E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 03,2013,23:37 IST
கருத்துகள் (60)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளார். மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது. ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப்பெண்கள், ஆங்கிலம் முதல் தாளுக்கும் வழங்கப்படும் என, தேர்வுத் துறை முடிவு செய்து, பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில், ஏப்ரல் 1ல், 221 மாணவர்கள், 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தேர்வெழுதினர். பஸ்சில் இந்த விடைத்தாள் பார்சலை கொண்டு சென்ற, அஞ்சலக புறநிலை ஊழியர் சவுந்தர்ராஜன், குடிபோதையில் இருந்ததால், பார்சலை தவற விட்டுள்ளார். சத்தியமங்கலம் பள்ளியிலும், துணை அஞ்சலகத்திலும் உயர் அதிகாரிகள் முகாமிட்டு, தீவிர விசாரணை நடத்தினர். காணாமல் போன அஞ்சல் பையை, செஞ்சி பஸ் நிலையத்தில், எஸ்.பி., மனோகரன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார், தேடுதல் வேட்டை நடத்தினர். பின், அஞ்சலக புறநிலை ஊழியர் சவுந்தர்ராஜன், தனியார் பஸ் கண்டக்டர் முருகேசன் ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தினர்.
இரண்டாவது நாளாக தேடுதல்:
நேற்று காலை, செஞ்சிக்கு வந்த எஸ்.பி., மனோகரன், தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். "பொதுமக்கள் தவறுதலாக தபால் பையை எடுத்து வைத்திருந்தால், போலீசாரால் எந்த பிரச்னையும் வராது' என, அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கினார். பின் விடைத்தாள்களை தேடும் பணி, நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தது. நான்கு தனிப்படை போலீசார், சத்தியமங்கலம் தொடங்கி, செஞ்சி, திண்டிவனம் வரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில், தொடர்ந்து நடக்க உள்ள தேர்வுகளில், இது போன்ற பிரச் னைகளை தவிர்ப்பது குறித்து கல்வி, தபால், காவல் துறை அதிகாரிகளுக்கு, விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகத்தில், நேற்று காலை, அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சஸ்பெண்ட்: கலெக்டர் சம்பத் நிருபர்களிடம் கூறுகையில், ""தொடர்ந்து நடக்க உள்ள தேர்வை, பாதுகாப்புடன் மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளோம். விடைத்தாள் மாயமான மாணவர்களின் பெற்றோர், மதிப்பெண் வழங்குவது குறித்து யூகத்தில் புகார் கொடுத்துள்ளனர். மறு தேர்வு நடத்துவது குறித்து அரசு தான் முடிவு செய்யும்,'' என்றார். அஞ்சலக முதன்மை

கண்காணிப்பாளர் கந்தசாமி கூறும்போது, ""கவனக்குறைவாக இருந்த ஊழியர் சவுந்தர்ராஜன், பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணைக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில், விடைத்தாள் கட்டுகள் எண்ணிக்கை சரியாக வந்து, அனுப்பி வைக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க கூடுதலாக ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.
தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவம், பொறியியல், தொழிற்கல்வி உள்ளிட்ட உயர்கல்வி சேர்க்கை நடைபெறும். அதனால், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் காணாமல் போன விவகாரத்தில், மறுதேர்வு முடிவு எடுக்கப்பட்டது. தற்போது, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் தான் காணாமல் போயுள்ளது. இந்த தேர்வின் மதிப்பெண் அடிப்படையில், உயர் கல்வி சேர்க்கை எதுவும் நடைபெற போவது இல்லை. எனவே, 10ம் வகுப்பு ஆங்கிலம் இரண்டாம் தாளில், என்ன மதிப்பெண்களை, மாணவர்கள் எடுக்கின்றனரோ, அதே மதிப் பெண்களை, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இவ்வாறு, தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை...: நேற்று முன்தினம், 10ம் வகுப்பு ஆங்கிலம், இரண்டாவது தாள் தேர்வில், ஒரு மார்க் கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. "லூனல்' என்ற நகரின் பெயருக்கு பதிலாக, "லஞ்ச்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, 10ம் வகுப்பு, தமிழ் இரண்டாவது தாள் தேர்வு விடைத்தாள்களில், 63 விடைத்தாள்கள், விருத்தாசலம் அருகே, தண்டவாளத்தில் சேதம் அடைந்தன. பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், அவர்கள் தமிழ் முதல் தாளில் எடுத்த மதிப்பெண் வழங்கப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் கண்ணீர்:
"ஆங்கிலம் முதல் தாள்

