வாடகை குடியிருப்புக்காக புதிய வீடுகள் கட்டுவதில்...தாமதம்:அரசு ஊழியர் குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி| Dinamalar

தமிழ்நாடு

வாடகை குடியிருப்புக்காக புதிய வீடுகள் கட்டுவதில்...தாமதம்:அரசு ஊழியர் குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி

Updated : ஏப் 03, 2013 | Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வாடகை குடியிருப்புக்காக புதிய வீடுகள் கட்டுவதில்...தாமதம்:அரசு ஊழியர் குடும்பங்களுக்கு புதிய நெருக்கடி

சென்னை பட்டினப்பாக்கத்தில் அரசு ஊழியர்களுக்காக, வீட்டுவசதி வாரியம் மூலம், 1,865 வாடகை குடியிருப்புகள் கட்டும் திட்டம் தாமதமாகி உள்ளது. அதே நேரத்தில், மேலும், 2,238 வாடகை குடியிருப்புகள் விரைவில் இடிக்கப்படும் என்ற அறிவிப்பால், சென்னையில் வாடகைவீடுகளுக்கான தேவை கடுமையாகஅதிகரிக்குமோ என்ற, அச்சத்தைசந்தையில் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் பீட்டர்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை, அண்ணா நகர்உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அரசுஊழியர்களுக்கான வீட்டுவசதி வாரிய வாடகை குடியிருப்புகள் உள்ளன.இதே போல், பட்டினப்பாக்கத்தில், 25.19 ஏக்கர் நிலத்தில், 1,284 வீடுகள் வாடகை குடியிருப்பு திட்டத்தில்இருந்தன.இவற்றில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்த, 1,112 வீடுகளைஇடித்துவிட்டு, அதிக தளங்கள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டு, அந்த வீடுகளில் இருந்தோர், 2010ம் ஆண்டுவெளியேற்றப்பட்டனர்.

அதிருப்தி:புதிய திட்டத்தில், 1,865 வீடுகள் வாடகை குடியிருப்பு திட்டத்துக்கும், 520 வீடுகள் சுயநிதி திட்டத்துக்கும் கட்டப்படும் என, வீட்டுவசதி வாரியம்அறிவித்தது.இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு, கலந்தாலோசகரை தேர்வு செய்யஒப்பந்தம் கோரும் பணிகள், கடந்த ஆண்டு நடந்தன.ஆனால், பயனாளிகள் வெளியேற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இப்போது வரை, எந்த பணிகளும் அங்கு துவங்கப்படவில்லை.இரண்டு ஆண்டுகளில் புதிய வீடு தருவோம் என, அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை நம்பி, அருகில் தனியார் வீடுகளுக்கு வாடகைக்கு சென்ற அரசுஊழியர்கள், வீட்டுவசதி வாரியம் மீதுஅதிருப்தி அடைந்து உள்ளனர்.பிற இடங்களில்...பட்டினப்பாக்கம் போன்று சென்னையில் பீட்டர்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை உள்ளிட்ட, 17 இடங்களில் உள்ள, 2,238 வாடகை குடியிருப்புகளை இடித்து விட்டு, 6,254 வீடுகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்திட்டம், கடந்த ஜனவரி மாதம்அறிவிக்கப்பட்டது.இவற்றில், "3,646 வீடுகள் வாடகை குடியிருப்பு திட்டத்தில் வழங்கப்படும்; மீதியுள்ள வீடுகள் சுயநிதி திட்டத்தில் விற்கப்படும்' என, அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகளில் வசிப்போர் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
நெருக்கடி:பட்டினப்பாக்கம் வாடகை குடியிருப்பு திட்டத்தில் குடியிருந்தோர்வெளியேற்றப்பட்டு, இன்னும் வீடு கிடைக்காத நிலையில்; பிற இடங்களில் வாடகை குடியிருப்புகளில் இருப்போரையும் வெளியேற்ற வீட்டுவசதி வாரியம் முடிவெடுத்து உள்ளது.சென்னையில் தற்போதுள்ள சூழலில், ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேறினால், வாடகை வீடுகள் கிடைப்பது பெரும் சிரமம்.
தேவை அதிகரிப்பால், வீட்டு வாடகையும் பல மடங்கு உயரும் என்பதால், வாடகைக்கு வீடு தேடும், பொதுமக்களுக்கும் சிக்கல் ஏற்படும்.தாமதம் ஏன்?இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத வீட்டுவசதி வாரிய உயரதிகாரிஒருவர் கூறியதாவது:பட்டினப்பாக்கம் பகுதி, கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தில் வருகிறது. இங்கு புதிய கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ள, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் இருந்து தடையின்மை சான்று பெற வேண்டும். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் அடுக்குமாடி குடியிருப்புக்கான கட்டுமானபணிகள் துவங்கும். பிற இடங்களில், புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகள் விரைவில் துவங்கப்படும். தற்போது, இந்த வீடுகளில் இருப்போருக்கு உரிய கால அவகாசம் கொடுத்த பிறகே பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
சமூக விரோத செயல்கள்?பட்டினப்பாக்கத்தில் இருந்த வீட்டு வசதி வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், அந்த பகுதி தற்போது, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில், வெளிச்சம் இல்லாததால், மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. இதனால், அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து, இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பெண்களும், குழந்தைகளும்அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இதுகுறித்து, அருகில் உள்ள குடிசை பகுதியை சேர்ந்த ராமு கூறியதாவது:வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், கடந்த ஆண்டே கட்டி முடிக்கப்படும் என,அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கட்டுமான பணி துவங்கவில்லை. இரவு நேரங்களில், சாந்தோம் நெடுஞ்சாலை - பட்டினப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, குடிசை பகுதிக்கு செல்ல பீதியாக இருக்கிறது.யாரென்றே தெரியாத பல நபர்கள், வாகனங்களில் வந்து, மது அருந்துவதும், அங்கேயே காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை போட்டு செல்வதுமாக உள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீசாரும் கண்டும் காணாதது போல் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
சாலை விரிவாக்க நில விவகாரம்சி.எம்.டி.ஏ., கூட்டத்தில் குழப்பம்
அடுக்குமாடி கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளும் போது, சாலை விரிவாக்கத்துக்காக ஒதுக்கப்படும் நிலங்களை பெற, சம்பந்தப்பட்ட துறைகள் தயங்குகின்றன. இது தொடர்பாக, நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில், குறிப்பிடத்தக்க உடன்பாடு ஏற்படவில்லை.இரண்டாவது முழுமை திட்ட வளர்ச்சி விதிகள் படி, அடுக்குமாடி கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட அளவு நிலத்தை, அந்த பகுதியின் சாலை விரிவாக்கத்துக்காக அளிக்க வேண்டும்.இவ்வாறு ஒதுக்கப்படும் நிலங்களை ஒப்படைப்பு செய்தால் தான், அந்த திட்டத்துக்கு, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்திடம் (சி.எம்.டி.ஏ.,) அனுமதி பெற முடியும்.
இதன்படி, பெயருக்கு ஒப்படைப்பு செய்யப்பட்ட நிலங்களை நெடுஞ்சாலை துறை மற்றும் அந்தந்தபகுதியின் உள்ளாட்சி அமைப்புகளிடம், சி.எம்.டி.ஏ.,ஒப்படைக்க வேண்டும்.ஆனால், இத்தகைய நிலங்களை ஒப்படைப்பு செய்த கட்டுமான நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளதால், சம்பந்தப்பட்ட துறைகள் பயன்படுத்த முடியாத நிலைஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவாதிக்க, நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சி.எம்.டி.ஏ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் வெங்கடேசன் மற்றும் உயர் அதிகாரிகள் இதில்பங்கேற்றனர்.பெரும்பாலான நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருப்பதால், தங்களால் அந்த நிலங்களை பெற இயலாது என, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்ததால், இதில் குறிப்பிடத்தக்க உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.- நமது நிருபர் -

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-ஏப்-201302:07:54 IST Report Abuse
தமிழ்வேல் அரசு ஏன் இப்படி கிடப்பில் போட்டு ஜனங்களோட வயித்தெரிச்சலை கொட்டிக்கனும் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை