E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மானிய விலை சமையல் காஸ் சிலிண்டர் எண்ணிக்கை, 10 ஆக உயருமா?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

03 ஏப்
2013
23:38

கடந்த மாதம் பதிவு செய்து, தாமதமாக, தற்போது, சமையல் காஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, நடப்பு நிதியாண்டில், கூடுதலாக ஒரு சிலிண்டரை, மானிய விலையில் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
கணக்கிடப்படும்: அதே நேரத்தில், காஸ் சிலிண்டர் வினியோகப்படும் தேதியின் அடிப்படையில், மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும் என, ஐ.ஓ.சி., நிர்வாகம் தெரிவித்துள்ளது. "குடும்பம் ஒன்றுக்கு, ஆண்டுக்கு, ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, இனி, மானிய விலையில் வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு, செப்., 14ம் தேதி முதல், அமலுக்கு வந்த இந்த அறிவிப்பிற்கு, நாடு முழுவதும், கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஒன்பதாக உயர்த்தி, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, ஏப்., 1ம் தேதி துவங்கிய நடப்பு நிதியாண்டில், ஒரு குடும்பம், ஒன்பது காஸ் சிலிண்டர்களை மானிய விலையில் பெறலாம்.

கடும் எதிர்ப்பு: இந்நிலையில், கடந்த மாதம் பதிவு செய்து, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின், ஏஜென்சி நிறுவனங்கள் செய்த கால தாமதத்தால், தற்போது வினியோகம் செய்யப்படும் சிலிண்டர்கள், நடப்பு நிதியாண்டிற்கான, மானிய விலை சிலிண்டர்களாக கணக்கிடப்படுவதற்கு, வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால், கடந்த நிதியாண்டில், மானிய விலை சிலிண்டர்களை முழுமையாக பெறாதவர்கள், அதை நடப்பு நிதியாண்டில், சேர்த்து பெற முடியாது என, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. அப்படியானால், ஏப்., 1ம் தேதிக்கு முன், "பில்' செய்யப்பட்ட சிலிண்டர்களுக்கும், குறைந்தபட்சம், கடந்த மாதம், முதல் வாரத்தில் பதிவு செய்து, தாமதமாக, தற்போது, சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கும், நடப்பு நிதியாண்டில், கூடுதலாக ஒரு சிலிண்டரை, மானிய விலையில் தர வேண்டும் என, நுகர்வோர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

சரியல்ல: இதுகுறித்து, சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த இல்லதரசி ஒருவர் கூறியதாவது: கடந்த மாதம், 9ம் தேதி, காஸ் சிலிண்டருக்கு பதிவு செய்தேன். வழக்கமாக ஓரிரு வாரத்திற்குள் வினியோகம் செய்யப்படும் சிலிண்டர், இம்முறை, ஏப்., 1ம் தேதி தான் வந்தது. பதிவு செய்து, 22 நாட்கள் கழித்து, கடந்த, 1ம் தேதி வினியோகம் செய்யப்பட்ட சிலிண்டரை, நடப்பு நிதியாண்டிற்கான மானிய விலை சிலிண்டர் கணக்கில் எடுத்துக் கொள்வது சரியல்ல. இந்த குளறுபடியை தவிர்க்க, ஒரு சிலிண்டர் வினியோகத்திற்கு பின், 21 நாட்கள் கழித்து தான், வாடிக்கையாளர்கள், மற்றொரு சிலிண்டருக்கு பதிவு செய்ய வேண்டும் என, சொல்லும், ஏஜென்சிகள், பதிவு செய்த, 21 நாட்களுக்குள், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிலிண்டர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கட்டாயம் பதிவு: ஐ.ஓ.சி., நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சமையல் காஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்படும் தேதியை அடிப்படையாகக் கொண்டு, மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். இதில், குளறுபடி ஏற்படுவதை தவிர்க்க, வாடிக்கையாளர்கள், சிலிண்டர் வாங்கும் ஒவ்வொரு முறையும், அது வினியோகிக்கப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை, அதற்கான நீலநிற புத்தகத்தில் கட்டாயம் பதிந்துக் கொள்ள வேண்டும். கடந்த மாதம் பதிந்து, தற்போது சிலிண்டர் பெறுவோருக்கு, நடப்பு நிதியாண்டிற்கான, மானிய விலை சிலிண்டரை, 10 ஆக உயர்த்த வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

1.46 கோடி வாடிக்கையாளர்கள்: தமிழகத்தில், "இண்டேன்' உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, மொத்தம், 1.46 கோடி, வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, மானிய விலையில், 398 ரூபாய்க்கும், மானியமில்லாத நிலையில், 891 ரூபாய்க்கும், சிலிண்டர் வினியோகிக்கப்படுகிறது.

- நமது நிருபர் -




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Hwc Ptb - Chennai,இந்தியா
04-ஏப்-201312:14:47 IST Report Abuse
Hwc Ptb கடந்த நிதியாண்டில், மானிய விலை சிலிண்டர்களை முழுமையாக பெறாதவர்கள் மற்றும் கடந்த மாதம் பதிந்தவர்களுக்கு கட்டாயம் ஒரு சிலிண்டர் சேர்த்து மொத்தம் பத்து சிலிண்டர்கள் கொடுக்க வேண்டும்.
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-ஏப்-201311:08:38 IST Report Abuse
சு கனகராஜ் அவர்களது கால தாமதத்திற்கும் மக்கள் தலையில் தான் வந்து விடிய வேண்டுமா ?
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-ஏப்-201310:55:24 IST Report Abuse
சு கனகராஜ் கேள்விக்குறி ஆச்சரிய குறியாக மாறுமா ?
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
04-ஏப்-201310:12:37 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் எண்ணெய் நிறுவனங்கள் தாமதமாக வழங்குவதற்கு சாமானிய மக்கள் இழப்பை ஏற்க வேண்டுமா?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
04-ஏப்-201310:05:47 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் பொருளாதார சீர்திருத்தம் , பொருளாதார சீர்திருத்தம் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார்கள் , அப்படி என்றால் என்ன என்று கேட்டால் அந்நிய செலாவானி , பங்கு வர்த்தகம் , உலக சந்தை மதிப்பு , உள்ளூர் காய்கறி விலை என்று சகட்டு மேனிக்கு அடிச்சி விடுறாங்க சிதம்பரமும் , மண்ணு மோகனும்... என்னமோ நமக்கு எல்லாம் பொருளாதாரம் பத்தி எதுவுமே தெரியாது என்ற நினைப்பு.. // டெல்லியில் உள்ள டெல்லி பல்கலைகழகம் (university of delhi)அனைத்து கல்லூரிகள் இடையேயும் , அங்கு 2012 ஆம் ஆண்டு பொருளாதாரம் பற்றி செமினோர் , debate , கட்டுரை போட்டிகள் எல்லாம் நடந்தது , எங்கள் hindu college சார்பாக நான் கலந்து கொண்டேன்.. future economic plans.. என்ற தலைப்பில் பேசினேன்.. Montek Singh Ahluwalia...Deputy Chairman ..Planning Commission of India இவர் தான் முதல் பரிசினை அவர் கையாலே எனக்கு கொடுத்தார்.. கால கொடுமை.. வீழ்ந்துபோன பொருளாதாரத்தை நிமிர்த்த உங்களால் முடியாது என்றால் , இளைஞர்களிடம் விட்டுவிடுங்கள்... நெனைச்சா பெட்ரோல் , டீசல் விலை உயர்வு , காஸ் விலை உயர்வு என்று இவர்கள் இஷ்டதிற்கு ஏற்றி அழும்பு செய்கிறார்கள்.. தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்டதில் ஒவ்வொரு அமைச்சரும் , MP யும் 100 கணக்கில் சிலிண்டர்கள் வாங்கியுள்ளனர்.. என்ன கொடுமை ?? ஆனால் சாதாரண மக்களுக்கு??? சத்தியமா இதெல்லாம் அப்பட்டமான அந்நியாயம். இதுக்காகவே தாய்மார்கள் அனைவரும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி சேரும் கட்சிகளை அரசினை கல்லால் அடித்து துரத்த வேண்டும்... செய்தால் நீங்கள் பிழைப்பீர்கள் , இல்லையேல் உங்கள் வாழ்க்கை கேள்வி குறி தான்...
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
04-ஏப்-201310:04:15 IST Report Abuse
Venkatesan Jayaraman தேர்தல் முடியும் வரை 20 கூட ஆகலாம் . புதுக்கோட்டை இடை தேர்தல் சமயத்தில் 2 மாதத்திற்கு தமிழக அரசு 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கியதே அது போல . இதை பார்த்து நம்ப தமிழ் மக்களும் அணைத்து பிரச்சனைகளையும் மறந்து ஒட்டு போடு விடுவார்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
ravi ramanujam r - rajapalayam,இந்தியா
04-ஏப்-201307:46:55 IST Report Abuse
ravi ramanujam r எதிர் வர இருக்கும் பார்லி தேர்தலை மனதில் வைத்து தளர்தபடலாம் என்பதே உண்மை.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
04-ஏப்-201307:29:49 IST Report Abuse
பெருவை பார்த்தசாரதி சமையல் எரிவாயு வினியோகிப்பதில், இப்போதிருக்கும் நடைமுறையில் எவ்வித சீர்திருத்தம் கொண்டுவந்தாலும், எப்படியோ அதில் குளறுபடிகளை கொண்டு வருவதில் வினியோகிப்பாளர்கள் கைதேர்ந்தவர்கள். சிலிண்டரை டெலிவர் செய்யாமலேயே ‘டோர் லாக்’ ஊழல் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அலைபேசியில் புக் செய்யும் திட்டம் வெற்றியடைந்தாலும், சிலிண்டர்களை டெலிவரி கொடுப்பதில் தாமதம் செய்வது தொடர்கிறது. இத்தகய செயல்களுக்கு, இப்போதிருக்கும் நடைமுறையில் ஒரு சரியான மாற்று யோசனை வேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
04-ஏப்-201305:37:47 IST Report Abuse
K.Sugavanam மாதம் ஒரு சிலிண்டர் கண்டிப்பாக வேண்டும்..
Rate this:
0 members
1 members
1 members
Share this comment
Cancel
Srinath - Coimbatore,இந்தியா
04-ஏப்-201303:04:16 IST Report Abuse
Srinath மண்டையில் அறிவு என்பது சற்றும் இல்லாத வட இந்தியக் கூட்டத்திடம் ஒரு நாட்டு நிர்வாகம் சிக்கினால், நாடே சின்னா பின்னமாகிவிடும் என்பதற்கு இப்போது இருக்கும் குழப்பங்களும், நாட்டு நிர்வாகமே சாட்சி.
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.