Advertisement

எளிமையாக இருந்தது; இரண்டாம் தாள் கஷ்டமாக இருந்தது. இரண்டாம் தாள் மதிப்பெண்ணை முதல் தாளுக்கும் வழங்கினால், எங்கள் பாடு கஷ்டம் தான்' என, ஆசிரியர்களிடம், மாணவர்கள் கண்ணீருடன் கூறினர். செஞ்சி சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் பேசுகையில், "விடைத்தாள்களை தீவிரமாக தேடி வருவதால், அவை கிடைத்து விடும். எனவே, மாணவர்கள் கலக்கமடைய வேண்டாம். அப்படி இல்லை என்றாலும், சரியான முடிவை, கல்வித் துறை அறிவிக்கும்' என்றனர்.
மாணவர்கள் கண்ணீருடன் கூறியதாவது: ஏற்கனவே, கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில், சேதமான தமிழ் இரண்டாவது தாள் விடைத்தாள்களுக்கு, தமிழ் முதல் தாளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் எங்களுக்கும் அறிவித்தால், எங்கள் பாடு கஷ்டம் தான். ஆங்கிலம் முதல் தாள் எளிமையாக இருந்தது; நல்ல முறையில் தேர்வு எழுதினோம். இரண்டாம் தாள் கஷ்டமாக இருந்தது; இதில் கண்டிப்பாக மதிப்பெண் குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் குழு -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (60)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
04-ஏப்-201317:34:25 IST Report Abuse
jagan மாணவர்களுக்கு நல்ல ஐடியா குடுத்தாச்சு... அடுத்த வருஷம்....எவனாவது கணக்கு எக்ஸாம் சரியாய் எழுதலனா...போஸ்ட் மேனுக்கு காசு குடுத்து பேப்பேர தொலைச்சுடு.... போஸ்ட்மன் நல்ல கல்லா கட்டுவார்....வளர்ச்சி பாதையில் தமிழகம்.....
Rate this:
0 members
0 members
67 members
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
04-ஏப்-201316:57:22 IST Report Abuse
jagan நமது சட்டம் திறமையின்மைக்கு துணை.......ஊழியர் சரியாய் வேலை செய்யலைன்னு எதாவது அதிகாரி நடவடிக்கை எடுத்தா 'ஜாதிய சொல்லி திட்டினார்' என்று போலீசில் ஒரு கம்ப்ளைன்ட் குடுத்தா அதிகரி காலி......அரசு உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இது புரியும்......
Rate this:
0 members
0 members
50 members
Share this comment
Cancel
ram, nigeria - Lagos,நைஜீரியா
04-ஏப்-201314:41:48 IST Report Abuse
ram, nigeria எல்லாம் ஓகே . If next maths or science exam paper missed, how the department will handle the marks ??? Ha Ha Ha . Jokers
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஏப்-201314:37:23 IST Report Abuse
தமிழ்வேல் இந்த மார்க் தரும் சிஸ்டம் மிகவும் நல்லதாக தெரிகின்றது.. இனிமேல் பரீட்ச்சைகளை ஒருநாள் மட்டும் நடத்தி விட்டு அந்த மார்க்கை அணித்து சப்ஜக்டிர்க்கும் தந்துவிடலாமே ? ஆனால் ஒன்று அதிலும் விடைத்தாள்கள் ஒழுங்காய் போக வேண்டிய இடத்திற்கு சென்றடைய வேண்டும்..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
04-ஏப்-201313:27:25 IST Report Abuse
Narayan Arunachalam என்ன அவசரம்? விதி 110 இன் கீழ் அறிக்கை வராமலா போய்டும்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201313:12:06 IST Report Abuse
Jeyaseelan ஒரு மாணவர் மற்ற subject களில் எத்தனை மதிப்பெண் வாங்கி இருக்கிறாரோ அவற்றின் averge மதிப்பெண்ணை இந்த subject க்கு கொடுக்கலாம்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
basha - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201313:11:28 IST Report Abuse
basha பணி இடை நீக்கம். கேவலமா உள்ளது. பணி நீக்கம் + சிறை.மிக சிறந்தது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
muthukkaruppaiya - Trichy,இந்தியா
04-ஏப்-201312:40:13 IST Report Abuse
muthukkaruppaiya இது சரியான தீர்வு கிடையாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
04-ஏப்-201311:23:48 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் Kathir Azhagan - sivagangai, tn, எனக்கும் ஜெகனுக்கும் என்ன வாய்க்கா வரப்பு சண்டையா ??? , Samy Chinnathambi - இனத்துரோகிகள் மீண்டும் வந்திட கூடாது என்று எதிரிகளை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை வந்திடுமோ என்று நான் யோசித்து கொண்டுள்ளேன்... பார்க்கலாம்.. முடிந்த வரை இவர்களை விட்டு ஒதுங்கி நிற்பதே நல்லது என்று நினைக்கிறோம்..
Rate this:
14 members
0 members
0 members
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
04-ஏப்-201310:49:29 IST Report Abuse
யமதர்மன் என்ன தீர்வு இது. ? கொஞ்சம் கூட யோசிக்கும் சக்தியே இல்லையா இவர்களுக்கு? இதுவே முதல் நாள் நடைபெறும் தேர்வின் விடைத்தாள்கள் காணாமற் போயிருந்தால் சென்ற ஆண்டு மதிப்பெண்களையா வழங்க முடியும்? பள்ளிக்கல்வித்துறை பொறுப்பில்லாமல் செயல்படுகிறது என்பது இப்போது படிப்படியாக வெளிச்சத்திற்கு வருகிறது. ஆனாலும் இவர்கள் திருந்துவார்களா?
Rate this:
0 members
0 members
56 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-ஏப்-201319:09:34 IST Report Abuse
சு கனகராஜ் தமிழ் ஆங்கிலத்திற்கு இது தீர்வாக கண்டு பிடித்து விட்டார்கள் மற்ற பிற தேர்வுகள் தொலைந்தால் என்ன செய்வார்கள் ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.