E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
"தினமலர்' செய்தி எதிரொலி:குடிநீர் பிரச்சனைக்கு வார்டுகளில் ஆய்வு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
04:58

சென்னை:வடசென்னையில், குடிநீர் வாரியம் வினியோகிக்கும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது குறித்து, "தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானதை அடுத்து, வார்டுதோறும், குடிநீர் பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.வடசென்னையில், குடிநீர் வாரியம் வினியோகிக்கும் குடிநீரில், அவ்வப்போது கழிவுநீர் கலந்து வருவதாலும், அதிக மருந்து வாடை வீசுவதாலும், தனியார் விற்கும் பாதுகாப்பற்ற குடிநீரை, ஒரு குடம், 4 ரூபாய் வீதம் மக்கள் வாங்குகின்றனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விற்பனையை, இதுவரை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் கண்டு கொள்ளவில்லை.இது குறித்து, "தினமலர்' நாளிதழில், நேற்று, படத்துடன் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து, திரு.வி.க., நகர் மண்டலத்தில், வார்டுதோறும் குடிநீர் பிரச்சனை குறித்து அறிய, அதிகாரிகளுக்கு உத்தரவிடப் பட்டு உள்ளது.இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ""வார்டுதோறும், குடிநீர் சம்பந்தமான பிரச்சனைகள் குறித்து புகார் வந்தால், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டுக்கான காரணம் குறித்து, விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.gopinathan - chennai  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-201317:05:15 IST Report Abuse
N.gopinathan குடி நீர் பிரச்சணைக்கு யாரை அனுகுவது அவருடைய முகவரி என்ன என்று தெரிவிக்கவும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.