Advertisement
காங்கிரஸ் உடன் கூட்டணியா: சரத்யாதவ் திட்டவட்ட மறுப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

03 ஏப்
2013
19:54
பதிவு செய்த நாள்
ஏப் 03,2013 19:48

சகர்சா: ""வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை,'' என, ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் சரத்யாதவ் கூறினார்.

ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர்களில் ஒருவரான, நிதிஷ்குமார், பீகார் முதல்வராக உள்ளார். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெறுவதில் உறுதியாக இருக்கிறார். இதற்காக, மத்திய அரசுடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்த விவகாரம் தொடர்பாக, நிதிஷ் மீண்டும் டில்லி வந்தபோது, அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் சாதகமான பதில் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், பா.ஜ.,சார்பில், பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன் நிறுத்தப்பட முஸ்தீபுகள் துவங்கிவிட்டது. இது, நிதிஷுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இவ்வித காரணஙகளால், நிதிஷ் சார்ந்துள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சி, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் கிளம்பின.


இந்நிலையில், பீகாரில் உள்ள, தன் சொந்த தொகுதியான மாதேபுராவுக்கு, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் வந்தார்.தே.ஜ.,கூட்டணியின் அமைப்பாளராக உள்ள சரத் யாதவ், கிளப்பிவிடப்படும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூறியதாவது: வரும் லோக்சபா தேர்தலுக்கு முன்போ, அல்லது பின்போ, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்பு இல்லை. இப்படி நிலை வருமா என்பதை காட்சிப்படுத்தி பார்க்க முடியவில்லை. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என பா.ஜ., க்குள் தான் கருத்துக்கள் எழுந்துள்ளன. பிரதமர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டியது தே.ஜ., கூட்டணி தான். இது குறித்து, தேர்தல் சமயத்தில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும். பா.ஜ., பார்லிமென்ட் போர்டுக்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது, உட்கட்சி விவகாரம். இவ்வாறு, சரத்யாதவ் கூறினார்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
04-ஏப்-201314:02:41 IST Report Abuse
Hasan Abdullah எப்படியும் மோடி, பிஜேபியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட போகிறார், இந்நிலையில் நிதிசுக்கு இரண்டே வழி உள்ளது, ஒன்று காங் உடன் கூட்டணி, அல்லது தனித்து போட்டி இடுவது. காங் உடன் கூட்டணி கொண்டால் மொத்த தொகுதியையும் வாரி செல்லலாம், அப்படி இல்லையெனில், தனித்து போட்டி இட்டால், காங் - லாலு - ராம் விலாஸ் பஸ்வான் கூட்டணி உருவாகும், அது உருவானால் நிதிசும், பிஜேபியும் தனித்து போட்டி இடும்போது வலுவான காங் கூட்டணி மீண்டும் எல்லா தொகுதிகளையும் வாரி செல்லும். ஆக இந்நிலையில் காங் மீது மக்கள் வெறுப்பு கொண்டாலும், மாநில கட்சிகளின் அரசியல் மூலமாக காங் வெற்றி வாகை சூடும், பிகாரின் மொத்த தொகுதிகள் இம்முறை காங் வசம்.அதேபோல் உபியில் முலாயம் - கமுனிஸ்ட் கூட்டணி, மாயாவதி-காங் கூட்டணி போட்டிஇட்டால், மாயாவதி-காங் கூட்டணி வெற்றி பெரும், அத்துடன் முழு கர்நாடகாவும் காங்-க்கு சொந்தம். ஆந்திராவில் மீண்டும் ஜெகன் காங் கட்சியில் சேர்ந்தால் அல்லது கூட்டணி கொண்டால், முழு ஆந்திராவும் காங் க்கு கிடைக்கும், ஆக 2014 ம் காங்கிரஸ்க்கே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
skmoorthi - sivakasi  ( Posted via: Dinamalar Android App )
04-ஏப்-201306:12:59 IST Report Abuse
skmoorthi நாட்டுக்கு நல்லதை நடக்க விடுங்கப்பா
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.