Some of the congress MLAs are not aware about history: Jaya | காங்கிரசார் பலருக்கு அக்கட்சி வரலாறு தெரியவில்லை: ஜெயலலிதா - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காங்கிரசார் பலருக்கு அக்கட்சி வரலாறு தெரியவில்லை: ஜெ.,

Updated : ஏப் 04, 2013 | Added : ஏப் 02, 2013 | கருத்துகள் (128)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Some of the congress MLAs are not aware about history: Jaya

சென்னை: ""காங்கிரசில் உள்ள பலருக்கு, அக்கட்சி வரலாறு தெரியவில்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில், நேற்று முன்தினம், உள்ளாட்சித் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய, அத்துறை அமைச்சர் முனுசாமி, "நாடு விடுதலை அடைந்ததும், காங்கிரஸ் கட்சியை கலைத்து விட வேண்டும்' என, காந்தி கூறியதாகத் தெரிவித்தார். இதற்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோர், "காந்தி அப்படிக் கூறவில்லை' என கூறினர்.


இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில் நேற்று பேசியதாவது: மகாத்மா காந்தி, 1948, ஜன., 30ம் தேதி கொல்லப்பட்டார். அதற்கு ஒரு நாள் முன், காங்கிரஸ் கட்சியின் வரைவு சட்ட விதிகளை அவர் எழுதினார். இச்சட்ட விதிகள், காந்தி கொலைக்கு பிறகு, காங்கிரஸ் பொதுச் செயலர் ஆச்சார்யா ஜுகல் கிஷோரால், 1948, பிப்., 7ம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், மகாத்மா காந்தியின் ஒருங்கிணைந்த பணிகள் என்ற புத்தகத்தில் உள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையால் வெளியிடப்பட்ட புத்தகத்துக்கு, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னுரை எழுதிஉள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள வரைவு சட்ட விதிகளில், "காங்கிரஸ் காலாவதியாகி விட்டது' என, காந்தி எழுதியுள்ளார். மேலும், "பல காரணங்களுக்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, காங்கிரஸ் அமைப்பை, கலைத்து விடுவது என, முடிவு செய்கிறது' என்றும், மகாத்மா காந்தி எழுதியுள்ளார். இது, அதற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியிலே உள்ள பலருக்கு, காங்கிரஸ் பற்றிய வரலாறே தெரியாமல், பேசிக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raj tbm - telok blangah,சிங்கப்பூர்
03-ஏப்-201318:02:45 IST Report Abuse
raj tbm இப்போதுள்ள காங்கிரஸ்காரர்கள் அடிமைகளல்ல பெருச்சாளிகள். தியாகிகள் மதிக்கப்படுவதில்லை மறந்துவிட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
samraj - ulaanbaatar ,மங்கோலியா
03-ஏப்-201314:00:09 IST Report Abuse
samraj நண்பர் A B C D அவர்களுக்கு சட்டசபையின் மதிப்பு பற்றி கேட்ட உங்கள் கேள்வியின் ஆதங்கம் புரிகிறது. நான் இதற்கு பதில் சொன்னால் நீங்களாவது வேட்கபடுவீர்களோ இல்லையோ எனக்கு தெரியாது. இருந்தாலும் சொல்கிறேன். ஜனநாயக சிற்பி திரு.கருணாநிதி முதல்வராய் இருந்தபோதெல்லாம் M G R மீது செருப்பு வீசியது, சபாநாயகர் மதியழகனிடமிருந்து மணியை பிடுங்கியது, J வின் சேலையை இழுத்தது, வேட்டியில் speekerai சுற்றி சுழற்றியது, அப்போது நாலுகோடி தல நாயகன் பெஞ்சிக்கடியில் புகுந்துகொண்டது.இதுதான் இந்த தமிழ்நாடு சட்டமன்றத்தின் உலகம் போற்றும் வரலாறு. உங்களுக்கு பிடித்திருந்தால் சௌதியில் இதன் ABCD யை ஆரம்பியுங்கள். தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
03-ஏப்-201313:41:08 IST Report Abuse
Rajasekaran Palaniswamy பழைய வரலாறு யாருக்கு வேண்டும். அதனால் என்ன பயன்?. நாங்கள் புதிய வரலாறு படைக்க வந்துள்ளோம். உதாரணம்: 2G , ஹெலிகாப்டர், நிலக்கரி உரம், இப்படி ஏகப்பட்ட வரலாறுகளை எழுதியுள்ளோம்.... எழுதுவோம்.....
Rate this:
Share this comment
Cancel
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
03-ஏப்-201313:33:30 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் மக்கள் பணத்தில் வெட்டி பேச்சு வேண்டாம். மக்கள் பிரச்னை பற்றி பேசுங்கள். காவடி எடுப்பது, காரி உமிழ்வது போன்ற செயல்கள் சட்டசபைக்குள் வேண்டாம். மக்கள் பிரச்னை பற்றி பேசாமல் வெட்டி பேச்சு பேசுபவர்களை மக்கள் அடுத்த தேர்தலில் ஒதுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
