E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தென் மாவட்ட ரயில்கள் "ஹவுஸ்புல்': தத்கல் முன்பதிவு 6 நிமிடங்களில் முடிந்தது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

04 ஏப்
2013
07:16
பதிவு செய்த நாள்
ஏப் 03,2013 23:39

சென்னை: கோடை காலத்தையொட்டி தென் மாவட்ட ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால், தத்கல் டிக்கெட் எடுக்க, வரிசையில், பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டம்: கோடைகாலத்தை ஒட்டி, சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளது. இதனால், எழும்பூரிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும், காரைக்கால், நெல்லை, எக்ஸ்பிரஸ் ரயில்களில், ஜூன் 10ம் தேதி வரை, அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. கன்னியாகுமரி, முத்துநகர், ராமேஸ்வரம் சேது, ராமேஸ்வரம், குருவாயூர், அனந்தபுரி, நெல்லை, செங்கோட்டை, திருச்செந்தூர், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில், மே 25ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு மற்றும் "ஏசி' மூன்றாம் வகுப்பு டிக்கெட்கள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. மற்ற வகுப்புகளில், குறைந்த இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.



குறைவான இடங்களே: ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில், மே 10ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு மற்றும் மூன்றாம் வகுப்பு, "ஏசி' வகுப்பு டிக்கெட்கள் முழுவதும், முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. உயர் வகுப்பில், குறைவான இடங்களே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன. வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில், மே 25ம் தேதி வரையிலும், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏப்., 30ம் தேதி வரையிலும், "ஏசி' சேர்கார் வகுப்பு டிக்கெட் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏப்., 25ம் தேதி வரை, இரண்டாம் வகுப்பு டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில், இரண்டாம் வகுப்பு, சாதாரண சேர்கார் வகுப்பில், நிறைய இடங்கள் முன்பதிவு செய்யப்படாமல் உள்ளன.


"ஏசி' மூன்றடுக்கு பெட்டி பயணம்: வழக்கமாக, ரயில்களில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி டிக்கெட்கள் தான் முதலில் முன்பதிவு முடிக்கப்படும். தற்போது, கோடைக் காலம் என்பதால், "ஏசி' மூன்றடுக்கு பெட்டியில் பயணம் செய்வதற்கு அதிக பயணிகள் விரும்புவதால், "ஏசி' மூன்றடுக்கு மற்றும் "ஏசி' சேர்கார் இடங்களுக்கான முன்பதிவு, இரண்டாவது வகுப்பு படுக்கை மற்றும் இருக்கை வசதி டிக்கெட் முன்பதிவு, முன்பே முடிந்து விடுகின்றன என, ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.


பயணிகள் ஏமாற்றம்: தென்மாவட்ட ரயில்களில், பயணிகள் கூட்டம் அதிகம் உள்ளதால், தத்கால் வசதியில், டிக்கெட் முன்பதிவு செய்ய, ஏராளமான பயணிகள் வருகின்றனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களில் உள்ள, ரயில் டிக்கெட் கம்ப்யூட்டர் முன்பதிவு மையங்களில், தத்கால் வசதியில், டிக்கெட் வாங்குவதற்கு, நேற்று அதிகாலை, 5:30 மணியிலிருந்து, நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருந்தனர். தென்மாவட்ட ரயில்களுக்கான தத்கால் டிக்கெட்டுகள் அனைத்தும், நேற்று, 6 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டதால், மணிக்கணக்கில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
innocent - india,இந்தியா
05-ஏப்-201308:12:32 IST Report Abuse
innocent Indian railways introducing summer special trains from Bombay,bangalore,,andra and karnataka to kerala only. but not introducing trains to south and central tamilnadu. I appreciate kerala officers and politicans for doing great job for their state. why even single politician including vaiko not doing anything for tamilnadu people for railway facilities. when kerala politicans approach central for their requirement. why no tamilnadu politicians not approaching central for tamilnadu requirements.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
கோவை மாரியப்பன் - Coimbatore,இந்தியா
04-ஏப்-201315:20:24 IST Report Abuse
கோவை மாரியப்பன் விடுமுறை இனிய பயணம்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201313:14:31 IST Report Abuse
Mohandhas ஏஜெண்டுகள் கமிஷன் கொடுத்து புக் செய்து விடுவார்கள்... அப்புறம் 200 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய்க்கு.. கொள்ளையடிக்க வேண்டியது தான் ..
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
04-ஏப்-201310:31:04 IST Report Abuse
Ashok ,India சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு கூடுதல் ரயில்கள் விடுவதால் மத்திய அரசுக்கு ஏதேனும் நஷ்டமா??. அதிகப்படியான ரயில்களை மதுரை வரை இயக்கம் போது கூட்ட நெரிசல் இருக்காது. மக்களின் கஷ்டத்தை மத்திய அரசு என்றைக்கு தான் புரிந்து கொள்ளுமோ ??. மாநில அரசு கூடுதலாக ஒரு மாதத்திற்கு முன்னரே ஏ.. சி பேருந்துகளை பராமரித்து அல்லது வெளியில் வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் பிடித்தால் மக்களுக்கு இனிய பயணமும்,அரசுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
04-ஏப்-201308:49:26 IST Report Abuse
PRAKASH ஒரு ரயில் கூடுதலா விட மாட்டேன்குரான்களே ???
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Peria Samy - chennai,இந்தியா
04-ஏப்-201308:28:14 IST Report Abuse
Peria Samy உயர்த்தப்பட்ட பிறகும் ரயில் கட்டணம் பஸ் கட்டணத்தை விட கணிசமாகக் குறைவாக உள்ளது. தொலைதூரபயணம் செய்யும் போது ரயில் பயணம் மிகவும் வசதியாக உள்ளதால் ரயில் பயணத்தையே பெரும்பாலும் விரும்புகிறார்கள் . அதனால் தான் இந்தக் கூட்டம்..பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும். வழக்கமான ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
04-ஏப்-201302:43:50 IST Report Abuse
Sekar Sekaran சென்னையை விட்டு அவசர அவசரமாய் ஓடுகின்றார்களோ..? ஏன் என்னாச்சு..?
Rate this:
18 members
0 members
12 members
Share this comment
ALAGAPPAN NAGARAJAN - Kandavarayanpatti, sivaganga District,இந்தியா
04-ஏப்-201307:15:57 IST Report Abuse
ALAGAPPAN NAGARAJANஉன் பாட்டியின் அடிபொடிகள் அதான்பா அமைச்சர்கள் சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி பற்றி விசாரணை செய்ய சென்று ஒரு வேளை மதிய உணவிற்கு 87,000 செலவு செய்து இருக்கிறார்களே இதுதான் உன் பாட்டியின் பொற்கால ஆட்சியா? இந்த மாதிரி செய்திகளுக்கு ஏன் கருத்து சொல்லாமால் பயந்து ஓடுகிறீர்?...
Rate this:
2 members
0 members
6 members
Share this comment
Pamaran A - chennai,இந்தியா
04-ஏப்-201308:46:40 IST Report Abuse
Pamaran Aசொந்த ஊர்-ல current cut -நிலவரம் எப்பிடி இருக்குன்னு பார்க்க தான் சென்னையை விட்டுட்டு சொந்த ஊர்-க்கு train பிடிக்க ஓடுகிறார்களோ...
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
yuvaraj v - chennai,இந்தியா
04-ஏப்-201311:52:10 IST Report Abuse
yuvaraj vஎல்லாம் வெயில் கோடுமை தாங்க முடியாம தான்..... 2hrs பவர் கட் விட... 16hrs பவர் கட் மேல்.......
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
04-ஏப்-201301:46:04 IST Report Abuse
g.s,rajan Railways should operate more trains with fully unreserved compartments here after. Even more short distance trains can be operated to avoid rush in long distance trains otherwise public has to suffer a lot to travel urgently,who are travelling un planned.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.