Power product in Koodankulam will start soon | கூடங்குளம் அணுஉலையில் விரைவில் மின் உற்பத்தி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம் அணுஉலையில் விரைவில் மின் உற்பத்தி

Added : ஏப் 01, 2013 | கருத்துகள் (38)
Advertisement
கூடங்குளம் அணுஉலையில் விரைவில் மின் உற்பத்தி,Power product in Koodankulam will start soon

திருநெல்வேலி :கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மின் உற்பத்தி துவங்குவதன் முன்னோட்டமாக, சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்து வருவதால், இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தி துவங்கிவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளத்தில், 15 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, இரண்டு அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. முதலாவது அணு உலையில், கடந்த ஆண்டே மின் உற்பத்தி துவக்குவதற்கான பணிகள் நடந்தன. 2012, ஆக., 19ல், செரியூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணி நடந்தது. 2013, ஜனவரியில், உற்பத்தி துவங்கியிருக்க வேண்டிய நிலையில், இரண்டு வால்வுகளில் கசிவு ஏற்பட்டிருப்பதாக, மத்திய அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.வால்வுகளை சரி செய்யும் பணிகளில், இந்திய, ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். தற்போது அனைத்து பணிகளும் முடிந்து, மின் உற்பத்திக்கான, "ஹாட் ரன்' எனப்படும், சோதனை ஓட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.

அணு உலை பம்புகளில் ஏற்படுத்தப்படும், செயற்கை வெப்பத்தால், குழாய்களில் வரும் கடல் நீர், நீராவியாக்கப் படுகிறது. அந்த நீராவி மூலம், டர்பைன் சுழல்கிறது. தற்போதைய சோதனை ஓட்டத்தில், நீராவி, எமர்ஜென்சி வால்வுகளில் தேவையான வேகத்தில் செல்கிறதா என்ற சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது.சோதனைக்கு பிறகு, நீராவி வெளியேற்றப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக சோதனை ஓட்டம் நடக்கிறது. நீராவி வெளியேறும் சத்தம் கேட்பதால், அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், மீண்டும் நாளை, போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.


மின் உற்பத்தி எப்போது?

தற்போது நடந்துவரும் சோதனை ஓட்டத்தை, மும்பையில் உள்ள அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்வர். தற்போதும் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய கீழமட்ட அதிகாரிகள் சிலர், கூடங்குளத்தில் தங்கி, பணிகளை கவனித்து வருகின்றனர். எனவே அணுசக்தி ஒழுங்குமுறை அதிகாரிகள், அணு உலையின் செயல்திறன், பாதுகாப்பு தன்மை குறித்து திருப்தி தெரிவித்தவுடன், படிப்படியாக விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என தெரிகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mustafa - Dammam,சவுதி அரேபியா
02-ஏப்-201317:38:05 IST Report Abuse
Mustafa போங்கப்பா ஒங்களோட ஒரே தமாஷா போச்சு
Rate this:
Share this comment
Cancel
HARIRAM SAHADEV - dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-201316:51:13 IST Report Abuse
HARIRAM SAHADEV ஏண்டா டேய் , தமிழர்கள மலேசியா , ஸ்ரீலங்கா , கர்நாடகா , கேரளானு ஊரு ஊற அடிச்சீங்க .. எங்க நிலத்துல கல்பாக்கம் அணுமின் நிலையம் , நெய்வேலி நிலசுரங்கம்னு எங்க சொத்த எல்லா உரூஞ்சி எல்லாரும் மின்சாரம் எட்தானுங்க நாடு பூரா.. இப்ப , இவனுங்கள எவ்ளோ அடிச்சாலும் வாங்கிபானுங்க ரொம்ப நல்லவனுங்கனு எமலோகதையே கட்டிடானுங்க ... இன்னுமாட நம்ம சும்மா இர்க்றது இதையெல்ல பாத்துக்குட்டு ..
Rate this:
Share this comment
Cancel
Indrum Namathe - Trichy,இந்தியா
02-ஏப்-201312:59:26 IST Report Abuse
Indrum Namathe பதினைந்து நாள் சாமியை எங்கே?
Rate this:
Share this comment
Cancel
SURESH SURESH - Bangalore,இந்தியா
02-ஏப்-201311:56:06 IST Report Abuse
SURESH SURESH ஏப்ரல் பூல் ஏமாந்த பூல்
Rate this:
Share this comment
Cancel
திராவிடன் - Madurai,இந்தியா
02-ஏப்-201311:14:32 IST Report Abuse
திராவிடன்  கூடங்குளம் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி - "மத்திய அமைச்சர் நாராயணசாமி" அப்படின்னு போட மறந்துட்டீங்களா தினமலர்...
Rate this:
Share this comment
Cancel
adiyamaan - Athipatti,இந்தியா
02-ஏப்-201310:48:38 IST Report Abuse
adiyamaan அட போங்க பாஸ்.. அடிக்கிற வெயில்ல நீங்க வேற..
Rate this:
Share this comment
Cancel
JAY JAY - CHENNAI,இந்தியா
02-ஏப்-201310:37:20 IST Report Abuse
JAY JAY ரமணன் சொல்லி மழை வந்ததாகவோ, நாராயணசாமி சொல்லி கரண்ட் வந்ததாகவோ வரலாறு இல்லை என்பதை வயித்துல இருக்குற புள்ள கூட சொல்லிடும்....
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
02-ஏப்-201310:20:35 IST Report Abuse
sathish ஏனையா, இதில் கருத்து எழுதும் அன்பர்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இருக்கிற மாதிரி தெரிய வில்லை... யார் வீட்டு பணம் அய்யா,, அது,, பதினைந்தாயிரம் கோடி? உங்க பணம்,, அது உங்க பணம். உங்க வரி பணம்.. அது ஏதாவது இது போல் உபயோகமா, நாட்டுக்கு சிலவு செய்து பார்த்தல், அதை பற்றி கொஞ்சம் கூட கவலையே இல்லாமே,, அபசகுனமா ஏதாவது பேசி கெடுக்கதானெ பாக்கறீங்க...வேண்டாம். அய்யா, வேண்டாம், நாடு நல்ல ஆகுனுமுனா,ஏது நல்ல காரியத்திற்கும் கொஞ்ச இது போல் இடைஞ்சல் வரத்தான் செய்யும்,, அதுக்கு கிண்டல் செய்யலாமா?
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
02-ஏப்-201310:15:28 IST Report Abuse
PRAKASH தினமலரே .. இனிமேல் கூடங்குளத்தில் மின்சாரம் உற்பத்தி தொடங்கிய பிறகு செய்தி போடவும் .. அதற்கு முன்னால் தயவு செய்து செய்தி போட வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Parivel - Blore,இந்தியா
02-ஏப்-201309:59:25 IST Report Abuse
Parivel அணு உலை ஆபத்தானது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. ஆனால், நமது அணு உலை எதிர்பாளர்கள் மின் உற்பத்திக்கு கொடுக்கும் அறிவுரைகள் சற்றே யோசிக்க தோன்றுகிறது . பல சமயங்களில் சூரிய ஒளி மின்சார உற்பத்தி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எனக்கு தெரிந்த வரை, சூரிய ஒளி மின்சாரம் என்பது சாத்தியமான ஒன்றுதான். இதை அணு உலை எதிர்பாளர்கள் தங்கள் வீடுகளில் முதலில் நிறுவி மற்றும் அரசு மின்சாரத்தை துண்டித்து தங்கள் எதிர்ப்பை காட்டினால் மிகவும் தரமான, ஏற்று கொள்ள கூடிய ஒன்றாக இருக்கும். இதை நான் ஒரு எதிர் கருத்தாக சொல்லவில்லை, ஒரு மிக சிறந்த போராட்ட முறை ஆக பயன்படுத்த சொல்கிறேன். இதன் முலம் நாட்டிக்கு நன்மையையும், சத்தியா கிரஹ போராட்டத்தை விட வலுவான ஒன்றாக இது இருக்கும் என நம்புகிறேன். திரு. உதய குமார் அவர்கள் செய்வாரா? யாராவது ஒருவர் இந்த கருத்தை திரு. உதய குமார் அவர்களுக்கும் மற்றும் போராட்ட குழுவினருக்கும் தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும். போராட்ட செலவுகளை இந்த மாதிரி அக்கபுர்வமாக செலவு செய்தல் நாட்டிற்கே ஒரு முன் உதாரணமாக இருக்கும். நன்றி.
Rate this:
Share this comment
Velmurugan Subramanian - kudankulam,இந்தியா
02-ஏப்-201319:26:00 IST Report Abuse
Velmurugan Subramanianதென் பகுதிக்கு நீங்கள் சென்றதில்லையா? நூற்றுக்கணக்கான காற்றாடிகளை எங்கள் வீட்டின் மேல் இருந்து எண்ணலாம். இப்போது எண்ணுங்கள்....
Rate this:
Share this comment
Parivel - Blore,இந்தியா
03-ஏப்-201309:51:41 IST Report Abuse
Parivelநன்றி. நான் சொன்னது அல்லது சொல்லவந்தது அரசின் மின் இணைப்பை துண்டித்து விட்டு தங்கள் வீட்டில் மின்சாரத்தை உற்பத்தி செய்து காண்பிக்க சொன்னேன். தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளவேண்டாம். நான் சொல்வதெல்லாம் இந்து போன்றதொரு போராட்ட முறை என்பது மிகவும் வலுவான தாக இருக்கும். அது மட்டுமல்லாது, ஒரு தொழில் நுட்பத்தை சாதாரண மக்களும் புரிந்து கொண்டு வாழ்தல் என்பது புதிய கண்டு பிடிப்பு களுக்கும் வழி வகுக்கும். மீண்டும் சொல்கிறேன்,நான் ஒன்றும் உங்கள் போராட்த்தை எதிர்க்க வில்லை. மாற்று வழி போராட்டத்தை தான் சொல்கிறேன். நான் சொல்லும் போராட்டம் அரசை நிச்சயமாக மாற்றும். நாட்டையும் முன்னேற்றும். முயற்சி செய்து பாருங்களேன். இது ஒரு வேண்டுகோள் தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை