இது உங்கள் இடம்| Dinamalar

சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

Added : ஏப் 02, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இது உங்கள் இடம்

மாணவர்கள் பலியாகக் கூடாது!

வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்:
1965ல், மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால், பயன் அடைந்தவர்கள், தி.மு.க.,வினர் தான்.கடந்த, 1967ல், தி.மு.க., மெகா கூட்டணி அமைத்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. இந்தப் பஞ்சமா பாதகத்திற்கு, அரசியல் சாணக்கியர் ராஜாஜியும் துணை போனது தான், கொடுமையிலும் கொடுமை."தமிழகத்தில் விஷக்கிருமிகள் பரவி விட்டன' என்று, காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் சொன்னது, நூற்றுக்கு நூறு உண்மை என்பது, இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் நடத்திய போராட்டம் தான், அன்று, தி.மு.க., ஆட்சிக்கு வரத் தூண்டுகோலாக இருந்தது. இன்று, இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு எதிராகவும், கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம், நிச்சயம் எதிர்மறையான பலனைத் தான் தரப் போகிறது."இலங்கைத் தமிழர்களை கொன்று, பெரும் பாவம் செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பே கிடையாது. என்னை தூக்கில் போடுங்கள். அப்படிச் செய்தால் தான், இலங்கைத் தமிழர்களுக்கு செய்த துரோகத்திற்கு, நல்ல பரிகாரம் தேடினது மாதிரியிருக்கும்' என்று, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, பகிரங்க மன்னிப்பு கேட்கப் போவதில்லை.தனி ஈழம், இலங்கையில் மலரப் போவதுமில்லை; இலங்கை ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவில் பயிற்சி அளிப்பது நிற்கப் போவதுமில்லை.சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள, மகாத்மா காந்தி, மாணவர்களை அழைத்தார்; அதில், எந்த சுயநலப் போக்கும் இல்லை.இன்று இருக்கும் அரசியல் தலைவர்கள், எரிகிற கொள்ளியில், பிடுங்கும் வரை லாபம் என்று எதிர்பார்க்கும், சுயநலவாதிகள். இதை, மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குள்ள நரிகளின் குறுகிய எண்ணத்திற்கு, மாணவர்கள் பலியாகக் கூடாது.

சென்னை ஓட்டு மட்டும் போதாது!

கியூ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கோவையிலிருந்து எழுதுகிறார்:
மின் தடை, தற்போது, 14 முதல், 16 மணி நேரம் வரை அமலில் இருப்பதால், மக்கள் விரக்தியின் உச்சத்துக்கு போக நேரிடும் என்பதை, ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சென்னை வாழ் மக்களுக்கு, இந்த பாதிப்பு இல்லை என்ற செய்தி, அவர்களுக்கு ஆறுதல் தரும். சென்னை, தமிழகத்துக்கு தலைநகரமாதலால், மின் தடை செய்வதில் சலுகைகள் காட்டுவது, ஒத்துக் கொள்கிற விவகாரம் தான்.ஆனால், தற்போது, சென்னையை விட்டு வெளியில் வாழும் மக்கள், கடுமையான மின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அவதி, அதிகரித்து வருகிறது.எனவே, சென்னை மக்களுக்கு, தற்போது அமலில் உள்ள, இரண்டு மணி நேர மின் தடைக்குப் பதிலாக, மூன்று மணி நேரம் மின் தடை என, அமல்படுத்தினால், சென்னையை விட்டு வெளியில் வாழும் மக்களுக்கு, மூன்று, நான்கு மணி நேரம் வரை, கூடுதலாக மின் வினியோகம் செய்ய முடியும்.லோக்சபா தேர்தல் வருகிறது. சென்னை வாசிகளுடைய ஓட்டு மட்டும் போதாது; மற்ற இடங்களில் வாழும் மக்களையும், அனுசரித்துப் போக வேண்டும் என்பதை, ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை!

