Vijayakanth calls to boycott Parliment election | பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல்

Added : ஏப் 01, 2013 | கருத்துகள் (76)
Advertisement
பார்லி., தேர்தல் புறக்கணிப்பு : விஜயகாந்த் வலியுறுத்தல், Vijayakanth calls to boycott Parliment election

சென்னை :பார்லிமென்ட் தேர்தலை, அனைத்து கட்சிகளும் புறக்கணித்தால், தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கும் என, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இருந்து, தே.மு.தி.க.,வின் , ஆறு எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை கண்டித்து, அக்கட்சி சார்பில், சென்னை எம்.ஜி.ஆர்., நகரில் ,நேற்று இரவு, கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை ஏற்று, விஜயகாந்த் பேசியதாவது:எனக்கும், தே.மு.தி.க.,எம்.எல்.ஏ.,க்களுக்கும், எந்த பயமும் கிடையாது. ஆட்சியாளர்களுக்கு, பயம் வந்து விட்டதால், சட்டசபையில், பேச விடாமல் தடுப்பதற்காக, சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஒராண்டு என்றும், தற்போது, ஆறு மாதம் என்றும் கூறுகின்றனர். தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்களை, இரண்டு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.தே.மு.தி.க., வளர்ந்து விடும் என்பதால், இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். விஜயகாந்த்தை தண்டிக்க வேண்டும் என, நினைக்கின்றனர். அ.தி.மு.க.,விற்கு, 145 எம்.எல்.ஏ.,க்கள் இருந்த போதும், புகழ்வது போதவில்லை என்று, தே.மு.தி.க.,- எம்.எல்.ஏ.,க்களை விலை பேசுகின்றனர்.

எங்கள் எம்.எல்.ஏ.,க்களை, அலைபேசியில் அழைத்து, கட்சி மாறும்படி அழைக்கின்றனர்.பெரிய கட்சி என, கூறிக் கொள்பவர்கள், சிறிய கட்சிகளை இழுக்க பார்ப்பது கேவலமாக இல்லையா, மக்கள் ஓட்டு போட மறந்தால், இவர்களும் சிறிய கட்சி ஆகி விடுவர், என்பதை மறந்து விடக் கூடாது.மக்கள் இவர்களுக்கு, சரியான நேரத்தில், பாடம் கற்றுக் கொடுப்பர். எதற்கெடுத்தாலும், "மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடக்கிறது; தமிழகத்துக்கு எதுவும் செய்ய வில்லை' என்கின்றனர். அப்படியானால், இவர்கள் ஆட்சியை, மத்திய அரசிடம் ஒப்படைத்து விடுவது தானே, மின்வெட்டால், இருளில் தவிக்கும் தமிழகத்தை, அவர்களாவது மாற்றுவர்களா என, பார்ப்போம். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஒரே கையெழுத்தில், மூடி விட்டதாக தம்பட்டம் அடிக்கின்றனர்.லட்சக்கணக்கான பெண்கள் வாழ்க்கையை சீரழிக்கும், மதுக் கடைகளையும், அதேபோல மூடவேண்டியது தானே.

