இந்திய வம்சாவளி பெண்ணை மணக்க விரும்பிய மண்டேலா
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஜோகன்னஸ்பர்க்:தென் ஆப்ரிக்காவில் வசித்த, இந்திய வம்சாவளி பெண், அமீனா கச்சாலியாவை, நெல்சன் மண்டேலா திருமணம் செய்து கொள்ள விரும்பினார், என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தென் ஆப்ரிக்க விடுதலைக்காக, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராடியவர் நெல்சன் மண்டேலா. இதனால், அவர், 27 ஆண்டுகள், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது, 94 வயதாகும் மண்டேலா, நுரையீரல் தொற்று நோய் காரணமாக, பிரிட்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.கடந்த, 90ம் ஆண்டு, சிறையிலிருந்து வெளிவந்த மண்டேலா, அவரது இரண்டாவது மனைவி வின்னியை விவாகரத்து செய்தார். "ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ்' கட்சியின் தலைவர்களில் ஒருவரான யூசுப் கச்சாலியா, காந்தியடிகளின் நெருங்கிய நண்பர். இவரது மனைவி அமீனா. 83. கடந்த மாதம் அமீனா காலமானார்.

மண்டேலா தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், அமீனா தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.இரண்டு குழந்தைகளுக்கு தாயான அமீனா, விதவையாக இருந்தார். அடிக்கடி, அமீனாவின் வீட்டுக்கு வந்த மண்டேலா, அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். "நடுத்தர வயதை தாண்டி விட்டதால், எனக்கு திருமணம் செய்து கொள்வதில் விருப்பமில்லை' என கூறி, மண்டேலாவின் விருப்பத்தை, அமீனா நிராகரித்து விட்டார்.இதையடுத்து மண்டேலா, மொசாம்பிக் நாட்டின் அதிபர் மனைவி கிரேசா மேச்சலை திருமணம் செய்து கொண்டார். அமீனாவின் இந்த கருத்தை, அவரது பிள்ளைகளும் உறுதி படுத்தியுள்ளனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chidambaram - dharmapuri,இந்தியா
04-ஏப்-201320:44:32 IST Report Abuse
chidambaram ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்திய பண்பாடு - அதை இந்த உலகினுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறார், அந்தப் பெண்மணி.
Rate this:
Share this comment
Cancel
vimarsagan - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-201317:12:15 IST Report Abuse
vimarsagan இந்தி்ய பெண்ணிண் உயர்ந்த கலாச்சாரம்
Rate this:
Share this comment
Cancel
Kperiyasamy Kalimuthu - Sivagangai(karaikudi),இந்தியா
02-ஏப்-201315:07:15 IST Report Abuse
Kperiyasamy Kalimuthu மண்டலோ ஒரு தேச விடுதளைக்காக மட்டுமே போராடவில்லை தனிமனித விடுதலைக்காகவும் விதவை மருவாள்வுக்காகவும் பெரும் போராட்டத்தை சந்தித்தவர் அதற்க்கு காந்தியம் ஒரு காரணம் எனும்போது இந்தியனாய் பெருமைப்படுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
02-ஏப்-201311:47:52 IST Report Abuse
Yoga Kannan பெரியவங்க செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரின்னு உலகம் நம்ப வச்சிடுச்சி..அதுவும் அய்யா மாண்டேலே அனுபவிக்க வேண்டிய நேரத்தில் நாட்டுக்காக ....... 27 ஆண்டுகள் . ஆசைக்கு வயதில்லை ....
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
02-ஏப்-201309:05:46 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் காதலுக்கு வயதோ பருவமோ இல்லை என்பது மண்டேலாவின் கூற்றிலிருந்து தெரிகிறது..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்