E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மே.வங்கத்தில் போலீஸ் தாக்கியதில் மாணவன் பலி : நாடு முழுவதும் கொந்தளித்த மாணவர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

03 ஏப்
2013
16:59
பதிவு செய்த நாள்
ஏப் 03,2013 16:48

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலத்தில் மாணவர் கூட்டமைப்பு தலைவர், போலீசார் தாக்கியதில் மரணமடைந்ததாக எழுந்த புகாரால் அம்மாநிலத்தில் மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு்ள்ளது. இந்த சம்பவத்தினை கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மனித உரிமை கமிஷன் விசா‌ரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்., ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இம்மாநிலத்தில் மாணவர் சங்க தேர்தல் நடத்தும் முடிவினை அம்மாநில அரசு தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தது. இதற்கு மாணவர்கள் சங்க கூட்டமைபினரிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நேற்று மாணவர்கள் கூட்டமைப்பினர் (எஸ்.எப்.ஐ.) சார்பில் கோல்கட்டாவில் பேரணி நடந்தது. அப்போது மாணவர் சங்க தேர்தலை நடத்த வேண்டும் என கோரி கோஷம் எழுப்பினர். இதில் போலீசார் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

போலீஸ் தாக்கியதில் தான் மாணவர் பலி
: இந்த தாக்குதலில் சுதீப்தா குப்தா (23) என்ற கல்லூரி மாணவரை, போலீசார் தாக்கியதில் காயமடைந்தார். கோல்கட்டா எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். மாணவர் இறந்த சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியது. சம்பவம் தொடர்பாக கண்ணால் பார்த்த சக மாணவர் கூறிய போது, போலீசார் சுதீப்தா குப்தாவை தலையில் தாக்கினர். காயத்துடன் போலீஸ் காவலில் தான் இருந்தார். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அவர் இறந்தார் என்றார்.

நீதி விசாரணை நடத்த கோரிக்கை

இது குறி்த்து முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், மாணவர் சுதீப்தா குப்தா இறந்தது துரதிருஷ்டவசமானது. மம்தாவின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தற்போது இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவர் பலியான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து டில்லியில் மாணவர்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையிலும் சில மாணவ அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே மாணவர் இறந்தது குறித்து மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இறந்த மாணவனின் இறுதி சடங்கிற்காக அவரது வீட்டின் முன்பு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் , மாணவர் அமைப்புகள் குவிந்து வருகின்றனர். மாணவர் இறந்த சம்பவத்தினை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கிவிட்டனர். எனினும் முதல்வர் மம்தா, இறந்த மாணவனின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டதாக மம்தா கூறினார். மாணவர் இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. காங். கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
satheesh kumar - coimbatore,இந்தியா
04-ஏப்-201314:42:52 IST Report Abuse
satheesh kumar இங்க என்ன நடக்குது சார், ப்ளீஸ் கொஞ்சம் மாறுங்கள் அல்லது நாமும் இலங்கையும் ஒன்று என்று நமது மீது தீர்மானம் நிறைவேற்ற இன்னொரு நாடு ரெடியாகும் ...... உங்கள் நண்பன் ......
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
karthik - Bangalore,இந்தியா
04-ஏப்-201311:56:04 IST Report Abuse
karthik இறந்தது சோகமான விஷயம் தான், ஆனால் தினமும் பல ஆயிரம் பேர் பசியால் இறகின்றனர். அதற்காக குரல் கொடுத்தால் உலகமே இந்திய மாணவர்களை வணங்கும்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
04-ஏப்-201311:50:36 IST Report Abuse
p.saravanan மாணவர் இறப்பு சம்பவம் மிகுந்த மிகப் பெரிய பேரிழப்பு .சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . மம்தா பானர்ஜி அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் அரசியல் தலையீடு இருக்க கூடாது . மாணவர்களும் , இலைகர்களும் வருங்கால இந்தியாவின் தூண்கள்.இவர்களை நல்ல வழிக்கு அழைத்து செல்ல சபதம் ஏற்போம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கோவை மாரியப்பன் - Coimbatore,இந்தியா
04-ஏப்-201311:01:56 IST Report Abuse
கோவை மாரியப்பன் படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
prak - chennai,இந்தியா
04-ஏப்-201309:33:35 IST Report Abuse
prak நம்ம தமிழ்நாட்டுல மாணவர்கள் போராட்டம் பண்ணு போது ஏன் இந்த நாடு கொந்தளிக்க வில்லை..தமிழ்நாடு இப்பெல்லாம் வரிவசூலிக்க மட்டுமே இந்தியால இருக்குது..... மத்த பிரச்சனிக்கு தனி நாடா ஆயிடுது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
JALRA JAYRAMAN - chennai,இந்தியா
04-ஏப்-201308:32:51 IST Report Abuse
JALRA JAYRAMAN பிரச்சினை என்னவென்றால் மாணவர் போர்வையில் சமுக விரோதிகள் பொது சொத்துக்கு நாசம் ஏற்படுத்தும் போது இந்த மாதிரி நடவடிக்கை தவிர்க்கமுடியாமல் ஆகிறது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
04-ஏப்-201307:42:51 IST Report Abuse
பொன்மலை ராஜா இலங்கையில் நடந்தால் தீவிரவாதம் என்று விட்டுவிட வேண்டும் ... மேற்கு வங்கத்தில் நடந்தால் விசாரணை நடத்திட வேண்டும் ... இரட்டை நிலைப்பாடு கொண்ட இரண்டு கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் இத்தனை ஆண்டுகள் அரசியலில் எப்படி நீடிக்கிறார்கள் ...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
james arul rayan - chennai ,இந்தியா
04-ஏப்-201307:22:49 IST Report Abuse
james arul rayan மாணவர்கள் தங்கள் கடமையை தவிர மற்றவைகளில் தான் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
04-ஏப்-201306:50:01 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் மாணவர் சங்கமென்ற பெயரில் கம்யூனிஸ்ட்டுக்கள் பல்லாண்டுகளாகவே நிகழ்த்தும் அநியாய அராஜகம் கொலை. மே வங்கம் கேரளாவில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் சர்வசாதாரணமே. இவர்கள்தான் பிற்காலத்தில் நக்சல்களாகக்கூட மாறுகின்றனர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
A.NAWAB JHAN, TRICHY. - SHARJAH,ஐக்கிய அரபு நாடுகள்
03-ஏப்-201319:40:31 IST Report Abuse
A.NAWAB JHAN, TRICHY. மாணவ மாணவிகளே,இளைய சமுதாயமே,வருங்கால தூண்களே,நாளைய விடிவெள்ளிகளே உங்களுக்கு அரசியல் வேண்டமே.பன்றிகள் மேயும் இடத்தில், நீங்கள் இறங்கலாமா? உலகத்திலேயே அதிக இளைஞ்சர்களை கொண்ட நாடு நம் நாடு. ஆனால் கிரிகெட்டும்,சினிமாவும்,அரசியலும் இவர்கள் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி உள்ளது. நூறு இளைன்சர்களைக் கொடுங்கள் இந்தியாவை மாற்றி காண்பிக்கிறேன் என்று சொன்னார் விவேகனந்தர்.இன்று கோடிக்கணக்கான இளைஞ்சர்கள் இருந்தும் சரியான வழியில் இவர்களை கொண்டு செல்ல நல்ல தலைவர்கள் இல்லாததால் இப்படி அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். வாழ்க பரதம்.
Rate this:
9 members
2 members
211 members
Share this comment
Hariharan Parameswaran - chennai,இந்தியா
04-ஏப்-201302:12:22 IST Report Abuse
Hariharan Parameswaranவிவேகானந்தர் சொன்னாலும் சொன்னார் அதற்கு அர்த்தம் வெறும் எண்ணிக்கை அல்ல விவேகானந்தரை புரிந்து கொள்ளும் திறன் படைத்த மாணவரை தான் அவர் சொல்லியிருக்க வேண்டும். கிட்ட தட்ட தற்காலத்தில் மாணவர் சமுதாயத்தை உபயோகபடுத்தும் எந்த தலைவருக்கும் சுவாமி விவேகானந்தரின் தகுதி இல்லை. இதில் தலைவர்களை மட்டும் சொல்லி குற்றம் இல்லை. எவ்வளவு வேகமாக வளரமுடியும் (வளர்ச்சி=பண வளர்ச்சி)என்ற எண்ணம் எல்லா இளைஞரிடமும் வெகு வேகமாக பரவி வருகிறது. அரசியல் கட்சிகளும் தன் பங்கிற்கு, 60 -70 வரை உள்ள இளைஞர்களையே தலைவர்களாக கொண்டு கட்சிகளை நடத்துகிறது. நம் நாட்டின் பெரிய கட்சியின் இளைஞர் 40+ வயதுடையவர். நடந்த சம்பவம் கொஞ்சம் வருத்தத்தை அளித்தாலும், மாணவர் சமுதாயம் தன் படிப்பை மட்டும் பார்த்தாலொழிய தானும் வளர்ந்து சமூக அக்கறையும் கொள்ளும் என்ற எண்ணம் உள்ளவர்களாக ஆக mudiyaadhu...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
dhivya - rjpm,இந்தியா
04-ஏப்-201309:32:10 IST Report Abuse
dhivyaஒரே ஒரு விவேகானந்தரை காட்டுங்கள் உலகையே மாற்றி கட்டுவார்கள் இந்திய இளைஞர்கள்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.