இலங்கை தமிழர் பிரச்னைக்காக, 2009ல்,லோக்சபா தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அதை, யாரும் கேட்கவில்லை. இனியாவது, துன்பத்தில் வாடும், இலங்கை தமிழர்கள் சிரிக்க வேண்டும். அதற்காக, 2014ல், லோக்சபா தேர்தலை, அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், தே.மு.தி.க.,வும் தேர்தலை புறக்கணிக்கும்.ஒரு ராஜ்யசபா எம்.பி., சீட்டிற்காக, யாரையும் காக்கா பிடிக்கவில்லை. பதவிக்கும், பொருளுக்கும் ஆசைப்பட மாட்டேன். சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதால், நான் அங்கு செல்வதில்லை. மக்கள் முன், மேடையில் பேச எப்போதும் தயாராக இருக்கிறேன். அமைச்சர்கள் என்னுடன், மக்கள் பிரச்னை பற்றி விவாதிக்க தயாரா,இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
lifeon - thiruthuraipoondi,இந்தியா
03-ஏப்-201319:27:19 IST Report Abuse
lifeon saringa captain
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
02-ஏப்-201319:07:55 IST Report Abuse
Eswaran Eswaran தேர்தல் புறக்கணிப்பு என்பது நல்ல முடிவு.கேரி ஆன்.
Rate this:
Share this comment
Cancel
Eswaran Eswaran - Palani,இந்தியா
02-ஏப்-201319:04:31 IST Report Abuse
Eswaran Eswaran இலங்கை தமிழர்களின் பிரச்சினையை இலங்கைத் தமிழ்த் தலைவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.இங்கு நம்ம ஊரிலுள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழ் நாட்டுத் தமிழ்த் தலைவர்களெல்லாம் குரல் கொடுக்கக் கூடாதா? காவிரி வறண்டு விட்டது . கர்நாடகாவிலிருந்து தண்ணீர் வரமாட்டேன் என்கிறது.இங்கு மின்சாரம் உற்பத்தி குறைவாக உள்ளது . அடுத்த மாநிலத்தில் இருந்தாவது வாங்கலாமென்றால் மின் பாதை மத்திய அரசால் தடைப் படுகிறது.இதைப் பற்றி ஆளும் கட்சியை மட்டும் குறை கூறும் மற்ற கட்சிகள் இதற்குக் காரணமான மத்திய அரசைக் கேட்க தயாரில்லை. இப்படி நம்ம பிரச்சினைக்கு வழி தேடாமல் இலங்கைப் பிரச்சினைக்கு என்ன செய்யலாமென்று யோசிப்பதில் காலத்தை வீண் செய்கின்றனர் நம்ம ஊரு கட்சிகள்.
Rate this:
Share this comment
Cancel
Santhakumar Viswanathan - Chennai,இந்தியா
02-ஏப்-201318:53:43 IST Report Abuse
Santhakumar Viswanathan அதிக அழுத்தம் தரும் முடிவு.எனது பாராட்டுக்கள்.அவதுறு வழக்குகளை பார்த்து பயப்படாமல் மக்கள் ப்றேச்னைய பற்றி பேச முன் வர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Satheesh - kanyakumari,இந்தியா
02-ஏப்-201318:32:30 IST Report Abuse
Satheesh விஜயகாந்த் சொல்வதுதான் சரி தமிழர் பிரச்சனை இந்தியா முழுவதும் தெரிய சரியான யோசனை சொல்லி இருக்கார். தைரியம் உள்ள அனைத்து கட்சிகளும் இதை ஏற்று கொள்ளவேண்டும். அடுத்த பிரதமராக ஆசைபடும் ஜெயலலிதா மற்றும் தன் மகனை காப்பாற்ற நினைக்கும் கருணாநிதி இதை செய்வார்களா? தமிழகத்தின் இருட்டை பற்றி யோசிக்காத கட்சிகள் இருக்கும் போது விஜயகாந்த் ஏன் வெட்கப்பட வேண்டும். admk dmk இந்த இரண்டு கட்சிகளையும் தமிழ்நாடை விட்டு விரட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
rajavarmapallavan - Chennai,இந்தியா
02-ஏப்-201318:10:54 IST Report Abuse
rajavarmapallavan விஜயகாந்த் அவர்களே.. உங்களுக்கு துணிவிருந்தால் தனித்து போட்டியிடுங்கள் பார்க்கலாம். நீங்க தனித்து நின்றால் உங்கள் கட்சிகாரர்கள் தொடர்ந்து உங்களோடு இருப்பார்களா என்றும் சிந்தித்து பாருங்க. எனவே உங்கள் கட்சியை காப்பாற்ற நீங்க ஓராண்டுக்கு முன்பு வரை திட்டி கொண்டிருந்த திமுகவோடு கூட்டணி வையுங்கள். இல்லையெனில் சிரஞ்சீவி போல உங்கள் கட்சியை ஏதேனும் கட்சியில் இணைத்து விடுங்கள். நீங்க மேடைல என்ன பேசறீங்கன்னு உங்க கட்சி காரர்களுக்கே புரியல. பொது மக்களுக்கு எப்படி புரியும்? நீங்க தான் தமிழ்ல தடுமாரரீன்களே. உங்கள் தாய் மொழியாம் தெலுங்குல பேசுங்களே. குறைந்த பட்சம் உங்க மக்களுக்காவது புரியும்.
Rate this:
Share this comment
Cancel
sathish - melbourne,ஆஸ்திரேலியா
02-ஏப்-201310:06:42 IST Report Abuse
sathish ஊராட்சி தேர்தலில் நின்னாவே டெபாசிட்டு கிடைக்குமான்னு சந்தேகம்,,, இதிலே பாராளுமன்றத்திற்கா?? எதாலே சிரிப்பதேன்றே தெரியிலே
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
02-ஏப்-201310:04:26 IST Report Abuse
PRAKASH ஏன் புறக்கணிக்கனும். தேர்தல் செலவுக்கு காசு இல்லையா கேப்டன்
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
02-ஏப்-201309:58:47 IST Report Abuse
கோமனத்தாண்டி கருப்பு நிலா நீ அப்படி சொல்ல கூடாது , கூடிய சீக்கிரம் உன்னோட அரசியல் லைப் அம்மாவாசை ஆக போகுது ,
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-201309:23:58 IST Report Abuse
Swaminathan Nath இவர் பேசுவது நடக்காத காரியம், ஏன் தேர்தலை புறகணிக்க வேண்டும்,வெற்றி பெற்று நல்லது செய்யலாம், , உண்மையில் நாட்டின் மீது அக்கரை இருந்தால் , நல்ல தலைவர்களை ஆதரிக்கலாம், எல்லோரும் தன மட்டும் தலைவராக இருக்க வேண்டும் என்றல் ப்ரெசினை தீராது, கொஞ்சம் பொது நலம் வேண்டும்,. DMK , ADMK ,விற்கு மற்றக இவர் வருவர் என எதிர்பார்த்தேன் , அது நடக்க வில்லை, இவர் மற்ற தலைவர்களை அனுசரித்து போக வேண்டும், சட்டசபை election போது admk உடன் கூட்டணி, அனால் ஜெயாவுடன் பேசமாடேன் என இருந்தார், பிடிக்கவில்லை என்றல் கூட்டணி வேண்டாம் என சொல்லி இருக்க வேண்டும், இவர் நிறைய படிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை