DMDK workers upset over U turn of Vijayakanth's poll boycott | விஜயகாந்த் "தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பில் "பல்டி': தொண்டர்கள் ஏமாற்றம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் "தேர்தல் புறக்கணிப்பு' அறிவிப்பில் "பல்டி': தொண்டர்கள் ஏமாற்றம்

Added : ஏப் 02, 2013 | கருத்துகள் (68)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
DMDK workers upset over U turn of Vijayakanth's poll boycott

சென்னையில் நேற்று முன்தினம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த, தே.மு.தி.க., கண்டன பொதுக் கூட்டம், முறையான திட்டமிடல் இன்றி, சொதப்பலாக முடிந்தது. இதனால், கட்சி தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள், ஆறு பேர், சட்டசபையில் இருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டதை கண்டித்து, பல்வேறு மாவட்டங்களில், கடந்த, 30ம் தேதி, கட்சி சார்பில், பொதுக்கூட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, சென்னை எம்.ஜி.ஆர்., நகரில், நேற்று முன்தினம், கண்டன பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்தை வரவேற்க, அவருடைய விருகம்பாக்கம் வீட்டு வாசலில் இருந்து, எம்.ஜி.ஆர்., நகர் மேடை வரை, இருபுறமும், கடைகள் அனைத்தையும் மறைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், மின்விளக்கு மற்றும் கட்சி பேனர்கள் வரிசையாக, ஏராளமான அளவில், வைக்கப்பட்டிருந்தன; இரவு, 7:00 மணிக்கு கூட்டம் துவங்கியது.

இரவு, 8:00 மணிக்கு...: விஜயகாந்த் வருவதற்கு முன், மாவட்ட நிர்வாகிகள் பேசினர். நேரம் கடந்துக் கொண்டே இருந்ததால், எம்.எல்.ஏ.,க்கள் பேச வைக்கப்பட்டனர். எம்.எல்.ஏ.,க்கள், பார்த்திபன், வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்த போது, பண்ருட்டி ராமச்சந்திரன் வந்தார். அவரை தொடர்ந்து, 8:10 மணிக்கு, விஜயகாந்த் மேடைக்கு வந்தார். "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் அமர்வதற்காக, முன் வரிசையில், நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. ஆனால், சந்திரகுமார், பார்த்தசாரதி, நல்லதம்பி, முருகேசன் ஆகியோர் மட்டுமே, அங்கு அமர்ந்திருந்தனர். விஜயகாந்த் வந்த, சில நிமிடங்களுக்குப் பிறகே, செந்தில்குமார், அருட்செல்வன் ஆகியோர் வந்தனர்.

வேட்டியை இழுத்து...: நேரம் கடந்துக் கொண்டிருக்கிறது என்பதற்தற்காக, பேச்சை நிறுத்துமாறு, வெங்கடேசனிடம், விஜயகாந்த் சைகை காட்டினார். அவர் கண்டு கொள்ளாததால், மாவட்ட செயலர்கள் பின்பக்கமாக, அவரது வேட்டியை பிடித்து இழுத்து, பேச்சை முடித்து வைத்தனர். அவரைத் தொடர்ந்து, பண்ருட்டி ராமச்சந்திரன், பத்து நிமிடங்கள் பேசினார். 8:20 மணிக்கு, விஜயகாந்த் பேசத் துவங்கினார். எம்.எல்.ஏ.,க்கள், "சஸ்பெண்ட்' விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து, விஜயகாந்த் அறிவிப்பார் என்ற ஆர்வத்துடன், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர். ஆனால், அதைப்பற்றி விஜயகாந்த் விரிவாக பேசவில்லை. சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்களை பேசவிடாமல் தடுப்பதற்காகவே, "சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர் என்று மட்டும் கூறினார். மின்வெட்டு, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம், மதுபான கடைகள் விவகாரத்தை திரும்ப, திரும்ப பேசிக் கொண்டிருந்தார்.

சப்ஜெக்ட்டை மறந்தார்: திடீரென, இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுத்த விஜயகாந்த், "லோக்சபா தேர்தலை, தே.மு.தி.க., புறக்கணிக்கும்' என, தடாலடியாக அறிவித்தார். உடனே, அதை மறந்துவிட்டு, "லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு பாடம் கற்பிப்பேன்; பிரச்சாரம் செய்ய, மக்களை சந்திக்க வரும்போது, இன்னும் பல விஷயங்களை பேசுவேன்' என்றார். இதனால், தொண்டர்கள் குழப்பம் அடைந்தனர். தொடர்ந்து பேசியவர், "வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு எதுவும் செய்யவில்லை. ஆய்வு என்ற பெயரில், அமைச்சர்கள், டூர் சென்றனர்' என்றார். அப்போது, மேடையின் வலது புறம், போதையில் இருந்த தொண்டர் ஒருவர், "நான், தஞ்சாவூரில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு, அரசு நிவாரணம் வழங்கவில்லை' என, குரல் எழுப்பினார். உடனே விஜயகாந்த், "அ.தி.மு.க., உறுப்பினர் அடையாள அட்டை வாங்குங்கள். அதைக் காட்டினால், உங்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்' என்றார். அதற்கு அந்த தொண்டர், எதையோ சொல்ல வர, அருகில் இருந்த மற்ற தொண்டர்கள், அவரது வாயை மூடினர். தொடர்ந்து சம்மந்தமே இல்லாமல், சினிமா விஷயங்கள் குறித்தும், விஜயகாந்த் பேசினார்.

வடிவேலு நடித்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு நடித்த, "காதில் ரத்தம் வரும்' நகைச்சுவை காட்சியை விஜயகாந்த் நினைவு கூர்ந்தார். "சட்டசபைக்கு சென்றால், எனக்கும் இந்த நிலை ஏற்படும் என்பதால், அங்கு செல்லவில்லை' என்றார். "தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் ஜெயலலிதா எழுதி வைத்து படிப்பார். படித்த பிறகு, அந்த காகிதத்தை, ஒன்றன் பின் ஒன்றாக, கீழே போட்டபடி இருப்பார். ஆனால், நான் மனதிற்கு பட்டதை மட்டுமே பேசுவேன்' எனக் கூறிய விஜயகாந்த், சொன்னதையே சொல்லி, தொண்டர்களை சோர்வடைய வைத்தார். விஜயகாந்த் பேச்சைக் கேட்டு, முன்வரிசையில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் நெளிந்தனர். பின் வரிசையில் இருந்த, எம்.எல்.ஏ.,க்கள், ஒருவரை ஒருவர் பார்த்து, சிரித்தபடி இருந்தனர். இரவு, 9:00 மணிக்கு விஜயகாந்த், "பேச்சை முடித்துக் கொள்ளட்டுமா?' என, மேடையில் இருந்தவர்களிடம் கேட்டார். உடனே, எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, அவரிடம் சென்று, தனியார், "டிவி' சேனல்களில், "தே.மு.தி.க., கட்சி, லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு' என, "பிளாஷ்' செய்தி போடுகின்றனர்' என, கிசுகிசுத்தார். சுதாரித்த விஜயகாந்த், "தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும், லோக்சபா தேர்தலை புறக்கணித்தால், தே.மு.தி.க.,வும் புறக்கணிக்கும்' எனக் கூறி, குழப்பத்துடன் பேச்சை முடித்தார். முறையான திட்டமிடல் இல்லாததால், ஒரு மணிநேரம் கூடுதலாக பேச, போலீஸ் அனுமதி இருந்தும் "சஸ்பெண்ட்' எம்.எல்.ஏ.,க்களுக்கு கூட, பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த தொண்டர்கள், ஏமாற்றத்துடன் புறப்பட்டனர்.

- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (68)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Eswaran Eswaran - Palani,இந்தியா
05-ஏப்-201308:13:58 IST Report Abuse
Eswaran Eswaran மக்களுக்கு லோக்சபா தேர்தலில் நன்றாக பொழுது போகும் போல இருக்குதே ஈஸ்வரன்,பழனி.
Rate this:
Share this comment
Cancel
Sundeli Siththar - Hyderabad,இந்தியா
04-ஏப்-201300:41:28 IST Report Abuse
Sundeli Siththar வடிவேல், ஒரு பெண்ணிடம், திட்டு வாங்குவார்.. அதன் பின்னே பிரபுதேவாவும் திட்டு வாங்கி வருவார்... காதில் ரத்தம் வழியும்... அதே போல, தவறு செய்து தானும் மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவிடம் திட்டு வாங்குவிடுவோமோ என்ற பயத்தை சொல்கிறார் போலும்... ஒப்புக் கொண்டால் சரி...
Rate this:
Share this comment
Cancel
MSG - Kanagawa,ஜப்பான்
04-ஏப்-201300:18:27 IST Report Abuse
MSG விஜயகாந்த் பேசியதை தொலைக் காட்சியில் பார்த்தேன். அதற்கு பின்பு நான் பரிதாபப் படுவது தே மு தி க வின் தொண்டர்களைப் பற்றிதான். சரியான சொதப்பல். இது மாதிரி ஒரு நாலு கூட்டம் ... வேண்டாம் வேண்டாம். இரண்டு கட்சிக் கூட்டங்களில் வி.காந்த் பேசினால் சத்தியமா அவர் கட்சிக்கு வேற யாரும் ஆப்பு வைக்கணும்'கிறது அவசியம் இல்லாம போய்டும்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
03-ஏப்-201316:06:35 IST Report Abuse
Venkatesan Jayaraman கேப்டன் நீயும் குழம்பி அடுத்தவனையும் ஏன் குழப்புறே
Rate this:
Share this comment
Cancel
shaan - chennai,இந்தியா
03-ஏப்-201315:59:27 IST Report Abuse
shaan கட்சியின் தலைவர் விஜயகாந்தை வரவேற்க, அவருடைய விருகம்பாக்கம் வீட்டு வாசலில் இருந்து, எம்.ஜி.ஆர்., நகர் மேடை வரை, இருபுறமும், கடைகள் அனைத்தையும் மறைத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில், மின்விளக்கு மற்றும் கட்சி பேனர்கள் வரிசையாக, ஏராளமான அளவில், வைக்கப்பட்டிருந்தன ஆமா ..............................ஆமா அங்க வந்தா தக்காளி சட்னி ...உனக்கு வந்தா ரத்தமா ...admk வச்சா விளம்பரம் .. அவரு வச்ச இடையூறா
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar Guru Mohana - Kabul,ஆப்கானிஸ்தான்
03-ஏப்-201315:48:25 IST Report Abuse
Saravana Kumar Guru Mohana உங்கள் பேச்சில்லியே ஒரு தெளிவு இல்லையே..அப்றம் எப்படி நாட்டு மக்களுக்கு நல்லது செய்விங்க..???
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
03-ஏப்-201315:17:58 IST Report Abuse
T.C.MAHENDRAN எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்து தமிழ்நாட்டை பதினோரு வருடங்கள் ஆண்டது ""வரலாறு "". ஆனால் கருப்பு எம்.ஜி.ஆர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட விஜயகாந்த் கட்சி ஆரம்பித்ததே ""கோளாறு "".
Rate this:
Share this comment
Cancel
Anwar ali - havana,கியூபா
03-ஏப்-201315:16:57 IST Report Abuse
Anwar ali சார் நடிச்ச விருதகிரி படமே தேவலாம் போல இருக்கு .
Rate this:
Share this comment
Cancel
Kavee - Jeddah,சவுதி அரேபியா
03-ஏப்-201315:16:30 IST Report Abuse
Kavee அய்யோ .... என்ன பண்ணுவது கடவுளே... கேப்டன் தேர்தலை புறக்கணித்து விட்டார் தமிழ் நாட்டு மக்கள் கொந்தளிப்பு தமிழ் நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையில் இனி வரும் காலங்களில் யார் பேசுவார்? பிரதம மந்திரி வேட்பாளராக இனி யாரை அறிவிப்பது .... தமிழ் மண்ணின் வாசம் இனி அழிந்து விடுமே ... பாவம் தமிழ் மக்கள் எங்கே போய் அவர்களின் குறைகளை சொல்வார்கள் ...... கொடுமைடா சாமி யாரு இப்போ நீ வரலேன்னு அழுதா ... அட நீ என்ன செய்தே இதுவரை ..... இனிமேலும் என்ன செய்றதா உத்தேசம் ....
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
03-ஏப்-201315:13:36 IST Report Abuse
Rangarajan Pg எனக்கென்னவோ ராமதாஸ், திருமாவளவன், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, ஜெயலலிதா, கருணாநிதி, அவருடைய வாரிசுகள் இந்த விஜயகாந்த் போன்ற எல்லோரும் எதிர்காலத்தில் சிரிப்பு அரசியல்வாதிகளாக முடிவெடுத்து அதை நோக்கி செல்கிறார்களோ என்று தோன்றுகிறது. இவர்களுடைய பேச்சும் செயலும் எல்லாம் சுத்த காமடியாக உள்ளது. ஆனால் இந்த அரசியல்வாதிகள் செய்வது எல்லாம் மிக காஸ்ட்லியான காமடி. பிறகு,,, கோடிகணக்கில் லஞ்சம் பெற்று கொண்டல்லவா காமடி காட்சிகள் அரங்கேற்றுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை