தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

சென்னை: "டெசோ' மாநாட்டை விமர்சித்ததால், அ.தி.மு.க- தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் இடையே மோதல் எழுந்தது. அமைச்சர் கூறிய கருத்தை நீக்காததால், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில், நேற்று, சமூக நலம், சத்துணவு மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு, அமைச்சர் வளர்மதி பதில் அளித்து பேசினார்.

அப்போது," தமிழக சட்டசபையில், இலங்கை தமிழர் நலனுக்காக, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. இலங்கை தமிழர்களுக்காக, தி.மு.க.,"டெசோ' மாநாட்டை டில்லியில் நடத்தியது. இங்கிருந்து, 45 பேர், அங்கே தெருவில் சுற்றிய நான்கு பேர், இவர்களை வைத்து ஒரு கூட்டம். அது கருத்தரங்கா?' என்றார்.

இதற்கு, தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர் பதிலுரையில்,"டெசோ' மாநாட்டை குறிப்பிட வேண்டிய அவசியமில்லை' என்றனர். மேலும்,"அமைச்சரின் கருத்தை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.

"தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், சிவசங்கரன், டி.ஆர்.பி. ராஜா, அன்பழகன், சக்கரபாணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சபாநாயகர் தனபால்: சபாநாயகரை சுற்றி நின்று பேசுவது முறையல்ல; அமைச்சர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை. முற்றுகை செய்வது என்ன நியாயம்? அவரவர் இடத்தில் போய் உட்காருங்கள். அவரவர் இடத்திற்கு போனால், ஸ்டாலினை பேச அனுமதிக்கிறேன். சபை நடத்த ஒத்துழைப்பு வழங்குகள். நீங்கள் ஒரு முடிவோடு இருக்கிறீர்கள். இதுபோன்று நடப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஸ்டாலின்: சமூக நலத்துறை மானியம். அமைச்சர் விவாதத்திற்கு பதிலளித்து பேசுகிறார். அதை கேட்க வேண்டுமென்று தான் இருக்கிறோம். திட்டமிட்டு, வெளிநடப்பு செய்ய, முன் வரவில்லை. எங்கள் உறுப்பினர்கள் தவறாக நடந்திருந்தால்; அதற்கு வருத்தப்படுகிறேன். அமைச்சர்,"டெசோ' மாநாட்டை அவமதிக்கும் வகையில் பேசியதை சபை குறிப்பில் இருந்து நீக்குங்கள். இல்லையென்றால் வெளிநடப்பு செய்வோம்.

ஓ.பன்னீர் செல்வம்: தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்களில் ஒருவர் பேசலாம். இலங்கை தமிழர்களுக்காக, முதல்வர் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது,"டெசோ' அமைப்பு எங்கே போனது; வலுவில்லாத,"டெசோ' அமைப்பை, தற்போது கூட்ட வேண்டிய அவசியம் என்ன? உடனே, மீண்டும், தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அமைச்சர் முனுசாமி: நான் உங்களை கேட்பது, இலங்கையில், தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட நேரத்தில்,"டெசோ' எங்கே போனது?

ஸ்டாலின்: என்னை பேச அனுமதியுங்கள்.
சபாநாயகர் : அமைச்சர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை."டெசோ' என பொதுவாக பேசினார். இதற்கு மேல் விவாதம் வேண்டாம். இதையடுத்து, தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், எம்.எல்.ஏ., டி.ஆர்.பி. ராஜா மட்டும், சபாநாயகர் இருக்கை அருகே வந்து, அவருடன் சிறிது நேரம் வாக்குவாதம் செய்து, வெளியேறினார். எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்ததும்,"திட்டமிட்டு, தி.மு.க., -எம்.எல்.ஏ.,க்கள், சபை நேரத்தை வீணடிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்' என, சபாநாயகர் எச்சரித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
04-ஏப்-201317:48:16 IST Report Abuse
K.Sugavanam ரெண்டு கட்சி கிட்டேயும் மாட்டிகிட்டு இந்த டெசோ படர பாட்டை பாத்தா...என்னத்த சொல்ல...பேசாம கல்லறைக்கு உள்ளேயே இருந்து இருக்கலாமுன்னு அது நெனைக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Chennai,இந்தியா
04-ஏப்-201315:47:16 IST Report Abuse
Devanand Louis டெசோ என்பது ஒரு நாடகமேடை என்று கருணா , ஸ்டாலின் , கனி மற்றும் அணைத்து தி.மு.கவினகளுக்கு தெரியும்
Rate this:
Share this comment
Cancel
Saravanan Mani - Salem,இந்தியா
04-ஏப்-201315:13:26 IST Report Abuse
Saravanan Mani உண்மையா சொன்னா கோவம் வருகிறது ஆனால் அப்போ எங்கே சென்று இருந்திங்க 2ஜீ உழல் பணத்தை பங்கு போடவா?
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
04-ஏப்-201313:48:46 IST Report Abuse
LAX வந்துட்டார்யா.... பரீட்சை அட்டை பரந்தாமன். அதாங்க.... முதுமையான இளைஞரணித்தலைவர் கையில் பாருங்க....
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Sengkang,சிங்கப்பூர்
04-ஏப்-201311:00:09 IST Report Abuse
K.Sugavanam டெசோ இவங்க கிட்டே மாட்டிகிட்டு பேயி முழு முழிக்குதுங்கோ...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
04-ஏப்-201310:51:19 IST Report Abuse
sundaram எதையாவது காரணம் காட்டி வெளிநடப்பு செய்வது என்று உள்நடப்பு செய்வதற்கு முன்பே தீர்மானித்துவிட்டீர்கள். இதிலுமா அந்த டெசோ நாடகம்?
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
04-ஏப்-201310:50:54 IST Report Abuse
mirudan தேமுதிக எம்.எல்.ஏக்கள் போன்று ஆறு மாதம் இவர்களை தகுதி நீக்கம் செய்த அம்மா ஆணை போட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை