E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை: தேர்தல் ஆணையம் மீண்டும் கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
00:08

புதுடில்லி:அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும் நன்கொடை விஷயத்தில், சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக அரசின் முடிவுக்கு, தேர்தல் ஆணையம் மாறுபட்டு கருத்து தெரிவித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் குறித்து, மத்திய சட்ட ஆணையம் ஆலோசித்து வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு, தாமாக முன்வந்து அளிக்கப்படும் நன்கொடைகளில், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடைகள் பற்றிய விபரத்தை, அரசியல் கட்சிகள் வெளியிட செய்யும் வகையில், தேர்தல் சீர்திருத்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.தேர்தல் ஆணையம் அரசுக்கு அனுப்பிய கடிதத்தில்,"20 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பை நிர்ணயிக்க வேண்டாம். இதை, ஆய்வு செய்வது கஷ்டமாக இருக்கும். எனவே, அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும், அனைத்து நன்கொடைகள் பற்றிய விபரத்தை வெளியிட வேண்டும்' என, கருத்து தெரிவித்து இருந்தது.

தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை, மத்திய அரசு, சட்ட ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பியது. தேர்தல் சீர்திருத்தம் குறித்து ஆலோசித்து வரும், சட்ட ஆணையம், இதையும் பரிசீலிக்கும் என, சட்ட அமைச்சகம், தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து இருந்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் , சட்ட அமைச்கத்திற்கு எழுதியுள்ள இரண்டாவது கடிததத்தில், "அரசியல் கட்சிகளுக்கு வரும் அனைத்து நன்கொடைகள் பற்றிய விபரத்தை, பான் நம்பர், முகவரி, செக் அல்லது ரொக்கமாக வந்ததா என்பதை மட்டும் குறிப்பிட வேண்டும்' என, அறிவிப்பு வெளியிட்டால் போதுமானது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.இதனால், இவ் விவகாரத்தில் மேலும் இழுபறி ஏற்பட்டுள்ளது.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
01-ஏப்-201310:38:19 IST Report Abuse
mirudan இந்தியாவின் கட்சி தொடங்குவது முதலில் தன் குடும்ப வருமானத்தை பெருக்கி கொள்வதற்கு தான் ஒரு கட்சியின் ஒரு ரூபாய் வருமானத்தையும் அதன் செலவையும் கட்டாயம் தணிக்கை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளின் வருவாய் வருமான கணக்கில் கொண்டு வராத பணம் தான்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
01-ஏப்-201309:48:47 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படுவது நன்கொடையல்ல..கட்டாய வசூல் அல்லது வரி ஏய்ப்பு செய்வதை கண்டுக்கொள்ளாமல் இருக்க அளிக்கப்படும் கையூட்டு..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
madurai mani bharathi - madurai,இந்தியா
01-ஏப்-201307:55:38 IST Report Abuse
madurai mani bharathi யானை பசிக்கு சோள பொறியை போடுவது போல அவ்வப்போது எதாவது சொல்லி ""நாங்கள் தான் தேர்தல் ஆணையம்"" என்று பத்திரிகைக்கு செய்தி கொடுப்பதோடு சரி...... நம்மோளோட வேலை தேர்தல் நடத்துவோட சரி ஏன் இந்த கொலைவெறி....... நீங்க தெளிவா தான் இருக்கீங்களா? இல்லியா? அரசியல் கட்சி வியாபார அமைப்பா? அல்லது மக்கள் சேவை அமைப்பா? என்பதை முதலில் மக்களுக்கு தெளிவு படுத்துங்கள்.... சில மாநில மற்றும் தேசிய கட்சிகளில் MP மற்றும் MLA , மேல்சபை உறுப்பினர், MLC சீட் கொடுபதற்கே பல கோடிகளை பெறுகின்றார்கள் இதை எதில் சேர்ப்பீர்கள் இலஞ்சமகவா? அல்லது நன்கொடையாகவா? அல்லது வியாபாரமகவா?..... அப்படி பணம் கொடுத்து தேர்தலில் பெற்ற வெற்றி செல்லுமா? செல்லாதா? அல்லது ஆட்சியை காபற்றிகொள்ள இலஞ்சமாக கொடுத்து MLA மற்றும் MP களை விலைக்கு வாங்கினால் அந்த ஆட்சியைக் கலைக்க எதாவது வழி முறைகள் உண்டா? பதில் ஒண்ணுமே கிடையாது, அப்புறம் ஏன் இந்த வீண் கடிதம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
01-ஏப்-201304:33:21 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மகளிர் மசோதா போல் இதுவும் அனைத்து கட்சியினராலும் நிராகரிக்கப்படும்....இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை....
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
01-ஏப்-201300:42:34 IST Report Abuse
Ab Cd அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும், அனைத்து நன்கொடைகள் பற்றிய விபரத்தையும் வெளியிட வேண்டும், அதே போல் அதன் செலவு கணக்கையும் முறையாக வெளியிட வேண்டும்.
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
01-ஏப்-201300:22:26 IST Report Abuse
Thangairaja வலியோரை வாழ்த்தி எளியோரை தாழ்த்தும் அமைப்புகளில் இதுவும் ஓன்று. காங் ., பாஜக போன்ற கட்சிகளின் செயல்பாடுகளை கண்டிக்கும் திறன் நீதித்துறையை போலவே இவர்களுக்கும் கிடையாது.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.