மீனவர்களை மீட்கும் படகு உருக்குலைந்த அவலம் : ரூ.1 கோடி வீணடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்களை மீட்கும் படகு உருக்குலைந்த அவலம் : ரூ.1 கோடி வீணடிப்பு

Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மீனவர்களை மீட்கும் படகு உருக்குலைந்த அவலம் : ரூ.1 கோடி வீணடிப்பு

ராமேஸ்வரம்: கடலில் தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற, 1 கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட நவீன மீட்பு படகு உருகுலைந்து, பயன்பாடின்றி கிடக்கிறது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், இயற்கை சீற்றத்தால், படகு பழுதால், கரை திரும்ப முடியாமல் பரிதவிக்கும் போது, அவர்களை காப்பாற்ற, முந்தைய தி.மு.க., அரசு, 5 கோடி ரூபாயில், ஐந்து நவீன மீட்பு படகுகள் வாங்கியது. இப்படகிற்கு நீலம் (சென்னை), கயல் (மல்லிப்பட்டிணம்), பவளம் (ராமேஸ்வரம்), முத்து (தூத்துக்குடி), வலம்புரி (கன்னியாகுமரி) என, பெயரிட்டு, நவ., 16, 1999ல், சம்பந்தப்பட்ட துறைமுகத்திற்கு, அப்போதைய முதல்வர் கருணாநிதி அனுப்பி வைத்தார். படகை இயக்க டிரைவர், உதவி ஊழியரை நியமிக்கவில்லை. இதனால், ராமேஸ்வரம் கடற்கரையில் ஓராண்டிற்கு மேலாக, காட்சி பொருளாக நின்ற பவளம் படகு, நாளடைவில் முக்கிய பொருள்கள் திருடு போனதால், மீன்துறை அதிகாரிகள், படகை கரை மேல் ஏற்றி வைத்தனர்.
இதன்பின், படகில் இருந்த விலையுர்ந்த இயந்திர பாகம், "புரோப்பல்லர், கடல் ஆழம் கண்டறியும் கருவியான, எக்கோ சவுண்டர், வயர்லெஸ்' ஆகியவை திருடப்பட்டன. 5 கோடி ரூபாயை செலவழித்த தி.மு.க., அரசு, அதை இயக்க நடவடிக்கை எடுக்காததால், தற்போது, பவளம் படகு, குப்பை கொட்டும் இடத்தில், சின்னாபின்னமாகி கிடக்கிறது. இதே நிலை தான், மற்ற நான்கு மீட்பு படகிற்கு நேர்ந்துள்ளது என, மீன்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MAIDEEN - tiruvarur,இந்தியா
04-ஏப்-201323:54:01 IST Report Abuse
MAIDEEN திமுக ஆட்சி முடிந்து ஒன்னரை வருடம் முடிந்து விட்டது. அடுத்து ஆட்சியில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுத்து படகை பாது காத்திருக்கலாமே?
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
04-ஏப்-201310:49:15 IST Report Abuse
mirudan திமுக ஆட்சியில் மக்கள் நலன் என்ற அடிப்படையில் திட்டம் போடுவதில்லை, தலைவர் பாக்கெட் நிரம்ப வழி இருந்தால் திட்டம் உடனே நிறைவேற்ற படும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை. 1 கோடி கொடுத்து படகை வாங்கியவர் அதை இயக்க பராமரிக்க ஆள் போட வேண்டும் என யோசிக்க வேண்டாமா ? இது அந்த மாவட்ட செயலருக்கு தெரியாமல் போய் விட்டது தெரிந்து இருந்தால் கட்டிங் வாங்கி கொண்டு ஆளை போட்டு இருப்பார் . மேலும் அதை பராமரிப்பு என்ற பெயரில் மாமூலும் வசூல் பண்ணி இருப்பார் ? அடே வடை போச்சே என வருந்தி என்ன பயன். அம்மா ஆட்சியில் இதை காயலான் கடையில் போட தான் முடியும்
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
04-ஏப்-201310:10:16 IST Report Abuse
K Sanckar இந்த செய்தி உண்மையாக இருந்தால் கருணாநிதியும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் இத்தொகையை கட்ட வேண்டும் என்று வழக்கு போடவேண்டும். கருணாநிதி வழக்கம் போல ஜெயலலிதாவின் மீது பழியை போட்டு தப்பித்து கொள்வார் . மீனவ மக்கள் ஒரு போதும் கருணாநிதியை மன்னிக்க கூடாது. கருணாநிதிக்கு வாக்குகளையும் அளிக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - New Delhi,இந்தியா
04-ஏப்-201309:13:17 IST Report Abuse
Rajasekar இது ஒரு வெட்ககேடான செயல். சம்பந்த பட்ட அலுவலர்கள் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசு இயந்திரம் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சேவை என்று எந்தஒரு அலுவலர்களும் சிந்திப்பதே இல்லை. இன்றைய மேற்படி வருமானம் எவ்வளவு கிடைக்கும் அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்பது தான் பெரும்பாலான அரசு ஊழியர்களில் தினசரி வேலையாக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
04-ஏப்-201309:09:39 IST Report Abuse
Chenduraan திமுகவை பொருத்தவரையில் வாங்கும்போது நல்ல கமிசன் கிடைக்கும் அது போதும். பயன்படுத்தினால் என்ன படுத்தா விட்டால் என்ன? நம்ம அதிகாரிகளே அந்த விலை உயர்ந்த கருவிகளை விற்று தின்னு இருப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஏப்-201302:23:01 IST Report Abuse
தமிழ்வேல் இது மட்டும் அதிகாரிகளின் தவறில்லை... தாத்தாவின் தப்பு..அப்படிதானே ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை