E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நெடுஞ்சாலைகளில் உள்ள 125 மது கடைகள் மூடுவதில் சிக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஏப்
2013
23:46

தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும், "டாஸ்மாக்' கடைகளை, மார்ச், 31க்குள் மூடும் படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 125 கடைகள் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் நேற்றும் செயல்பட்டது.

தமிழகத்தில் கடந்த மாதம் வரையில், 6,850 கடைகள் மூலம், மதுபானம் விற்பனை நடத்தப்பட்டு வந்தது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், "டாஸ்மாக்' கடைகள் உள்ளதால், விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.நெடுஞ்சாலையில் உள்ள, டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மார்ச், 31ம் தேதிக்குள், தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளை மூடும் படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, டாஸ்மாக் கடைகளை அதிகாரிகள் கணக்கிட்டனர். இதில், தமிழகம் முழுவதும், 862 டாஸ்மாக் கடைகள் செயல்படுவது தெரிய வந்தது.மாற்றம் செய்ய வேண்டிய கடைகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஊழியர்கள் மூலம் புதிய இடம் தேர்வு செய்யும் பணிகளும் நடந்தன. இதில், மார்ச், 31 வரை, 340 கடைகளுக்கு மட்டுமே, புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடங்களுக்கு, கடைகள் மாற்றப்பட்டன.

ஆனால், 522 கடைகளுக்கு, புதிய இடம் தேர்வு செய்யப்பட வில்லை. இந்நிலையில், கடைகளை மாற்றம் செய்து கொள்ள, ஆறு மாதம் கால அவகாசம் வழங்க கோரி, டாஸ்மாக் நிர்வாக சார்பில், உயர் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தின் மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் கெடு, நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. நேற்று ஏப்., 1ம் தேதி, கடைகள் செயல்படுமா என்ற சந்தேகம், "குடி'மகன் மத்தியில் எழுந்த நிலையில், நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த, 397 கடைகள் மூடப்பட்டு விட்டன.அதே நேரத்தில் அரசியல் கட்சியினரால், பார் டெண்டர் எடுக்கப்பட்டு இருந்த, 125 கடைகள், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்த நிலையில், அக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.
இதில் குறிப்பாக, சேலம் மாநகரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வந்த, 12 கடைகள் வழக்கம் போல் இயங்கின.

டாஸ்மாக் ஊழியர் ஒருவர் கூறியதாவது:தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் கடைகளுக்கு மாற்றாக, ஊழியர்களே புதிய இடங்களில் கடைகளை தேர்வு செய்து, தயார் நிலையில் வைத்துள்ளோம். ஆனால், அவற்றுக்கு அனுமதி வழங்க, கலால் துறை அதிகாரிகள், கடைக்கு, 7,000 ரூபாயும், டாஸ்மாக் அதிகாரிகள், கடைகளுக்கு, 13 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர்.அதை தர மறுக்கும் கடைகளுக்கு ஆய்வு நடத்தி, புதிய கடைக்கு அனுமதி வழங்கவில்லை. அதனால், தான் நெடுஞ்சாலைகளில் வழக்கம் போல் கடைகள் செயல்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.

மெத்தனம் :



சிவகங்கையில், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள, 56 டாஸ்மாக் மதுபானக் கடைகளில், 12 கடைகள் மாற்றம் செய்து, எஞ்சிய, 44 கடைகளை மாற்றாமல் வைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திற்குள், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இவற்றில், 56 டாஸ்மாக் மதுபானக்கடைகள் இயங்குகின்றன. மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், இதுவரை, 12 கடைகளை மட்டுமே அகற்றியுள்ளது. எஞ்சிய, 44 கடைகளை அகற்றுவதில், சுணக்கம் காட்டி வருகிறது.

- நமது நிருபர் -



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran Eswaran - Palani,இந்தியா
02-ஏப்-201319:16:38 IST Report Abuse
Eswaran Eswaran மது பானக் கடைகளின் பார்கள் யார் கைகளில் இருக்கும் என்பது சிறு பிள்ளைக்குக் கூடத் தெரியும்.இந்தக் குடிகாரர்களின் தண்ணிக்காக கோர்ட் உத்தரவை மதிக்காத அரசு விவசாயிகளின் தண்ணீருக்காக கர்நாடக அரசு கோர்ட் உத்தரவை மதிக்கவில்லை என்பது எந்த வகையிலும் நியாயமல்ல. ஈஸ்வரன்,பழநி.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
rajavarmapallavan - Chennai,இந்தியா
02-ஏப்-201318:04:33 IST Report Abuse
rajavarmapallavan மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆக்கபூரவமாக செயல்பட்டு நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வழக்கு தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கும், டாக்டர் ராமதாசுக்கும் எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும் .
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-ஏப்-201316:11:27 IST Report Abuse
தமிழ்வேல் இதில் எந்த சிக்கலும் இல்லை... ஒரேஒரு கையெழுத்து தான் தேவைப்படுகின்றது .. அவ்வளவுதான்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
dharani dharan - Chennai,இந்தியா
02-ஏப்-201315:09:32 IST Report Abuse
dharani dharan சென்னை (ரெட்ஹில்ஸ் புதுநகர்) புறநகரில் டாஸ்மாக் பழைய வாசலை மட்டும் நெடும்சலை பக்கம் இருந்து வலதுபுறம் மாற்றிவிட்டனர். டாஸ்மாக் அதே இடத்தில் செயல்படுகிறது. இது ரெட்ஹில்ஸ் புதுநகர் ஊராட்சியின் நுழைவாயில். 10,000 மக்கள் இந்த வழியை உபயோகிக்க முடியவில்லை. முக்கியமாக பெண்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது. இதில் அரசியல் மற்றும் போலீஸ் பங்கும் உள்ளது. இது தான் இந்தியாவில் சட்டம் (கோர்ட் ஆர்டர்) செயல்படும் விதம். இந்தியாவை ஆள்வது சட்டம் அல்ல சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தான். தினமலர் இந்த கூத்தை வெளிகொணர வேண்டும்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Asokaraj - doha,கத்தார்
02-ஏப்-201310:27:20 IST Report Abuse
Asokaraj செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்ப டாஸ்மாக் சரக்கு வந்து ஊத்துது காதினிலே
Rate this:
1 members
0 members
16 members
Share this comment
Cancel
SIVAKUMAR RAMACHANDRAN - Arifjan ,குவைத்
02-ஏப்-201310:07:09 IST Report Abuse
SIVAKUMAR RAMACHANDRAN ஆமா வெளங்கிரும், டாஸ்மாக் ஊழியர்கள் இடத்தை தேர்வு செய்து வைத்துள்ளார்கள்.டாஸ்மாக் ஊழியர்கள் யாரும் ஊழியர்கள் போல நடப்பது இல்லை. எல்லோரும் கடைக்கு முதலாளி போலத்தான் செயல்படுகிறார்கள். அரசு கடை, விலை நிர்ணயம் முதல் , பார், இடம் எல்லாம் கடை ஊழியர்கள் நிர்னைக்கிரர்கள். உழியர்கள் எவ்வளவு அடிப்பார்கள் என்று சாதாரண மனிதனுக்கும் புரியும். அதிகாரிகளுக்கு புரியாமலா? இருக்கும். முதலில் எல்லா கடையும் மூடனும். டாஸ்மாக் ஊழியர்கள் எல்லோரின் உழைப்பையும் விவசாயம், தொழில் வளத்திற்கு பயன் படுத்த வேண்டும். யார் செய்வார்கள் ?....
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
02-ஏப்-201309:46:42 IST Report Abuse
Baskaran Kasimani அரசியல் கட்சியினர் மிக தைரியமாக நீதிமன்றத்தை எதிர்த்து நிற்ப்பது நீதி மன்றத்துக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையை காட்டுகிறது. இந்த சாராய அரசை நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்ய ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
66 members
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
02-ஏப்-201309:10:44 IST Report Abuse
யமதர்மன் மூடுவதில் ஒன்றும் சிக்கல் இல்லை. இடமாற்றம் செய்வதில் தான் சிக்கல் இருக்கலாம். இருந்தாலும் தற்காலிகமாவாவது அவை மூடப்பட்டிருக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை கர்நாடகா மதிக்கவில்லை என்றால் நமக்கு கோபம் வருகிறதல்லவா?
Rate this:
0 members
0 members
44 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
02-ஏப்-201309:10:17 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் //அரசியல் கட்சியினரால், பார் டெண்டர் எடுக்கப்பட்டு இருந்த, 125 கடைகள், நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்த நிலையில், அக்கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன.//...அரசியல் கட்சிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்..
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
02-ஏப்-201309:05:44 IST Report Abuse
kumaresan.m "அரசியல் பிரமுகர்கள் சட்டத்தை மதிக்க வில்லை அதனால் கடைகள் மூடவில்லை ....எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்று தினமலர் வெளியிட்டு இருந்தால் அப்பகுதி பெண் வாக்காளர்கள் அவர்களுக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டி இருப்பார்கள் ??? ஒரு வேளை அரசியல் வம்பு எதற்கு என்று தினமலர் ஒதுங்கி இருக்க கூடும் " .....உண்மையின் உரைகல் ???
Rate this:
0 members
0 members
31 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.