Begger helped an old man, where others watched without help | மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்: மரிக்கவில்லை மனிதாபிமானம் | Dinamalar
Advertisement
மயங்கிய முதியவருக்கு உதவிய பிச்சைக்காரர்: மரிக்கவில்லை மனிதாபிமானம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: நடைபாதையில் மயங்கி விழுந்த முதியவர் குறித்து, அந்த பகுதியில் இருந்த யாரும் கவலைப்படாத நிலையில், தன் தட்டில் இருந்த, சில்லரை காசுகளை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி, முதியவருக்கு கொடுத்த, பிச்சைக்காரரின் மனிதநேயத்தை பலரும் பாராட்டினர்.

வேடிக்கை: சென்னை தி.நகர் பேருந்து நிலையம் செல்ல, மார்க்கெட் வழியாக, 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு நடந்து சென்றார். வெயில் சுட்டெரித்ததால், நடக்க முடியாமல் தள்ளாடிய அவர், திடீரென, நடைபாதையில் மயங்கி விழுந்தார். அவரது சட்டை பையில் இருந்த, 100 ரூபாய் தாள்கள், கீழே விழுந்து சிதறி கிடந்தன. அந்த வழியாக சென்ற பலரும், சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனரே தவிர, யாரும் உதவ முன்வரவில்லை. நடைபாதையில் பிச்சை எடுத்தவர், முதியவரை பார்த்ததும், பதறிபோய், தட்டில் கிடந்த காசை எடுத்து, தண்ணீர் பாக்கெட் வாங்கி வந்து, முதியவர் முகத்தில் தெளித்தார். காற்றோட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிதறிய ரூபாய் தாள்களை, முதியவரின் சட்டைப் பையில் வைத்து, உட்கார வைத்தார்.

அண்ணன் எண்னடா...: பிச்சைக்காரர் உதவவே, கூட்டத்தில் இருந்த சிலர், முதலுதவி செய்ய முன் வந்தனர். பின், ஆம்புலன்சுக்கு போன் செய்து, முதியவரின் வீட்டுக்கும் தகவல் தெரிவித்தனர். முதியவருக்கு பலரும் உதவியதால், கூட்டத்தில் இருந்து விலகி சென்ற பிச்சைக்காரர், "அண்ணன் என்னடா, தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...' என, முணுமுணுத்து கொண்டே, தட்டை ஏந்தியபடி, தம் கடமையை செய்ய தயாரானார்.

வேண்டாம் ரூபாய்: முதியவரின் உறவினர்கள், சம்பவ இடத்திற்கு வந்து, உதவிய பிச்சைக்காரருக்கு, 100 ரூபாய் கொடுத்தனர். உடனே அவர், "எனக்கு நோட்டு கொடுத்தா, மாத்த தெரியாதுங்க. சில்லரை இருந்தா போடுங்க' என்றதும், நெகிழ்ந்து போன உறவினர்கள், பிச்சைக்காரருக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தனர். எவ்வளவு எடுத்து கூறியும், பணம் வாங்காததால், சில்லரைகளை தட்டில் போட்டு, நன்றி கூறிவிட்டு சென்றனர். கூட்டத்தில் இருந்த பலரும், பிச்சைக்காரரை புகழ்ந்து பேசியபோதும், எதையும் சட்டை பண்ணாமல், தட்டை ஏந்தியபடி, பாடல் வரிகளை முணுமுணுத்து கொண்டிருந்தார் அவர்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (55)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tulasidas - Tirupur,இந்தியா
06-ஏப்-201306:04:01 IST Report Abuse
tulasidas காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிது
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
Nanjan Sivalingan,Indian, - Nilgiris , ooty,Tamilnadu,இந்தியா
04-ஏப்-201300:25:29 IST Report Abuse
Nanjan Sivalingan,Indian, பணம் பணம் என்னும் வுலகில் மனிதாபிமானம் என்ன என்பதை முதியவருக்கு உதவிய நண்பர் மூலம் அறிய வேண்டும் , அவர் வேடிக்கை பார்த்த அனைவருக்கும் ஒரு பாடத்தை கற்று கொடுத்துள்ளார் என்பதற்கு வேறு சாட்சி ஒன்றும் தேவை இல்லை.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
Bala - NY,யூ.எஸ்.ஏ
03-ஏப்-201321:22:57 IST Report Abuse
Bala நாம் பார்க்கத்தான் படித்தவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள், இன்னும் எத்தனை எத்தனை வார்த்தைகள் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். ஆனால் நாம் எல்லாம் இதற்கு தகுதியானவர்கள் தானா என நீங்களே எண்ணிப் பாருங்கள். தயவுகூர்ந்து இந்த மாதிரி சமயத்தில் உதவி புரியுங்கள். அவ்வாறு உதவி புரியும்போது மறுமுனையில் உள்ளவர்கள் இறக்க நேரிட்டால் காவல்துறை உங்களை தொந்தரவு செய்யக்கூடாது. அதையும் மீறி உங்களை கோர்ட் கேஸ் என்று கூப்பிட்டால், நீங்கள் தெளிவாக எடுத்துக் கூறலாம் "வேலையின் காரணமாக என்னால் நினைத்த நேரத்திற்கு நினைத்த இடத்திற்கு வர இயலாத நிலையில் உள்ளேன்" என்று. இந்த மனிதாபிமானத்தில் தான் நாம் அமெரிக்காவை விஞ்சி நிற்கின்றோம் என்றால் மிகையாகாது. உங்களின் கவனத்திற்கு: ://blogs.rediff.com/roadaccident/2012/12/30/chennai-accident-helpline-2/ ://blogs.rediff.com/legalhelpindelhi/2012/12/14/chennai-accident-helpline/
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India - Camp,Arifjan,Kuwait,குவைத்
03-ஏப்-201318:59:32 IST Report Abuse
R.K.Venkatesan,Jambuvanodai,TamilNadu,India பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள்தானட.......ஓடிவந்து உதவிசெய்பவர்களைவிட கூடி நின்று வேடிக்கை பார்பவர்களே நம் நாட்டில் அதிகம்......பெரியவர் நலமுடன் வாழட்டும்.
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
Cancel
Abdul Kareem - Doha Qatar,கத்தார்
03-ஏப்-201318:55:45 IST Report Abuse
Abdul Kareem இவ்வளவு சாதனைகளை செய்யும் நம் அரசு, இவர்களை தேடி கண்டு பிடித்து ஒரு மறு வாழ்வு மையம் ஏன் அமைக்க கூடாது..
Rate this:
0 members
0 members
13 members
Share this comment
Cancel
Krishnagiri Karthikeyan - Krishnagiri,இந்தியா
03-ஏப்-201318:51:46 IST Report Abuse
Krishnagiri Karthikeyan பணம் இல்லாதவர் மட்டும் பிச்சைகாரர் இல்லை. நல்ல மனம் இல்லாதவரும் பிச்சைக்காரரே. என்ன சொல்கிறீர்கள்?
Rate this:
0 members
0 members
61 members
Share this comment
cku - tpr,இந்தியா
03-ஏப்-201320:38:05 IST Report Abuse
ckuஉண்மை ......
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
saravanan - Komarapalayam,இந்தியா
03-ஏப்-201318:21:38 IST Report Abuse
saravanan யாரும் பிசைகரனாக பிறப்பதில்லை சூழ்நிலையே கரணம். பிச்சைக்காரர்கலை கண்டால் வெறுக்கும் நாம் இனிமேல் அவர்களும் மனிதர்களே மனிதர்களே என்பதை மறக்காதீர்.
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
Parthi - Bhavani,இந்தியா
03-ஏப்-201318:12:07 IST Report Abuse
Parthi இதுவே ஒரு நடுதுற வயது பெண்மணியோ அல்லது சிறு வயது பெண்மணியோ மயங்கி விழுந்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே. இது தான் இன்றைய உலகம்
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
03-ஏப்-201317:54:02 IST Report Abuse
maravan மிக வேகமான இந்த வாழ்க்கையில் அனைவரும் பணம் பணம் என்று ஓடுகிறார்கள்..அவர்களுக்கு மனித நேயம் பற்றியெல்லாம் தெரியாது...சுயநலமாய் வாழ அனைவரும் பழகிவிட்டனர்..இதுதான் கசப்பான உண்மை...மறவன்
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
arulmurugan - erode,இந்தியா
03-ஏப்-201317:38:05 IST Report Abuse
arulmurugan அவர் பணத்தளவில் பிச்சைகாரனாக இருந்தாலும் மனதளவில் பெரிய கோடிஸ்வரன்.
Rate this:
0 members
0 members
19 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்