E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காங்கிரஸ் பொதுக்கூட்டங்கள் ரத்து ஏன்?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 ஏப்
2013
23:20

மாணவர்கள் போராட்டம் எதிரொலியால், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், வாசன் ஆகிய இருவரும் பங்கேற்க இருந்த, பொதுக்கூட்டங்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெற இருந்த தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கல்லூரி மாணவர்களுக்கு, தேர்வு துவங்கிய பின், தமிழகம் முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்த, அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.
போராட்டம்: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக, தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. திருச்சியில், லோக்சபா தொகுதிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்லும் வழி நெடுகிலும், ஞானதேசிகன், வாசன் ஆகிய இருவரின் உருவப்படங்கள் கொண்ட வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த வரவேற்பு பேனர்களை திருச்சி மாவட்ட மாணவர்கள் கிழித்து எறிந்தனர். தட்டிக் கேட்க சென்ற காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு, அடி, உதை விழுந்தது. இதையடுத்து, காங்கிரசார் திரண்டு வந்து, உருட்டுக்கட்டைகளால், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர் உட்பட, 20 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காங்கிரசார் பொதுக்கூட்டங்களை நடத்தினால், மாணவர்கள் போராட்டம் தொடரும் என்ற நிலை உருவாகியுள்ளது. மாணவர்கள் போராட்டம் நடத்த முன் வந்தால், அவர்கள் மீது தாக்குதல் நடத்த காங்கிரசார் முற்படுவர். இதனால், தேவையில்லாமல் மாணவர்கள், காங்கிரசார் மோதல் உருவாகும். இந்த மோதல் சூழ்நிலை உருவாகாமல் இருப்பதற்காகவும், மாணவர்கள் எந்த காரணத்தை கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த காங்கிரஸ் பொதுக்கூட்டங்களை, காங்.,தலைவர் ஞானதேசிகன் ரத்து செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

கடந்த, 30ம்தேதி, மயிலை மாங்கொல்லையில், மத்திய அமைச்சர் சிதம்பரம் பங்கேற்க இருந்த, பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கூட்டம் நடத்த, சிதம்பரம் ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் ஏற்பாடு செய்தார்.

கடும் அதிருப்தி: ஆனால், அந்த அரங்கத்தில், வேறொரு நிகழ்ச்சி நடந்ததால், அங்கு கூட்டம் நடத்த முடியவில்லை. இரு முறை பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதால், சிதம்பரம் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதற்கிடையில், சென்னையில் தனியாக பொதுக்கூட்டத்தை நடத்தலாமா என, சிதம்பரம் ஆதரவாளர்கள் ஆலோசித்து வருகின்றனர். கும்பகோணத்தில், வரும், 6ம் தேதி வாசன் பங்கேற்க இருந்த பொதுக்கூட்டம் மற்றும் ஞானதேசிகன் பங்கேற்க இருந்த ஈரோடு, சேலம், நாமக்கல், லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாளை (4ம்தேதி) நடைபெற இருந்த தேனி, மதுரை, திண்டுக்கல் லோக்சபா தொகுதிகளின் ஆலோசனைக் கூட்டமும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: திருச்சியில் நடந்த மோதல் தொடர்பாக, காங்கிரசார் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டம் நடத்தினால், மாணவர்களை, சில இயக்கங்களின் தலைவர்கள் தூண்டி விடுகின்றனர். குறிப்பாக, தமிழக காங்கிரஸ் கட்சி நடத்தும் கூட்டங்களில், வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற சில இயக்கங்கள் திட்டமிட்டுள்ளன. அத்திட்டத்தை முறியடிக்கும் வகையிலும், மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டும் காங்கிரஸ் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற பின், காங்கிரஸ் கூட்டங்களை, தொடர்ச்சியாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - Chennai,இந்தியா
03-ஏப்-201317:18:44 IST Report Abuse
Tamilan நம்ம தமிழ்நாட்டுல காங்கிரஸ் என்ற பெயரே இருக்கக்கூடாது ......
Rate this:
3 members
0 members
6 members
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
03-ஏப்-201316:58:03 IST Report Abuse
Linux இப்பவே இப்படின்னா...2014 தேர்தல்ல வேட்பாளரா நிக்க போற ஆளுங்க நிலைமை?
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
03-ஏப்-201307:49:21 IST Report Abuse
ravi ramanujam r காங்கிரஸின் எதிர்காலம் தெளிவாக தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்கு அவர்கள் செய்த துரோகம் எதிர் வரும் தேர்தலில் பிரதிபலிக்கும். அநேகமாக அதன் பாதிப்பு திமுகவிற்கும் இருக்கும்.
Rate this:
3 members
0 members
7 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
03-ஏப்-201304:09:36 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இன்னும் கொஞ்சநாள்தான்.... தமிழ் நாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியே மொத்தமாக ரத்து ஆகிவிடும்....
Rate this:
14 members
2 members
82 members
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
03-ஏப்-201301:54:19 IST Report Abuse
nimmi We can come to a conclusion that both the Congress Govt.at the Centre and the Congress leaders are living in "Fools Paradise" as far as Sri Lankan Tamils' issue. Who will wake them up?
Rate this:
13 members
0 members
24 members
Share this comment
Cancel
R.Subramanian - Chennai,இந்தியா
03-ஏப்-201301:28:18 IST Report Abuse
R.Subramanian காங்கிரஸ் கட்சி மாணவர்கள் போராட்டத்தை சந்திக்க வேண்டும் விடுதலை புலி ஆதரவாளர்கள் வன்முறையை தூண்டினாலும் அதை சாத்வீக (அகிம்சை) முறையில் காங்கிரஸ் எதிர்கொள்ளவேண்டும் அப்போது தான் பொது மக்களுக்கு இந்த வன்முறை கூட்டத்தின் அராஜகங்கள் பற்றி தெரியும் மக்களும் விடுதலை புலி ஆதரவாளர்களின் வன்முறையை வெறுத்து ஒதுக்குவார்கள் மேலும் காங்கிரஸ் இலங்கையில் விடுதலை புலிகளின் செய்த அநியாய அக்கரமங்களை பொது கூட்டம் போட்டு மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்... இல்லையென்றால் தமிழகம் இந்த வன்முறை கூட்டத்தின் பிடியில் சிக்கி சீர் அழிந்து விடும்
Rate this:
132 members
1 members
115 members
Share this comment
ThangaVel - kumarapalayam,இந்தியா
03-ஏப்-201308:52:39 IST Report Abuse
ThangaVelஅகிம்சையை காங்கிரஸ் கைவிட்டதுதானே நாட்டுக்கு கேடாய் முடிந்துவிட்டது .இன்று காங்கிரஸ்காரர்களே தடியை எடுத்து கொண்டு வீதியில் வளம் வருகிறார்களே ...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Nalam Virumbi - Chennai,இந்தியா
03-ஏப்-201317:51:37 IST Report Abuse
Nalam Virumbiநூற்றுக்கு நூறு உண்மை. தமிழ் மக்கள் இலங்கையில் சீரழிந்ததற்கு பிரபாகரனே காரணம். அவரது தீவிரவாதமே இத்தனை மக்கள் இழப்பிற்கும் காரணம். அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை நான் ஞாயப் படுத்தவில்லை. ஆனால் மூல காரணம் யார் என்று அனைவரும் உணர வேண்டும். தமிழர்களே இனியாவது ஈழ மக்கள் தங்கள் பிரசினைகளை அவர்களே அரசுடன் பேசி தீர்த்துக் கொள்ள விடுங்கள்....
Rate this:
7 members
0 members
3 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
03-ஏப்-201301:28:06 IST Report Abuse
Vettri மானமும் இன உணர்வுள்ள எந்த தமிழரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள். இப்போது இருக்கும் கூட்டமும் காசிற்கு மாரடிக்கும் கூட்டம்.
Rate this:
51 members
0 members
113 members
Share this comment
Cancel
maha - bangalore,இந்தியா
03-ஏப்-201301:03:59 IST Report Abuse
maha எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் சொந்த பலம் , சொந்த அரசியல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் , இரண்டு கழகங்கள் தயவில் பிழைப்பு நடத்தியவர்கள் , திடீரென்று அநாதை ஆக்க பட்டுள்ளார்கள் . வாசன் , சிதம்பரம் போன்றவர்கள் நினைத்து இருந்தால் , போரை , இழப்பை ஓரளவேனும் தடுத்து இருக்க முடியும் . எப்படியும் நம் பிழைப்பு ஓடும் . தமிழன் முழிக்க மாட்டான் என்ற தவறான எதிர்பார்ப்பில் இருந்து விட்டார்கள்.
Rate this:
40 members
0 members
131 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
03-ஏப்-201300:57:06 IST Report Abuse
Thangairaja மாணவர்கள் தேர்வு எழுத கல்லூரிக்கு சென்ற பின் கூட்டங்கள் நடத்தினால் மாணவர்கள் விட்டு விடுவார்களா.....மாணவர்கள், இளைஞர்களின் கோபத்தை தணிக்க தங்கள் தலைமையை வலியுறுத்தி உருப்படியாக ஈழத்தமிழர், பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் தாக்கபடுவதிலிருந்தும் சரியான நடவடிக்கைக்கு முயற்சிக்க வேண்டும்.
Rate this:
9 members
0 members
94 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
03-ஏப்-201300:45:57 IST Report Abuse
Sekar Sekaran இனி காங்கிரசுக்கு என்று ஒருவரும் இருக்கவே மாட்டார்கள். அந்த அளவுக்கு காங்கிரசின் மதிப்பு தமிழகத்தில் கீழிறக்கபட்டுள்ளது. மாணவர்களில் ஒரே ஒருவர்கூட காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.வெளியே வரக்கூட பயப்படும் அளவுக்கு காங்கிரஸ் உள்ளது மிக மிக கேவலமே..நல்ல தலைமை இல்லை..கோஷ்டி மோதல்..இருக்கும் ஒரு சிலரில் அவ்ளோ கோஷ்டிகள்..
Rate this:
24 members
140 members
107 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.