பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் அதிருப்தி ஊராட்சி அலுவலகம் முற்றுகை| Dinamalar

தமிழ்நாடு

பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் அதிருப்தி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

Added : ஏப் 03, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 பசுமை வீடுகள் ஒதுக்கீட்டில் அதிருப்தி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

பண்ருட்டி:மேல் கவரப்பட்டு ஊராட்சிக்கு 5 பசுமை வீடுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தை குடிசை வீடுகள் இல்லா மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் கலைஞர் வீடு கட்டும் திட்டம் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின் இத்திட்டத்தில் 300 சதுரடி அதிகரித்து, சோலார் விளக்கு அமைப்புகளுடன் 1.80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பசுமை வீடுகள் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு கடலூர் மாவட்டத்திற்கு 2,713 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் மேல்கவரப்பட்டு ஊராட்சிக்கு 5 வீடுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை அறித்த கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
முற்றுகையிட்ட பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர் ராதா ஞானசேகரன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகளிடம் பேசி கூடுதல் வீடுகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை