E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வெளிமாநில நெல்வரத்து அதிகம் : அரிசி விலை இனி குறையும்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
23:16

திருப்பூர்: ""அரிசி விலை உயர்ந்திருப்பதாக சிலர் மாயை ஏற்படுத்துகின்றனர்; அப்படியில்லை. வெளிமாநிலங்களில் இருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்து, விலையை குறைக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம்,'' என, அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க மாநில செயலர் மோகன் பேசினார்.
தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கம், நெல் அரிசி வணிகர் கூட்டமைப்பு சம்மேளனம் இணைந்த மாநில பொதுக்குழு கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது.

இக் கூட்டத்தில், மாநில செயலர் மோகன் பேசியதாவது: தென்மேற்கு பருவமழை ஏமாற்றி விட்டது; காவிரி நதிநீர் வரவில்லை. அதனால், 12 லட்சமாக இருந்த சம்பா சாகுபடி பரப்பு, பாதியளவாக குறைந்துள்ளது. மின்வெட்டு பாதிப்பும் சேர்ந்ததால், நெல் விவசாயத்திற்கு அதிக செலவு செய்தாலும், விளைச்சல் முறையாக இல்லை. முன்பெல்லாம், நெல்லில் இருந்து மூன்று நாட்களில் உற்பத்தியான அரிசி, தற்போது ஐந்து நாட்கள் கழித்து உற்பத்தியாகிறது. இத்தகைய சூழலில் விலையை குறைத்து அரிசியை எப்படி விற்பனை செய்ய முடியும்? மக்களை வதைக்க கூடாது என்பதற்காக, ஆந்திரா, கர்நாடகாவில் மட்டும் நெல் கொள்முதல் செய்து வந்த நாங்கள், தற்போது, ம.பி., - உ.பி., மகாராஷ்டிரா, மேற்குவங்கம் வரை சென்று நெல்கொள்முதல் செய்கிறோம். அங்கு கோதுமை முக்கிய பயிராக இருப்பதால், நெல் குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அரிசி விலை உயர்ந்ததாக சிலர் மாயை ஏற்படுத்துகின்றனர்; அப்படியில்லை. வெளிமாநிலங்களில் அதிக அளவு கொள்முதல் செய்து விலையை குறைக்க, நாங்கள் முயற்சித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்திற்கு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HARINARAYANAN - Chennai,இந்தியா
04-ஏப்-201317:51:29 IST Report Abuse
HARINARAYANAN இந்த விஷயம் மாநில அரசுக்கு இது வரை தெரியாதா அல்லது தெரிந்தே வாளாவிருந்தனரா? ..... வட மாநிலங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் பொது கொள்முதல் செய்து நம் மாநிலத்தில் விலையை குறைத்திருக்கலாமே...... ஏன் இது வரை செய்ய வில்லை ?
Rate this:
2 members
0 members
0 members
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
04-ஏப்-201315:57:21 IST Report Abuse
v.sundaravadivelu பொதுவாகவே எல்லா வியாபாரிகளும் ஏதாவது மொக்கை காரணங்களை சொல்லி, பொது மக்களின் அறியாமையை - துஷ்ப்ரயோகம் செய்வதில் வல்லுனர்கள்.. மக்களும் ஏன் எதற்கென்று கேட்க முடைப் படுவார்கள்.. இதனை சாதகமாக்கி எல்லாருக்கும் ஆப்பு வைப்பதில் கை தேர்ந்தவர்கள் வியாபாரிகள்.. ..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.