E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2013,00:40 IST
கருத்துகள் (23)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோர்ட் உத்தரவை அடுத்து, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை குடியிருப்புகளுக்கும் மாற்றும் முயற்சிக்கு, பரவலாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது; பல இடங்களில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள "டாஸ்மாக்' கடைகளை மார்ச் 31க்குள் மூட வேண்டும் என, கடந்த பிப்.,26ல் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மாநில அளவில், 504 மதுக்கடைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது; கோவை மாவட்டத்தில், 64 மதுக்கடைகள், நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. கடைகளை மூடவோ அல்லது இடம் மாற்றவோ, ஐகோர்ட் வழங்கிய கெடு, மார்ச் 31 உடன் முடிவடையும் நிலையில், பெரும்பாலான கடைகள் மாற்றப்படவுமில்லை; மூடப்படவுமில்லை. ஏற்கனவே, குடியிருப்புப் பகுதிகளுக்குள் உள்ள மதுக்கடைகளை இடம் மாற்ற வேண்டுமென்று போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், புதிதாக இந்த கடைகளையும் வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு டாஸ்மாக் நிர்வாகம் திணறி வருகிறது. கோவை மாவட்டத்தில், திண்டுக்கல்-சத்தி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,209), நாகை-கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,67), சேலம்-கொச்சி-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.,47) என 3 தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 20க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இவற்றை, அந்த ரோடுக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கும் மாற்றும் முயற்சிக்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருச்சி ரோட்டில் (என்.எச்.,67) செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் அருகே இடமாற்றம் செய்யும் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பொதுமக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சூலூர் பகுதியில் செயல்பட்டு வந்த கடையை குடியிருப்பு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வதற்கும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோவையின் பல பகுதிகளிலும் இதுபோன்ற போராட்டங்களை பொதுமக்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், கடைகளை இடம் மாற்றுவது குறித்து டாஸ்மாக் நிர்வாகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஐகோர்ட் உத்தரவில், "முகப்புப் பகுதி மட்டுமே, நெடுஞ்சாலையை நோக்கி இருக்கக்கூடாது' என்று கூறியிருப்பதாகக் கருதி, நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளின் முன் பகுதியை மட்டும், அதே கட்டடங்களில் வேறு திசையில் மாற்றி அமைக்கும் முயற்சியும் நடந்து வருகிறது. கவுண்டம்பாளையம் பகுதியில், இதேபோல, ஒரு மதுக்கடைக்கு முகப்புப் பகுதி மட்டும் மாற்றப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் விஜய சண்முகத்திடம் கேட்டபோது, ""கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 64 கடைகளுக்கான மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அனுமதிக்காக கலால் துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கடைகள் மாற்றப்படும்; கோர்ட் உத்தரவில், நெடுஞ்சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் கடை இருக்கக் கூடாது என்று குறிப்பிடப்படவில்லை; நெடுஞ்சாலையை நோக்கி கடையின் முகப்பு இருக்கக்கூடாது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
ஐகோர்ட் விதித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், இன்னும் மதுக்கடைகளை மாற்றாமலிருப்பதற்கு, மேல் முறையீடு செய்வதற்குள்ள கால அவகாசமே காரணமென்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால்,

மக்களின் எதிர்ப்பு பரவலாக வலுத்து வரும் நிலையில், இந்த 64 கடைகளையும் வேறு இடங்களுக்கு மாற்றுவார்களா அல்லது ஐகோர்ட உத்தரவின் நோக்கத்தை மீறும் வகையில், கடைகளின் முகப்பை மட்டும் மாற்றுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

கோர்ட் உத்தரவு திருப்பூரில் அப்பட்டமாக மீறல்: திருப்பூர் மாவட்டம் வழியாக மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில்(என்.எச்., 47), திருப்பூர் மாவட்ட பகுதிகளில் மூன்று மதுக்கடைகள், நாகபட்டணம் - கூடலூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்., 67) 16 கடைகள், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்., 209) எட்டு கடைகள் என, தேசிய நெடுஞ்சாலைகளில் 27 கடைகள் அமைந்திருந்தன. ஐகோர்ட் உத்தரவிட்ட பிறகும் மதுக்கடைகளை அகற்றுவதில் "டாஸ்மாக்' அதிகாரிகள் மெத்தனம் காட்டினர். இறுதி நாள் நெருங்கியபோது, அவசரம் அவசரமாக 20 கடைகளை மாற்றினர். சாலை விபத்துகளுக்கு மது காரணமாகிறது என்பதாலேயே, நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மாற்ற கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில், பழைய இடத்திலிருந்து சிறிது தூரத்தில் கடைகளை மாற்றி அமைத்துள்ளனர், அதிகாரிகள். மீதமுள்ள ஏழு மதுக்கடைகளை மாற்ற முயற்சித்தபோது, மக்கள் எதிர்ப்பு எதிர்த்ததால் மாற்றவில்லை; தேசிய நெடுஞ்சாலைகளிலேயே பல கடைகள் தொடர்ந்து செயல்படுகின்றன. திருப்பூர் - அவிநாசி - கோவை; திருப்பூர் - பல்லடம் - கோவை; திருப்பூர் - தாராபுரம் - ஒட்டன்சத்திரம் - மதுரை; திருப்பூர் - காங்கயம் - திருச்சி; திருப்பூர் - சோமனூர் - கோவை; திருப்பூர் - பெருமாநல்லூர் - ஈரோடு; திருப்பூர் - ஊத்துக்குளி - ஈரோடு ஆகிய முக்கிய மாநில

நெடுஞ்சாலைகளில், வழி நெடுகிலும், வரிசையாக "டாஸ்மாக்' மதுக்கடைகள் அமைந்துள்ளன. போக்குவரத்து நெரிசல் மிகுந்த ரோட்டில் அமைந்துள்ள இக்கடைகளால், விபத்துகள் அதிகளவு நடந்து வருவதோடு சில பகுதிகளில், குடியிருப்புகளுக்கு மத்தியில் கடைகள் அமைந்துள்ளதால் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
அவிநாசி அருகே தெக்கலூரில், என்.எச்: 47 ஆறுவழிச்சாலை மீது, மதுக்கடை (எண்: 2210) இருந்தது. அதிகளவில், தொழிற்சாலைகள் உள்ளதால், வடமாநில தொழிலாளர்கள் குடித்துவிட்டு செய்யும் அட்டகாசம் நாளுக்குள் நாள் அதிகரித்தது.

ஐகோர்ட் உத்தரவால், ஏப்., முதல் தேதி கடை பூட்டப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர். அதே பகுதியில் கடை வைக்கும் ஏற்பாடு நடந்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 31ம் தேதி நள்ளிரவு 12.00 முதல் 2.00 மணி வரை தெக்கலூரில் ஐந்து இடங்களில் மறியல் செய்தனர். என்றாலும்கூட, மறுநாள் (ஏப்., 1) கடை திறக்கப்பட்டது; அதிர்ச்சியடைந்த பெண்கள், கடைக்கு முன், திரண்டு கோஷமிட்டனர். எதிர்ப்பை சமாளிக்க முடியாமல், ஊழியர்கள் கடையை பூட்டி "எஸ்கேப்' ஆகினர். "தெக்கலூர் ஊராட்சியில் மதுக்கடை இருக்கக் கூடாது; தொடர் போராட்டம் நடத்துவோம்,' என்று மக்கள் கூறியதால், அக்கடைக்கு, அதன் மேற்பார்வையாளர் நேற்று "சீல்' வைத்தார். அதே சமயம் அவிநாசியில் மங்கலம் ரோட்டில், ஆறு வழிச்சாலைக்கு 50 அடி பக்கத்தில் உள்ள மதுக்கடை (எண்: 1507) இன்னும் செயல்படுகிறது. இந்த கடையையும் மூட வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

பல்லடம்: கோவை - திருச்சி நெடுஞ்சாலையில், பல்லடம் பஸ் ஸ்டாண்ட் அருகே அமைந்திருந்த மதுக்கடை (எண்: 1825), பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் வேன் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டது.