03-ஏப்-201313:22:08 IST Report Abuse
Linux காந்திக்கு அன்னைக்கே தெரிஞ்சிருக்கு, சோனியான்னு ஒரு அம்மா, பின் நாளில் வந்து நாட்டையே கூறுபோட்டு விக்க போறாங்கன்னு....
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
03-ஏப்-201313:21:40 IST Report Abuse
krishna காங்கிரஸ் கட்சியின் வரலாறு தெரியவில்லை என்றால் அது அந்த கட்சியை சேர்ந்தவர்களின் பிரச்சினை. தாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு, விவசாயத்திற்கு, குடிநீருக்கு என்று தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்ற தமிழகத்தின் வரலாறு உங்களுக்கு தெரியுமா. காங்கிரஸ் காரன் பிரச்சினையை விட்டு விட்டு தமிழ்நாட்டுக்கு இப்போது என்ன தேவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.உங்களை நம்பி வாக்களித்த நாங்கள் உங்களுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
stalin - chennai,இந்தியா
03-ஏப்-201313:21:00 IST Report Abuse
stalin ஜெயலலிதா திராவிட கட்சியின் கொள்கையை புரிந்து கொள்ள வில்லை. எப்பிடி திராவிட கட்சிக்கு ஒரு ஆரியன் தலைவராக முடியும் .
Rate this:
Share this comment
Janaki raman Pethu chetti - Trichy,இந்தியா
03-ஏப்-201318:06:34 IST Report Abuse
Janaki raman Pethu chettiதிராவிடம் என்றால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் என்றுதான் அறிகிறோம். ஆனால் தமிழர்தான் திராவிட கட்சிக்கு தலைவனாக வேண்டும் என்கிறோம். எத்தனை முரண்பாடு?...
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
03-ஏப்-201313:05:33 IST Report Abuse
Yoga Kannan குறுக்கு வழியில் .......................தலைமையை கைப்பற்றியவர் ......அடுத்தவர்கள் வரலாறை பேசுவதற்கு முன்பு ........... கொஞ்சம் .................சுய பரிசோதனை செய்துகொண்டால் .............சரியாக இருக்கும்...........
Rate this:
Share this comment
Maali Raja - Tuticorin,இந்தியா
04-ஏப்-201316:06:43 IST Report Abuse
Maali Rajaநல்லா சொன்னீங்க கண்ணன். உரைக்க மாட்டேன்குதே. ....
Rate this:
Share this comment
Cancel
K.vijayaragavan - chennai,இந்தியா
03-ஏப்-201312:46:37 IST Report Abuse
K.vijayaragavan மற்ற விஷயங்களில் எப்படியோ?இந்த விஷயத்தில் ஜெயா கூறி இருப்பது முற்றிலும் உண்மையே. பெரும்பாலான காங்கிரசார் இன்னும் தங்களை சுதந்திரத்திற்கு பாடுபட்ட காங்கிரசின் வாரிசுகளாகவே நினைத்துக் கொண்டிருக் கின்றனர். எப்போது காந்தி நேருவுக்கு முடிசூட்டினாரோ அப்போதே தேச விடுதலைக்கு பாடுபட்ட, உண்மையான, சுயநலமற்ற தியாகிகளை கொண்டிருந்த காங்கிரஸ் செத்து விட்டது. சுபாஷ் சந்திர போஸ் போன்ற உண்மையான, தியாகிகளை தனக்கு இடையூறாக நினைத்து அவர்களுக்கு மாற்றாக நேருவை முன்னிறுத்திய காந்தியின் சுயநலத்தால், நேருவின் எதேச்சாதிகார போக்கு பிடிக்காமல் அப்பழுக்கற்ற தேசபக்தர்கள் அப்போதே காங்கிரசிலிருந்து வெளியேறி விட்டனர். நேரு காலத்தில் இருந்து இன்றுவரை காங்கிரஸ் நேரு குடும்பத்தின் சொந்த கம்பெனி. நேரு குடும்பத்தின் பாரம்பரிய சொத்து. சுதந்திரம் அடைந்த பிறகு அதன் நோக்கம் நிறைவேறிவிட்டபடியால், காங்கிரசை கலைத்து விடவேண்டும் என்று காந்தி சொன்னது நூற்றுக்கு நூறு வரலாற்று உண்மை. ஆகவே ஜெயா சொன்னது தவறில்லை. இது புரியாமல், சோனியா அடிவருடிகள் எகிறியது கேவலத்திலும் கேவலம். மகாகேவலம். இதிலிருந்தே தெரிகிறது அவர்கள் திரு.காந்திக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கின்றனர் என்று? மேலும், நேரு குடும்பத்தவர்களை, அவர்கள் பெயருக்கு பின்னால் காந்தி சேர்த்து அழைப்பதே, தவறு. கந்தி சேர்த்து அழைக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அப்படி அழைப்பதற்கு காரணம் பாமர மக்கள் அவர்களை காந்தி மட்டுமே சுதந்திரம் வாங்கி தந்ததாகவும், இவர்கள் காந்தியின் வாரிசுகள் என்று நம்புவதாலும், அந்த நம்பிக்கை இவர்கள் கம்பெனிக்கு பலம் என்பதாலும் தான். இது எல்லாவற்றையும் விட கேவலம். ஆனால் நேரு குடும்பத்துக்கு கேவலங்கள் என்றுமே ஒரு பொருட்டல்ல.
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
03-ஏப்-201312:33:16 IST Report Abuse
krishna வரலாற்று டீச்சர் அம்மா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை