E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சேது சமுத்திர திட்ட விவகாரம்: தமிழக அரசின் முடிவு என்ன?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

02 ஏப்
2013
00:08
பதிவு செய்த நாள்
ஏப் 01,2013 23:38

புதுடில்லி:"சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசின் நிலை என்ன என்பதை இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

"இந்துக்களின் புனிதம்': இந்தியா - இலங்கை இடையே, பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடாவை இணைக்கும் வகையில், சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற, மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கான பணிகளுக்காக, 2005ல் துவங்கி, 2012 ஜூன், 30ம் தேதி வரை, 830 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டது.இந்த கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற, ராமர் சேது பாலத்தை இடிக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த ராமர் பாலம் என்பது, ராமாயண காலத்தில், இலங்கையை ஆண்ட அரசன் ராவணனை வீழ்த்தி, சீதையை மீட்க, கடவுள் ராமரின் வானர சேனைகளால் போடப்பட்டது என, நம்பப்படுகிறது. அதனால், இந்துக்கள் புனிதமானதாக கருதும், ராமர் சேது பாலத்தை இடிக்கக் கூடாது என, பா.ஜ., உட்பட, சில கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன.இதுதொடர்பாக, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி உட்பட, சிலர் சுப்ரீம் கோர்ட்டில், மனுத்தாக்கல் செய்தனர்.இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற, 2007 ஆகஸ்ட், 31ல் தடை விதித்தது. அத்துடன், சேது சமுத்திர திட்டத்தை, ராமர் சேது பாலம் அல்லாது, மாற்று வழியில் நிறைவேற்ற வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து, ஆய்வு செய்து அறிக்கை தரும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அறிக்கை நிராகரிப்பு:



இதையடுத்து, ஆர்.கே.பச்சவ்ரி தலைமையில், கமிட்டி ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். இந்த கமிட்டி, சேது சமுத்திர திட்டம், பொருளாதார ரீதியாகவும், சுற்றுச் சூழல் ரீதியாகவும் பலன் தரக்கூடியதல்ல என, தெரிவித்தது.இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, "சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில், உறுதியாக உள்ளோம்' என, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில், நேற்று நீதிபதிகள், டாட்டூ மற்றும் கேகர் தலைமையிலான, "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான சுப்பிரமணியசாமி, ""பச்சவ்ரி கமிட்டி அறிக்கையை, மத்திய அரசு நிராகரித்து விட்டது. அதனால், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றலாமா, வேண்டாமா என்பதை, சுப்ரீம் கோர்ட்தான் முடிவு செய்ய,'' என்றார்.

"பதில் வேண்டும்':



