பழங்குடி மக்களின் மேம்பாடு: ஒரு கோடி நிதி ஒதுக்கீடு :அரசு முதன்மை செயலாளர் தகவல்| Dinamalar

தமிழ்நாடு

பழங்குடி மக்களின் மேம்பாடு: ஒரு கோடி நிதி ஒதுக்கீடு :அரசு முதன்மை செயலாளர் தகவல்

Added : ஏப் 02, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கோவை:""பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக'' அரசு முதன்மை செயலாளர் தெரிவித்தார். தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறையின் சார்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான சிறப்பு இசை பயிற்சி முகாம் நேற்று கோவை இசை கல்லூரியில் துவங்கியது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார்.
இந்த முகாமை அரசு முதன்மை செயலாளர் மற்றும் கலை பண்பாட்டு துறை ஆணையர் ஜவகர் பேசியதாவது: தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் வாழ்கை தர மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் ஒரு பகுதியை பயன்படுத்தி 32 மாவட்டங்களில் கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஆதிதிராவிடர், பழங்குடியினர்கள் பங்கேற்று வருகின்றனர்.தற்போது இந்த கலை விழா 20 மாவட்டங்களில் நிறைவு பெற்றுள்ளது. மீதம் உள்ள மாவட்டங்களிலும் தொடர்ந்து நடக்க உள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று( நேற்று) பழங்குடி, தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 45 நாட்கள் இசை பயிற்சி வழங்கப்படுகிறது.பயிற்சியில் பங்கேற்கும் மாணவர்கள் இதனை நன்கு பயன்படுத்தவேண்டும். கலைத்துறையில் ஈடுபாடு இல்லாமல் சாதிக்க முடியாது. மேலும், அரசு பள்ளிகள், எஸ்.எஸ்.ஏ., பயிற்சி பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பயிற்சியை மிகுந்த ஈடுபாட்டுடன் மேற்கொண்டால் வேலைவாய்ப்பை பெறலாம். இவ்வாறு ஜவகர் பேசினார்.பயிற்சி முகாமில் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தேர்வு பெற்ற 50 மாணவர்கள் தருமபுரி, ஊட்டி, நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றுள்ளனர்.இம்மாணவர்களுக்கு குரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், புல்லாங்குழல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் இத்துவக்கவிழா நிகழ்ச்சியில் கலை பண்பாட்டு துறை சேலம் மண்டல உதவி இயக்குநர் ஹேமாநாதன், இசை வல்லுனர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை