற்ற சுதந்திரத்தை சோனியா தலைமையிலான காங்கிரஸ் பறித்து, காங்கிரசின் சுதேசி கொள்கையைக் கைவிட்டு அந்நிய முதலீடுகளுக்கு நாட்டின் கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. அஹிம்சைக் கொள்கையைக் கைவிட்டு உலகமகா அரக்கர்களுக்கு இந்திய இராணுவத்தை உதவிக்கு அனுப்புவதோடு நிதியுதவி செய்து ஜாலியன் வாலா பாக் படுகொலைகளை விட பலமடங்கு கொடிய சேதாரத்தை ஏற்படுத்திடும் கோரப் படுகொலைகளை அரங்கேற்றிட நிதியுதவி செய்வதோடு இரண்டாம் உலகப் போரில் இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நேச நாடுகள் கைகோர்த்து அரங்கேற்றிய மனித விரோத செயல்களை இன்றைக்கு செய்வதில் இந்தியா இலங்கையோடு கைகோர்த்து அரங்கேற்றிட செய்ததில் காங்கிரசின் கைங்கர்யம் அதிகம் என்பதை உலகமே அறியும் இந்த இலட்சணத்தில் காங்கிரஸ் மீண்டும் இந்தியாவில் அரியணை ஏறும் என எவரும் சொல்ல மாட்டார்கள் காங்கிரசை ஆதரித்து அதன்பின்னே மக்கள் செல்லவும் மாட்டார்கள் எனவே இவர்கள் வைக்கும் வியூகப் பொறிகளில் மக்கள் சிக்க மாட்டார்கள் என்று நான் முழுமையாக நம்புகின்றேன்
Rate this:
11 members
0 members
56 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
01-ஏப்-201300:30:07 IST Report Abuse
Thangairaja என்ன வியூகம் அமைத்தாலும் பாஜகவை விட சில இடங்களே காங்கிரஸ் அதிகம் பெற வாய்ப்புள்ளது. உ பி, பீகார் மாநிலங்களில் கூட்டணி அமைத்து அக்கட்சியால் போட்டியிட முடியாது. அங்குள்ள கட்சிகளுடன் கூட்டணி என்றால் தேர்தலுக்கு பிறகு தான் எனும்போது அது நம்பிக்கை தரும் விஷயமாக இராது. அப்போது தமிழகம் மீண்டும் முக்கியத்துவம் பெரும்.
Rate this:
29 members
3 members
93 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.