பணம் படைத்தவர்களுக்கும் பசுமை வீடு: அதிகாரியின் அத்துமீறலால் அவலம்| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (9)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

"பசுமை வீடுகள் பயனாளிகள் தேர்வில், ஊராட்சி ஒன்றிய அதிகாரியின் அத்துமீறலால், வசதி படைத்தோர், அரசு ஊழியர்கள் பலர், பயனாளிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர்' என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட, கலைஞர் வீடு வழங்கும் திட்டம், தற்போதைய ஆட்சியில், பசுமை வீடு என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது. வீடு வசதியில்லாத, பழங்குடியினர் அல்லாத பயனாளிகளுக்கு, இந்த திட்டத்தில், வீடு வழங்குவதுடன், சோலார் மின்வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது. இதனால், விண்ணப்பங்கள் குவிகின்றன.ஆனால், நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், அதிகாரிகளின், அத்துமீறல்களால், வசதி படைத்தோர் பலரும், பயனாளிகளாக இடம் பெற்று வருகின்றனர்.

கிராம ஊராட்சிகளில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்கள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்களிடம் வழங்கப்படும் விண்ணப்பங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு, பரிந்துரைக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வு செய்யப்பட வேண்டும்.இந்நிலை மாறி, இடைத்தரகர்கள், செல்வாக்கை பயன்படுத்தி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம்,

விண்ணப்பங்களை வழங்கி, அவர்களின் நேரடி பார்வைக்கு பின், வீடுகள் ஒதுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளன.இதுகுறித்து, ஊராட்சி தலைவர்களுக்கு எவ்வித தகவலும் தருவதில்லை. வேலைகள் துவங்கிய பின், அதற்குரிய பணத்தை கேட்க மட்டுமே,பயனாளிகள், தலைவரை நாடுகின்றனர். அரசு புறம்போக்கு நிலம், வன நிலம் என, பிரச்னைக்குரிய நிலங்களில், வசதி படைத்தோருக்கும், வீடு கட்ட அனுமதிக்கப்படுவதால், பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக,நெலாக்கோட்டை ஊராட்சியில், நடப்பு நிதியாண்டில், 111 பசுமை வீடுகளும், 88 இந்திரா நினைவு குடியிருப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர், விண்ணப்பங்களை தனியாக ஆய்வு செய்து

Advertisement

வருவதாக கூறப்படுவதால், தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன், ஊராட்சி அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்ட மக்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து,நெலாக்கோட்டை, ஊராட்சி தலைவர் பிரேமலதா கூறியதாவது:வட்டார வளர்ச்சி அலுவலர், பெண் பிரதிநிதிகளை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். பணிக்கான உத்தரவுகளை கூட, ஊராட்சியிடம் வழங்காததால், உண்மையான பயனாளிகளுக்கு வீடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, இவரின் நடவடிக்கையால், நெலாக்கோட்டை பகுதியில், சில, அரசு ஊழியர்களுக்கு மறைமுகமாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு, எங்களிடம் ஆதாரம் உள்ளது. இதனால், வீடு கட்டிய பின் ஏற்படும் சிக்கல்களுக்கும், ஊராட்சியே பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும். இதைக் கண்டித்து, போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

-நமது சிறப்பு நிருபர்-
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rao - Doha,கத்தார்
03-ஏப்-201301:06:19 IST Report Abuse
Rao இப்படிப்பட்ட திட்டங்கள் தீட்டுவதே இவர்கள் கொள்ளை அடிக்க தானே...
Rate this:
Share this comment
Cancel
02-ஏப்-201320:48:03 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க பணம் படைத்தவர்கள் பிச்சைகாரர்களாக இருப்பார்கள் என எண்ணுகிறேன். பாவம். ஒரு வேளை சோத்துக்கு கூட வழியில்லாதவர்கள் அனுபவித்து போகட்டுமே......................
Rate this:
Share this comment
Cancel
Mohammed Azeez - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-201320:05:36 IST Report Abuse
Mohammed Azeez அட பாழாய்ப்போன அரசியல் வாதிகளா... என்னைப்போன்று எத்தனையோ மக்கள் மனைவி மக்களை சொந்தபந்தங்களை பிறந்த மண்ணை விட்டு வந்து இருபது வருட காலமாக சம்பாதித்து இருப்பதற்கு ஒரு குடிசை கூட ஏன் ஒரு சென்ட் இடம்கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வந்தாரை வாழ வைக்குமாம் தமிழகம். அரசியல் முதல் சினிமா வரை வந்தவர்கள்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு பிறந்தவர் எல்லாம் ஏன் இங்கு பிறந்தோம் என்று வெந்து கொண்டிருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
02-ஏப்-201316:32:36 IST Report Abuse
Yoga Kannan எந்த வரைமுறையும் இல்லை ....ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் குறுக்கிடுகள் எல்லாம் இல்லை .....அந்ததந்த ஒன்றிய ஆளும் கட்சி பவர்புல் லீடர்களிடம் தான் இந்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது... அதிகாரிகளை பகடையாக பயன்படுத்துகிறார்கள்... 30,000 -காந்தி தாத்தாக்கல் யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை.... அதில் பங்குகள் வேண்டுமென்றால் அதிகாரிகளுக்கு போய் சேரும்...
Rate this:
Share this comment
Cancel
News Commitor - chennai,இந்தியா
02-ஏப்-201314:33:02 IST Report Abuse
News Commitor இது அரசு வழங்கும் வீடா? அரசியல் கட்சி வழங்கும் வீடா? வீட்டின் மேல், முதல்வரின் படம் ஏன்? நம் நாடு முன்னேற வாய்ப்பே இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
02-ஏப்-201313:54:40 IST Report Abuse
amukkusaamy எல்லாமே கமிஷன் தான் மாமு
Rate this:
Share this comment
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
02-ஏப்-201313:45:14 IST Report Abuse
Sulo Sundar அரசின் உண்மையான நன்மை பயக்கும் திட்டங்கள் கூட பாழாவது இப்படித்தான்.... இது ஒரு சாம்பிள் மட்டுமே. யார் அந்த அயோக்யர்கள் என்பதை கண்டுபிடிச்சு ஊருக்கு மத்தியில் அவர்களை அவமானப்படுத்த வேண்டும்...செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
K. Pitchaimani - Madurai,இந்தியா
02-ஏப்-201311:21:24 IST Report Abuse
K. Pitchaimani மேலாண்மை சரியில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
02-ஏப்-201305:58:57 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எப்படியோ மக்களின் வரிப்பணம் கொள்ளை ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.