Advertisement

இதேபோன்று, தேசிய நெடுஞ்சாலையில் பனப்பாளையத்தில் இருந்த மதுக்கடை (எண்: 1826), 150 அடி தள்ளி அமைக்கப்பட்டது. பல்லடம் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்ட கடையை (எண்: 1827), மங்கலம் ரோட்டில் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மீண்டும் பழைய இடத்திலேயே நேற்று முதல் செயல்படுகிறது.

பொங்கலூர்:
பொங்கலூர், அவினாசிபாளையம் ஆகிய இடங்களில் செயல்பட்ட மதுக்கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மாநில நெடுஞ்சாலை ஓரத்தில், கொடுவாயில் அமைந்துள்ள மதுக்கடை (எண்: 2302) வழக்கம்போல் செயல்படுகிறது.

முன்னால மூடு; பின்னால திற...! நீலகிரி மாவட்டம்:இங்கு, 133 "டாஸ்மாக்' மதுக்கடைகள் உள்ளன. இவற்றில், 14 கடைகள் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் செயல்படுகின்றன. மாதம் தோறும் 25 கோடி ரூபாய் மதிப்புக்கு மதுவிற்பனை நடக்கிறது; சீசன் காலத்தில், 30- 35 கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருந்த கடைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டதாக, நீலகிரி "டாஸ்மாக்' அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்; ஆனால், உண்மை அதுவல்ல. குன்னூர் அருகே அருவங்காடு, எம்.ஜி., காலனி, கூடலூர் தொரப்பள்ளி பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை ஓரமிருந்த மதுக்கடைகளின் முன்பக்க "ஷட்டர்' அடைக்கப்பட்டு, பின்பக்க கதவு திறக்கப்பட்டு மது விற்பனை தொடர்கிறது. ஊட்டி, பிங்கர் போஸ்ட்டில் இருந்த மதுக்கடை, அருகிலுள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.



ஊட்டி - கூடலூர் சாலையில், நடுவட்டம், டி.ஆர்.பஜாரில் உள்ள மதுக்கடைகள் இன்னமும் மூடப்படவில்லை. ஊட்டி - குன்னூர் சாலையில், தலையாட்டு மந்து பகுதியில் செயல்பட்டு வந்த மதுக்கடை, வேலிவியூ சந்திப்பில், வீடுகள் நிறைந்த பகுதியில், ஒரு வீட்டில் வாடகை அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு, அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கடையை திறக்க விடாமல் தடுத்து வருகின்றனர். இதனால், டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலையோரத்திலுள்ள மதுக்கடைகளை, குடியிருப்பு பகுதிகளுக்குள் இடமாற்ற எதிர்ப்பு தெரிவித்து, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதுகுறித்து மக்கள் கருத்து:

மனோகரன் (அரசு பள்ளி தலைமையாசிரியர்) மக்களின் எதிர்ப்பை மீறி, குன்னூர் பெட்டட்டியில், மருந்துக்கடை அருகே மதுக்கடை திறக்க முயற்சி நடக்கிறது; இது, தவிர்க்கப்படவேண்டும்.


அமீர்
(விவசாயி, ஊட்டி): ஊட்டி, பிங்கர்போஸ்ட் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த மதுக்கடை, பின்புறமாக செயல்பட துவங்கியுள்ளது. சில அடிதூரத்தில்தான் மருத்துவமனை, தனியார் பள்ளி உள்ளது; இதுவிதிமீறல் இல்லையா?

"எங்கள் ஊரில் வேண்டாம்':

சுகுமார்:
தெக்கலூர் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் மதுக்கடை அமையக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளோம். இளைஞர்கள், மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், எதிர்கால சமுதாயம் மிகவும் மோசமானதாக இருக்கும்.

ஜோதிமணி (கவுன்சிலர்): மது, இளைய சமுதாயத்தை சீரழிக்கிறது. பள்ளி மாணவர்கள், தினமும் குடிக்கின்றனர். எங்கள் பகுதிக்கு கடை வராமல் தடுத்து விட்டோம்.

- நமது நிருபர் குழு -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (23)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஏப்-201321:25:51 IST Report Abuse
Pugazh V தோட்டத்தில் சசிகலா உள்ளவரை மதுக் கடைகள் மூடப்படவே மாட்டாது. ஒன்று சசிகலா வெளியேற வேண்டும். அல்லது மிடாஸ் உரிமை சசிகலாமற்றும் அவரின் உறவினர்களிடமிருந்து வேறொருவரிடம் போக வேண்டும். இரண்டும் நடக்கப் போவதில்லை, எனவே மதுக் கடைகள் மூடப்படமாட்டா. ஆனால், வரும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக , மதுக் கடைகள் அடைப்பு பற்றி எனது தலைமையிலான அரசு பரிசீலித்து வருகிறது என்று ஜெயா ஒரு அறிக்கை விட்டால் போதும் ,மக்கள், கண்ணை மூடிக் கொண்டு கூடி கும்மி அடித்து வாக்குகளும் அழித்துவிடுவார்கள். தேர்தல் முடிந்ததும், வழக்கம் போல மக்களும் ஆட்சியாளர்களும் மறந்துவிடுவார்கள். அப்போ யார் மந்திரி சபை அமைப்பது என்று வேறு டாபிக் கிடைத்துவிடுமே.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Anitha Christy - Brossard,கனடா
04-ஏப்-201301:18:17 IST Report Abuse
Anitha Christy மாணவர்கள் மதுவை எதிர்த்து முதலில் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்குறார்கள், நாம் நலமுடன் இருந்தால் தான் நம்மால் அடுத்தவர்களுக்க்க போராட முடியும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
03-ஏப்-201321:53:25 IST Report Abuse
rajan போலிசுக்கு கோர்ட்டுக்கு வேலை கொடுப்பதே இந்த மது கடைகள் தான். மனித குலத்தை பலகீனமக்குவதே இந்த டாஸ்மாக் கடைகள் தான். அரசு ஏன் இதை தடுக்க விரும்புவதில்லை? அரசியல் பண்ண பணம் வேணும்ல. எல்லாம் கழக கோட்பாடுகள் தான்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
03-ஏப்-201321:03:05 IST Report Abuse
amukkusaamy கொஞ்ச நாள் முன்பு கும்பகோணம் போயிருந்தேன். ராமஸ்வாமி கோயில் போய் விட்டு ஒரு தெரு தாண்டினால் கும்பேஸ்வரன் கோயில் போகலாம். அந்த தெருக்களை இணைக்கும் சந்தில் தெரியாமல் குடும்பத்தோடு நுழைந்தால் அங்கே ஒரு டாஸ்மாக் சுமார் 25 அல்லது 30 பைக் என்று ஒரே கூட்டம். இதில் ரோட்டிலேயே சிறுநீர் கழிக்கும் சில குடிமகன்கள். மனம் அடைந்த வேதனையை எந்தக் கடவுளிடம் சொல்வது? யார் மேலும் நாங்கள், முக்கியமாக, பெண்கள், இடிக்காமல் போனதே பெரிய சாதனை தான். இந்த லட்சணத்தில் அந்த ஏரியா முழுவதும் குடும்பங்கள். எங்கே ஒரு தேவாலயம் அல்லது மசூதிக்கு அருகில் டாஸ்மாக் திறக்கச்சொல்லுங்கள் பார்ப்போம். தூ
Rate this:
1 members
0 members
13 members
Share this comment
Cancel
Dhandapani Shanmugam - riyadh,சவுதி அரேபியா
03-ஏப்-201319:45:59 IST Report Abuse
Dhandapani Shanmugam எங்கள் ஊரில் ஒரு பகுதி நேர நியாய விலை கடை ஒன்று திறக்க சுமார் மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம் இன்று வரை நடந்தபாடில்லை, ஆனால் நெடுஞ்சாலையில் உள்ள மதுக்கடை ஒரே இரவில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி மாற்றப்பட்டு உள்ளது. வாழ்க ஜன நாயகம், வல்லார்க குடி மக்கள்,
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
03-ஏப்-201317:35:56 IST Report Abuse
Srinivasan Kannaiya please instruct the person who has taken the TASMAC shop and ask him to have two acreas of land with complete Compound wall preferrably one KM away from dwelling area, temple, school, market and public gathering place otherwise there is no need to allot TASMAC. A police out post may also be arranged nearby with instructions that the out post must have always Police person without drinking mode. This will avoid many of the problems
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
03-ஏப்-201315:47:06 IST Report Abuse
விருமாண்டி இதற்கு மாணவர்கள் யாராச்சும் போராட வர்ரிங்கலாப்பா ...? என்ன ஒருத்தனையும் காணும் ..
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-201315:22:06 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. குடியிருப்பு பகுதிகளில் மட்டும் இல்லை.தமிழகத்திலேயே மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும். இந்த மதுவால் தமிழ்நாடே குடிகார நாடாக மாறிவிட்டது.இந்த பெருமை எல்லாம் திராவிட கட்சிகளுக்குத்தான் சேரும்.இந்தியாவிலேயே அதிக குடிமகன்களை கொண்ட நாடு என்ற பெருமையும் நம்ம தமிழ்நாட்டுக்குத்தான்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
sivasankaran - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-201314:42:56 IST Report Abuse
sivasankaran மதுக்கடைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் வரவேற்கத்தக்கது. இது அப்படியே மதுவிற்கு எதிராக மாற வேண்டும். இன்றைய இளைய சமுதாயம் மதுவிற்கு அடிமையாகும் போக்கு மிகவும் கேவலமானதாகும். குறிப்பாக தமிழர்கள் தமது பண்பாட்டை மறந்து ஒரு சமுதாய சீர்கேடு சிறிது சிறிதாக காலூன்ற தொடங்கியுள்ளது. உண்மையான அக்கறை உள்ள நல்லவர்கள் நெஞ்சம் பதைப்பதோடு நில்லாமல் மிக சரியான ஒரு வழிகாட்டுதலை வழங்கவேண்டும். மது ஒழிபிற்காக மக்கள் வீதிகளுக்கு வர வேண்டும். இது ஒரு தனிநபர் பிரச்சனையாக கொள்வதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் இதன் தாக்கத்தை உணர வேண்டும். மதுவை ஒழி. தமிழனே தலை நிமிர். போதையின் பின் செல்லும் உன் பாதை மரண பாதை. அதுவே தமிழினத்தின் அழிவுப் பாதை.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
manoharan - chennai,இந்தியா
03-ஏப்-201314:34:01 IST Report Abuse
manoharan கேட்பதற்கு மிக சந்தோஷமாக இருக்கிறது. 1967 வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு இருந்ததால் மக்கள் தங்கள் தேக ஆரோக்கியத்தை கெடுக்காமலும் பணத்தை விரயம் செய்யாமலும், குடும்பங்கள் பட்டினியில் வாடாமலும், அக்கிரம செயல்களில் ஈடுபடாமலும் இருந்து வந்தனர். இந்த திராவிட கழகங்கள் தமிழ்மக்களை குடிக்கு அடிமையாக்கி கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டன. தன் சினிமாக்களில் குடிப்பது தீமை என்று உணர்த்திய எம் ஜி ஆரே மதுவிலக்கை கொண்டு வரவில்லை.குஜராத் முதல்வர் மோடியை பின்பற்றும் ஜெயா மதுவிலக்கை அமுல்படுத்தி அநேக கோடி தமிழ் மக்களின் கண்ணீரை துடைத்தால் ஆசீர்வாதமாக இருக்கும்.
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.