It's not easy to maintain a coalition govt., in india: Manmohan | "கூட்டணி அரசை கட்டி மேய்ப்பது எளிதானதல்ல': பிரதமர் பேச்சில் சோர்வு | Dinamalar
Advertisement
"கூட்டணி அரசை கட்டி மேய்ப்பது எளிதானதல்ல': பிரதமர் பேச்சில் சோர்வு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

""கூட்டணி அரசை நடத்துவது, அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஜனநாயக நாடான இந்தியாவில், கூட்டணி அரசை வழிநடத்துவது, மிகவும் கடினமான பணி,'' என, பிரதமர், மன்மோகன் சிங் கூறினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், நேற்று டில்லியில் நடந்த கருத்தரங்கில், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: ஜனநாயக அமைப்பின் படி செயல்படும் போது, அதிக நன்மைகள் உள்ளன; அதை மறுக்க முடியாது; அதே நேரத்தில், பல பிரச்னைகளும் உருவாகும்; அவற்றையும் தவிர்க்க முடியாது. ஜனநாய அமைப்பின் படி, ஆட்சியை நிர்வகிக்கும் போது, முக்கியமான, மூன்று பிரச்னைகளை, நிச்சயம் எதிர்கொள்ள வேண்டிய நிலைமை உள்ளது. அதில், முக்கியமானது ஊழல். அதேபோல, அதிகார மட்டத்தில் உள்ள அதிகாரிகள், விரைந்து செயல் பட முடியாத நிலைமை ஏற்படும். அதிகாரிகளின் மந்தமான செயல்பாடுகளையும், எதிர்பார்த்தாக வேண்டியுள்ளது. அடுத்த பிரச்னை, கூட்டணி அரசு. ஜனநாயக அமைப்பின் படி செயல்படும் நாட்டில், கூட்டணி அரசு என்ற சூழ்நிலை ஏற்பட்டால், அது, சவாலான காரியம். கூட்டணி அரசை நடத்துவது, எளிதான காரியம் அல்ல. இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், கூட்டணி அரசை வழிநடத்துவது, மிகவும் கடினமான பணி என்பதை, அனைவரும் உணர வேண்டும். இந்தியாவில், தற்போது, 5 சதவீதம் மட்டுமே, பொருளாதார வளர்ச்சி உள்ளது; இது போதுமானது இல்லை. உலக நாடுகள் அனைத்திலும், இது போன்ற நிலை தான் காணப்படுகிறது. எனவே, இந்தியாவின் பொருளாதார நிலைமையை குறை சொல்வதும், வருத்தப் படுவதும் தேவையற்றது. இவ்விஷயத்தில் எதிர்மறை மனநிலையில் பேசுவதை, அனைவருமே தவிர்க்க வேண்டும். உலகம் முழுவதுமே, இது தான் பிரச்னை என்பதால், அதன் ஏற்ற இறக்கங்கள், இந்தியாவிலும் இருக்கவே செய்யும். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம், அரசின் கைகளில் இருந்து, எண்ணெய் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டர்களின் மானியத்தை குறைக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளால், நிதிப்பற்றாக்குறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். பொதுத்துறை நிறுவனங்களைக் காட்டிலும், தனியார் நிறுவனங்கள்தான், தொழில் துறையை, விரைந்து நடத்திச் செல்லும். இவ்வாறு மன்மோகன்சிங் பேசினார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (48)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
04-ஏப்-201310:59:07 IST Report Abuse
Wilsonsam Sp மக்களுக்கு நல்லது செய்தால் எதுக்குய கூட்டணி வக்கினும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
04-ஏப்-201310:53:07 IST Report Abuse
chinnamanibalan அரசியல் கட்சிகளின் சுயநல போக்கால், இனி வருங்காலங்களில் இந்தியாவில் கூட்டணி கட்சிகளை வைத்து ஆட்சி நடத்துவதென்பது முற்றிலும் இயலாத செயலாக மாறி விடும்.எனவே பிரதமர் தேர்வில் நேரடி தேர்வு முறையை கொண்டு வந்தால் ஒருவேளை கூட்டணி குளறுபடிகளுக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி ஏற்படலாம்...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Narayan Arunachalam - DELHI,இந்தியா
04-ஏப்-201310:40:52 IST Report Abuse
Narayan Arunachalam அது எப்படிங்க ஞானோதயம் கடைசில தான் வருமா..
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
04-ஏப்-201310:39:15 IST Report Abuse
Sandru மிகவும் வெகுளியான பிரதம மந்திரி... கழுதைகளை கட்டி மேய்க்கிறேன் என்று தெளிவாக அறிவிக்கிறார்.
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-ஏப்-201318:31:11 IST Report Abuse
சு கனகராஜ் ஒரு வேளை திமுக வெளியேறியதால் மனம் திறக்கிராரோ ?...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
04-ஏப்-201310:33:27 IST Report Abuse
கோமனத்தாண்டி நல்ல தலைப்பாகட்டி நீங்கள், போங்கள் வெட்கமாக இருக்கிறது
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
யமதர்மன் - Chennai,இந்தியா
04-ஏப்-201310:28:55 IST Report Abuse
யமதர்மன் So you are not a good shepherd
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
திராவிடன் - Madurai,இந்தியா
04-ஏப்-201310:23:35 IST Report Abuse
திராவிடன்  மாட்டுக்காரனுக்கு 100 மாட மேக்கிறது அவ்வளவு சுலபமல்ல...பால் வேணும்னா மேச்சுத்தான ஆகனும்...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-ஏப்-201318:32:30 IST Report Abuse
சு கனகராஜ் மேய்ப்பது மொத்தம் கறவை மாடாக இருந்தால் பரவாயில்லையே முக்கல் வாசி சண்டித்தனம் செய்யும் காளை மாடுகளாக அல்லவா உள்ளது ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
04-ஏப்-201310:18:04 IST Report Abuse
mirudan என்னமோ இவர்தான் கட்டி ஆண்டது மாதிரி அல்லவா சொல்கிறார் ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
04-ஏப்-201309:57:16 IST Report Abuse
K Sanckar மன்மோகன் அவர்களே உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு இந்த ஞானம் வந்ததே. வாஜ்பாய் அவர்களை சந்தியுங்கள் அவரிடம் ஆலோசனை கேளுங்கள். எப்பட கோடனை அரசை நடத்துவது என்று. ஆறு ஆண்டுகள் வெற்றிகரமாக கூட்டணி அரசை நடத்தியவர் வாஜ்பாய். மன்மோகனை விட அதிக எண்ணிக்கையில் கட்சிகளை வைத்து கூட்டணி நடத்தியவர். மெஜாரிட்டி மைனாரிட்டி முடிவு பார்க்காமல் ஒருமித்த கருத்து உருவாக்கி அனைத்து கட்சிகளையும் அரவணைத்து அரசோச்சியவர். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. ஒரு நிகரற்ற தலைவர்.(Statesman )
Rate this:
21 members
0 members
12 members
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
04-ஏப்-201318:34:15 IST Report Abuse
சு கனகராஜ் இவர் என்னமோ சுதந்திரமாக செயல் பாட்ட மாதிரி அல்லவா பேசுகிறீர்கள் இவர் அன்னை சோனியாவும் மகன் ராகுல் சொன்னதை கேட்டு தலையாட்டியே காலத்தை ஓட்டியவர் ஓட்டியவர் திறம்பி பார்த்தால் ஒன்பது ஆண்டுகளாகவா இப்படி இருந்தோம் என்று ஆச்சர்யத்துடன் பார்க்கிறார் ...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Linux - gudal ,இந்தியா
04-ஏப்-201309:21:35 IST Report Abuse
Linux கூட்டணி அரசை கட்டி மேய்ப்பது எளிதானதல்ல""""""" கண்டிப்பாக... ஒத்துக்கிறோம்..... அதுக்காக, நாங்கள் உங்களுக்கு இந்தியாவின் "சிறந்த மாமங்குனி பிரதமர்"ன்னு பட்டம் கொடுக்குறோம்...
Rate this:
2 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்