இதன்பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:சேது சமுத்திர திட்டத்தை தொடர வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதனால், இந்தப் பிரச்னையில், தமிழக அரசின் நிலை என்ன என்பது, இரண்டு வாரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும்.தமிழக அரசு தாக்கல் பதில் மனுவின் நகல், அதை தாக்கல் செய்வதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (168)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayaraman Duraisamy - Trichy,இந்தியா
07-ஏப்-201312:44:14 IST Report Abuse
Jayaraman Duraisamy வளர்ச்சி திட்டத்தில் அரசியல் நடத்துகிறார்கள்.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
Irfan - Ramnad,இந்தியா
05-ஏப்-201300:40:49 IST Report Abuse
Irfan நீங்க எல்லாம் தமிழ்நாட்டையும் முன்னேற விட மாட்டார்கள் எங்கள் மாவட்டம் (இராமநாதபுரத்தையும்) முன்னேற விட மாட்டார்கள் இதில் நன்மையோ தீமையோ தமிழ் நாட்டவர் நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் அதையாவது யோசித்து பேச வேண்டும் வாடா நாட்டவர்கள் தமிழ் நாடு முன்னேறுவது பிடிக்காமல் இது போன்று ஏதாவது சொல்லி தடுப்பார்கள் நம்மவர்கள் தான் நடிகர் நடிகைக்கு ஒட்டு போட்டே பழகி விட்டோம் சினிமாவை உண்மை என நம்பி நம் வாழ்கையில் திணித்து விட்டோம் அதனால் சுய சிந்தனை நம்மவர்களுக்கு கொஞ்சம் கம்மி தான்.பொறுத்திருந்து பார்போம்
Rate this:
3 members
0 members
4 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
03-ஏப்-201313:48:01 IST Report Abuse
தமிழ்வேல் மேட்டூர் நீர்த்தேக்கத்தில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்துவர் கோவில்கள் பொது நலத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஏராளமான கிராமங்களுடன் மூழ்கடிக்கப்பட்டன....சேது கால்வாய்க்கு கப்பல்களுக்காக ஆழப்படுத்திவிட்டு அந்த மண் திட்டுகளையும் கற்களையும் அதற்க்கான நிபுணர்களை ஆலோசித்து ஆழத்தில் இப்போதுள்ள நிலைபோலவே அமைக்க ஏற்பாடு செய்யலாம். இது யாரையும் பாதிக்காது.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
04-ஏப்-201321:16:53 IST Report Abuse
என்னுயிர்தமிழகமேதமிழ்வேலரே, வருடா வருடம் மணல் திட்டுகள் செர்ந்துகொண்டுதான் இருக்கும், அதற்க்கு பண்ணும் செலவுக்கு, நாலு குண்ட ராஜபக்சே மீது போட்டுட்டு, திபெத் எப்படி அபகரிக்க பட்டதோ, அப்படியே சிறிலங்காவும் இந்திய ராஜதானியில் சேர்ந்தது என்று எழுதிடுங்க, சிங்கள தீவினுக்கோர் பலம் அமையுங்க, எல்லாம் சுபமாய் முடியும், ஐயா வைக்கோ படகில் சென்று வந்த தீவு இந்தியாவினுடையது,...
Rate this:
2 members
0 members
15 members
Share this comment
Cancel
Srini Vasan - chennai,இந்தியா
03-ஏப்-201310:35:39 IST Report Abuse
Srini Vasan This plan is good for the welfare of our tamil state. Many ppl from TN would get employment and business of southern srilanka will get affected. Hence sri lanka with subramaniam swamy is trying to stop this through conspiracy. They had requested nehru to stop this in 1962. In recent years, And their ambassidor distributed cds with the ram sethu conspiracy. Our government should support this project. BJP doesn't care about our ppl. And the support kudankulam project which is the most dangerous one. BJP talk about hindu sentiments and what did they do when many Tamil hindus were ed in srilanka.
Rate this:
5 members
0 members
4 members
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
02-ஏப்-201318:46:29 IST Report Abuse
R.சுதாகர் எது மக்களின் நம்பிக்கை? மக்களுக்கு எதில் நம்பிக்கை இருக்கிறது? நியாயமாக sambaadhiththaal dhaan sam என்பதில் நம்பிக்கை இருக்கிறதா?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
iniyavan - kuala lumpur,மலேஷியா
02-ஏப்-201317:38:03 IST Report Abuse
iniyavan ராமர் பாலமோ பவளப்பாரையோ ஒன்றுக்கும் ஆபத்து இலை வெட்ட போவது வெறும் 500 மீட்டர் அகலத்துக்கு மட்டும் தான் அதனால் தமிழ் நாடு பலன் அடையும் அல்லவா
Rate this:
7 members
0 members
41 members
Share this comment
Cancel
kumat kumar - VIRUDHUNAGAR,இந்தியா
02-ஏப்-201317:33:05 IST Report Abuse
kumat kumar Dear Brahmins, please allow Tamil Nadu to Develop, this project is very essential for southern districts.
Rate this:
19 members
0 members
51 members
Share this comment
Cancel
Anban - TirunelVeli,இந்தியா
02-ஏப்-201314:46:39 IST Report Abuse
Anban பழக்க தோஷத்துல அம்மா இதுக்கும் ' வாய்தா ' வாங்க போறாங்க....
Rate this:
6 members
0 members
82 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஏப்-201314:46:36 IST Report Abuse
தமிழ்வேல் செந்தமிழின் கருத்துக்கள் சில வாரங்களாக ஒரு பக்கமாக சாய்ந்து வருகின்றது...
Rate this:
3 members
0 members
142 members
Share this comment
Cancel
Anban - TirunelVeli,இந்தியா
02-ஏப்-201314:42:33 IST Report Abuse
Anban கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்க்கும் தமிழ் ஆர்வலர்கள், சேதுவை ஆதரிப்பது எதற்கு? கூடங்குளம் திட்டத்தால் மீன் வளம், கடல் வளம் அழியும். அதனால் மீனவர் வாழ்க்கை பாதிக்கும் என்பவர்கள். சேது திட்டத்தால் மீன், கடல் வளம் பாதிக்காது. அதனால் மீனவர்கள் வாழ்க்கை மேம்படும் என்பார்களா? மீனவர்கள் விஷயத்தில் ஏன் இந்த இரட்டை வேடம்?
Rate this:
9 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.