ஏ.எம்.ஏ.ராஜேந்திரன், காளையார்கோவிலிலிருந்து எழுதுகிறார்:
மத்தியில், காங்., தலைமையில் உள்ள கூட்டணி அரசின் பதவிக் காலம், அடுத்த மே மாதம் வரை உள்ளது. இன்னும், 13 மாதங்கள் உள்ளன.
என்ன தான் பார்லிமென்டில் எதிர்க் கட்சிகள் கூச்சல், குழப்பம், வெளிநடப்பு, தர்ணா செய்தாலும், மத்திய அரசுக்கு கொடுத்து வந்த தங்கள் ஆதரவை, தி.மு.க., வாபஸ் பெற்ற நிலையிலும், மத்திய அரசு கவிழ வாய்ப்பு இல்லை.ஆனால், பார்லிமென்ட் தேர்தலை சந்திக்க தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் இப்போதே தயாராகி வருகின்றன. அதிலும், உ.பி., மாநிலத்தில் ஆட்சி புரியும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தன் கட்சியின் வேட்பாளர்களை, 54 தொகுதிகளுக்கும் அறிவித்து விட்டார்.எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற அடிப்படையில், தேசிய கட்சி முதல், மாநில கட்சி தலைவர்கள் வரை,
பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பமாக உள்ளனர்.இந்தியாவில், இரண்டு அணிகள் முக்கியமானவை. காங்., தலைமையில் ஒரு அணியும், பா.ஜ., தலைமையில் ஒரு அணியும் தான் அவை.இது போக, தற்போது, மாநில கட்சிகளும், நல்ல வளர்ச்சி அடைந்துள்ளன. தமிழகத்தில், கடந்த, 20 ஆண்டுகளாக, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற அடிப்படையில், மாற்றம் ஏற்பட்டுள்ளது.
மத்தியில், காங்., தலைமையில், 10 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்து விட்டது. வரும் தேர்தலில், பா.ஜ., ஆட்சிக்கு வரட்டும். இவர்களுடைய செயல்பாடுகளையும், மக்கள் அறிந்து கொள்ளட்டும்.

போலி டாக்டர்கள் அடாவடி!

கே.ஜே.ஜஹாங்கீர், நகரியிலிருந்து எழுதுகிறார்:
தமிழகத்தில், கைது செய்து துரத்தி அடிக்கப்படும் போலி டாக்டர்கள் எல்லாம், தமிழக எல்லையோரம் ஆந்திராவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஆந்திராவில் போலி மருந்து கடைகளையும், மருத்துவமனைகளையும் ஒன்றாக வைத்து, லட்சக்கணக்கில் சம்பாதிக்க துவங்கி விட்டனர்.ஒரு டாக்டர் எழுதிக் கொடுக்கும், மருந்துச் சீட்டை எடுத்துக் கொண்டு, இங்குள்ள அப்பல்லோ மருந்து கடைக்கு போனால், "அய்யோ இந்த சீட்டை எந்த டாக்டர் எழுதினாரோ, அவர் வைத்திருக்கும் மருந்துக் கடையில் தான் கிடைக்கும்' என்று சொல்கின்றனர்.காரணம், அந்த சீட்டில் எழுதியிருக்கும் மருந்து, அரசு அங்கீகாரம் பெற்ற மருந்து கம்பெனியில் தயாரிக்கப்படுவதில்லை என்று சொல்கின்றனர். உயிரோடு விளையாடும் போலிகள் குறைய வழி இருக்கிறதா?

மண்ணாங்கட்டி குதிரை!

என்.சேகுமகதூம், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
இன்னும், 13 மாதங்களில், பார்லிமென்ட் தேர்தல் வரும் நிலையில், கருணாநிதி, கட்சி ஆதரவை விலக்கி கொண்டதில் வியப்பில்லை; இது, ஒரு அரசியல் நாடகம்.அ.தி.மு.க., - தே.மு.தி.க., பிரிந்த போது, அக்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும், பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கவில்லை.ஆனால், காங்., - தி.மு.க., பிரிவை, இரு தரப்பினரும், பட்டாசு கொளுத்தி, இனிப்பு வழங்கி வரவேற்றுள்ளனர். இந்த லட்சணத்தில் இவர்கள், உறவாக இருந்து, எப்படி ஆட்சி செய்திருப்பர்? நினைத்தாலே பகீரென்றிருக்கிறது.இது போல, இவர்கள், ஐந்து முறை பிரிந்து, ஒன்று சேர்ந்துள்ளனர். இது ஒரு அரசியல் கூத்து.பிரியும் போது, ஒருவருக்கொருவர் ஒப்பாரி வைக்கின்றனர்; சேர்ந்தார்களானால், மக்கள் தான் ஒப்பாரி வைக்க வேண்டும்.
டில்லியில் முகாமிட்டு, வேண்டிய இலாகாவை கேட்டுப் பெறத் தெரிந்த கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்காக, டில்லிக்கு செல்லாமல், இங்கேயே வாபஸ் செய்கிறார்.
இவரே, "டெசோ'வை ஆரம்பித்து, மத்திய அரசைக் கோராமல், ஐ.நா.,விற்கே சென்ற கருணாநிதியும், ஸ்டாலினும், "ஐ.நா.,வில் முறையிட மத்திய அரசு மறுக்கிறது' என்று சொல்வதில், என்ன நியாயம் இருக்கிறது?லோக்சபா தேர்தலுக்காக, மண்ணாங்கட்டியை பிடித்து குதிரையாக்குவது, குதிரை பேரத்திற்காகத் தான்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E.Manoharan - madurai,இந்தியா
03-ஏப்-201320:29:24 IST Report Abuse
E.Manoharan மதுரை ஒத்தகடை ஹை கோர்ட் பெஞ்ச் அருகேயுள்ள நீதி நகரில் மயானத்தில் உள்ள காலியிடத்தில் ஒத்தகடை மற்றும் அதை சுற்றியுள்ள கிரமங்களிளிருந்தேல்லாம் குப்பை மற்றும் சாக்கடை,இறைச்சி கழிவுகளையெல்லாம் சேகரித்து மலைபோல் குவித்துவருவதுடன் ஒருபுறம் தீ வைத்து எரித்துவருவதல், பெரும் புகையுடன் அந்த சுற்றுவட்டாரம் முழுவதுமே பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இவ்வளவுக்கும் அதை சுற்றிலும் நுற்றுக்கணக்கான குடிஇருப்புகளும், பல நுறு வீட்டு மனைகளும் உள்ளன. போதாகுறைக்கு அந்த வளாகத்திலேயே ஒத்தகடை ஊராட்சிக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேல்நிலை தண்ணீர் தொட்டி,மற்றும் நான்கு ஆழ்துளை கிணறுகளும் உள்ளன.அந்த ஏரியாவில் பல ஹை கோர்ட் வழக்கறிஞர்களும்,ஜட்ஜுகளும் குடிஇருந்து வருகின்றனர். அவர்கள் எதையும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அந்த ஏரியாgaga முழுவதும் ஈக்கள் மற்றும் கொசு தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது .அங்கு குடிஇருக்கும் மக்களுக்கு வாந்தி காலரா டெங்கு போன்ற வியாதிகள் ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம், மாசு கட்டுபாட்டு வாரியம் துணிந்து நடவடிக்கை எடுத்து குப்பைகிடங்கை அகற்ற முன்வந்தால் அங்கு குடிஇருக்கும் மக்களுக்கு விமோசனம் கிடைக்கும். துணிந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரும.
Rate this:
Share this comment
Cancel
Krishnamoorthy Caa - madruai,இந்தியா
03-ஏப்-201320:07:24 IST Report Abuse
Krishnamoorthy Caa வைகை வளவன் அவர்களே 1857ல் முதல் இந்திய சிப்பாய் களம் நடந்தது பற்றி நீங்கள் படித்து உண்டா? அன்று இருந்த தலைவர்கள் அதன்பின்பு இல்லை. அதன்பின் 1947ல் சுதந்திரம் வாங்கியது தெரியுமா? இரண்டுக்கும் நடுவில் 90 வருடம். உங்களை போன்றவர்கள் அன்றும், ஆகாத கதைகளை உங்களை போன்று தான் பேசிக்கொண்டுதான் இருந்திருப்பர்கள். சில நேரங்களில் போராட்டகளத்தை ஒரு சில தவறான நபர்கள் திசை மாற்றி கொண்டுபோவார்கள். ஆனால் சரியான இலக்கு இருக்குமாயின் நிச்சயம் அது வெற்றி பெரும். நாளை காட்சிகள் மாறலாம், கட்சிகள் கூட மாறலாம். சம உரிமையை கேட்டு தானே போராட்டம் அந்த போராட்டத்தை திசை மாற்றியது யார். சிங்கள அரசு தானே. போராட்டம் மாறும், போராட்ட களம் மாறும் போராடுபவர்கள் மாறுவார்கள். ஆனால் என்றும் போராட்டம் நிற்பதில்லை. இன்று இந்த மாணவர்கள் போராடவில்லை என்றால், ஒரு மனித பேரழிவை இந்தியா உலகிற்கு தெரியாமல் மறைத்து இருக்கும். இதனை நாள் வரை இலங்கையில் முஸ்லீம்கள் இந்த போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார்கள். மிக பெரிய மனித பேரிழிவு நடந்த போது கூட அரசுக்கு ஆதரவாகத்தான் இருந்தார்கள். இன்றைய நெலைமை என்ன. சிங்களர்கள் தங்களது வெறுப்பை அவர்களை நோக்கி திருப்ப ஆரம்பித்து விட்டார்கள். இந்திய காங்கிரஸ் அரசை பற்றி முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். வடக்கு பக்கம் உள்ள வெளிஉறவு கொள்ள்கை வேறு. தெற்கு பக்கம் உள்ள கொள்கை வேறு. சீனாவுக்கும் நமக்கும் உள்ள பகை என்ன? தலாய்லாமா மற்றும் திபெத் தானே. அதை கண்டு கொல்லாமல் விட்டுவிட்டால் அணைத்து பிரச்சனைகளும் தீரும். பாகிஸ்தானில் தனிநாடு கேட்டு போராடி தலைவர்களை அந்தநாடு தண்டித்த போது இந்தியா ஏன் கண்டிக்க வேண்டும்? பங்களா தேஷ் என்ற நாடு உருவாக யார் காரணம்.? 1987ல் மாலதீவில் உள்நாட்டு கலவரம் வெடித்த பொது இந்திய அரசு ஏன் இந்திய ராணுவத்தை அனுப்பி அதை அடக்கியது?வடக்கு சூடன் ,தெற்கு சூடான் என்று பிரிந்த போது தெற்கு சுடானில் இந்திய அரசு, முதல் ஆளாக சென்று தனது தூதரகதை திறந்தது ஏன் ? தெற்கு சூடனில் உள்ள பேட்ரோல். அதுதான் இலங்கையிலும். காங்கிரஸ் அரசுக்கு ஆதரவான முதலாளிகளுக்கு இலங்கையில் உள்ள கனிமங்கள் தேவை. அதுதான் இலங்கைக்கு எதிராக பேசுவதற்கு கூட மொவுனம் சாதிக்கிறது. புரிந்து கொள்ளுங்கள் மக்களே இந்திய காகிராஸ் அரசு ஒருகண்ணில் சுனாம்புவும் மறு கண்ணில் வெண்ணையும் வைத்திருக்கிறது. இதுவும் ஒருநாள் கடந்து போகும்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-ஏப்-201319:57:33 IST Report Abuse
சு கனகராஜ் காங்கிரசும் திமுகவும் பிரிந்ததற்கு இருவரும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் என்றால் இவ்வளவு நாளும் போலியாக தான் இருந்தார்களா ?
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-ஏப்-201319:55:50 IST Report Abuse
சு கனகராஜ் போலி மருத்துவர்களுக்கு தான் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். உயிருடன் விளையாடுவதை தடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-ஏப்-201319:54:48 IST Report Abuse
சு கனகராஜ் கருணாவிற்கு வளமான பதவிகள் வேண்டும் என்றால் டெல்லிக்கு படை எடுப்பார். பதவிகளின் சுகத்தை அனுபவித்து விட்டு வேண்டாம் என்றால் எந்த குழுவை யும் கூட்டாமல் அதரவு வாபஸ் என்பார்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-ஏப்-201319:53:26 IST Report Abuse
சு கனகராஜ் மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் தேவைதான். 10 வருடங்களாக ஊழலில் திளைத்து வரும் காங்கிரசுக்கும் முடிவு கட்டுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-ஏப்-201319:51:55 IST Report Abuse
சு கனகராஜ் பிரதமர் கனவில் வேகமா வேட்பாளர் களை அறிவித்து விட்டாரோ முலாம் சிங்
Rate this:
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
03-ஏப்-201319:47:27 IST Report Abuse
சு கனகராஜ் மானவர்கலை வைத்து பகடை ஆடுகின்றன கட்சிகள்
Rate this:
Share this comment
Cancel
sitaramenv - Hyderabad,இந்தியா
03-ஏப்-201312:45:36 IST Report Abuse
sitaramenv வைகை வளவன் அவர்கள் மிக தெளிவாக கடிதம் எழுதி உள்ளார். இன்று ஹிந்தி தெரியாமல் அகில இந்திய அளவில் பாதிக்கப்பட்டு இருப்பது தமிழகத்தின் இளைய தலைமுறைதான். .....பள்ளிக்கு சென்று பான் படுத்தப்படும் வயதில் மாணவர்களை அராஜக அரசியலுக்கு இழுத்த பெருமை ......மஞ்சள் துண்டு கட்சிக்கே உண்டு. இது தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மாணவருக்கும் செய்யப்பட துரோகம். இன்றைக்கு உள்ள கழக கண்மணிகளின் குழந்தைகள்.......தலைவர்களின் குழந்தைகள்......ஒப்பிட்டு பார்க்கவும். வீரமணி வெறியரின் பையன் வெளிநாட்டில் பழமொழிகள் பேசி சம்பாதிக்கிறான்.....மொழிவெறிக்கு உள்ள ஜால்ராக்கள் பட்டியல் ஒன்று உண்டு..........நன்னன் போன்ற போலி தமிழ் விற்கும் ஆசிரியர்கள்.....வைரமுத்து போல கனிமொழியை புகழும் கபடமான ஞர்கள்........றி சுடாளினின் மகன்கள் மஞ்சள் துண்டின் மற்ற குடும்ப உறுப்பினர்கள்........இனத்துரோகி பேராசிரியர் என்று அடைமொழி கொண்டு பெரிய ஏமாந்த ஏமாற்று பேர்வழி முதியவர் அன்பழகனின் வாரிசுகள் அனைவரும் ஹிந்தி, ஆங்கிலம், போன்று பழமொழிகளை கற்று வெளிநாடுகளில் உலா வருகிறார்கள். நண்பர் கூறியுள்ளது போல் இந்த சாக்கடைகளை பதவிக்கு அரங்கேற்றிய பெருமை மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு உரித்தானது........மூதறிஞர் என்ற பெருமை மிக்கவர்.......பின்னாளில் தாம் செய்த முட்டாள்தனத்துக்கு வருந்தினார் என்பார்கள். வருந்தி என்ன செய்வது. நதியில் நஞ்சை மற்றொரு காந்தியோ கலந்து விட்டார்கள். இனி எப்படி விமோசனம் கிடைக்கும். மற்றொரு காந்தியோ ராஜாஜியோ மீண்டும் இந்தியாவுக்கு வேண்டாம். இளைஞர்கள் அனைவரும் பல மொழிகளையும் கற்று குறிப்பாக ஹிந்தி ஆங்கிலம் மற்றும் அண்டைமாநில மொழிகளை கற்றும் நல்ல சமூக அரசியல் சூழ்நிலைகளை உருவாக முயல வேண்டும். விவேகானந்தரை போல் ஒரு இளைஞர்களை கவரும் மகான் தோன்றினால்தான் உண்டு. ஒவ்வொரு இளைஞரும் மொழி பற்றி.....தாங்கள் எப்படி ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று சிந்தித்து செயல்பட துவங்கினால் போதும். இந்த எத்தர்களிடன் கோட்டம் அடங்கும்.
Rate this:
Share this comment
Krish - Madurai,இந்தியா
03-ஏப்-201320:59:51 IST Report Abuse
Krishவிவேகானந்தரை போல் ஒரு இளைஞர்களை கவரும் மகான் தோன்றினால்தான் உண்டு. ஒவ்வொரு இளைஞரும் மொழி பற்றி.....தாங்கள் எப்படி ஏமாற்றப்பட்டுள்ளோம் என்று சிந்தித்து செயல்பட துவங்கினால் போதும். இந்த எத்தர்களிடன் கோட்டம் அடங்கும். sitaramen உங்கள் கருத்து அருமை....
Rate this:
Share this comment
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஏப்-201309:08:13 IST Report Abuse
Tamilnesan தமிழ் நாடு காங்கிரஸ் குழப்பத்தின் உச்ச கட்டத்தில் உள்ளது........ அதற்கு உதாரணம், காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்தது என்று சொன்னவுடன் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து மகிழ்ந்தார்கள். பிறகு, டெல்லியில் நாடகம் அரங்கேறி, காங்கிரஸ் திமுக கூட்டணி மீண்டும் தொடங்கியது என்றவுடன் மீண்டும் பட்டாசு வெடித்து, இனிப்புகள் கொடுத்து மகிழ்ந்தது தமிழ்நாடு காங்கிரஸ். மொத்தத்தில், காங்கிரஸ் திமுக கூட்டணி நூறு சதவிதம் சந்தர்ப்ப வாத கூட்டணி. மேலும், ஒரு வேளை, காங்கிரஸ் திமுக கூட்டணி முறிந்து தேர்தலில் தனியாக போட்டியிட நேர்ந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக காங்கிரசும், திமுகவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி சேறு வாரி பூசிகொள்வார்கள். மக்களுக்கு, யார் குற்றவாளி என்பது தெரிந்து இருக்கும். ஆக மொத்தத்தில், இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட வேண்டும். அது தான், தமிழ்நாட்டிற்கு நல்லது. ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை