Rs. 87 thousand spend for ministers team's lunch in one day | வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வறட்சியை பார்வையிட்ட அமைச்சர்கள் குழு "ஒருவேளை' சாப்பாட்டு செலவு ரூ. 87 ஆயிரம்

Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (134)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Rs. 87 thousand spend for ministers team's lunch in one day

சிவகங்கை மாவட்டத்தில் வறட்சியை பார்வையிட வந்த அ.தி.மு.க., அமைச்சர்கள் குழுவிற்கு மதிய சாப்பாடு செலவு ரூ. 87 ஆயிரத்து 20 ரூபாயாகியுள்ளது. இந்த தொகையை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள்,12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகளிடம் "பங்கு தொகை' கேட்டு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட, மார்ச் 16ந்தேதி நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஆறு அமைச்சர்கள் அடங்கிய குழு வந்து ஆய்வு செய்தனர்.(ரோட்டோரத்தில் மட்டும் சில நிமிடங்கள்). இக்குழுவினருக்கு மதிய உணவு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக, 87 ஆயிரத்து 20 ரூபாய் செலவாகியுள்ளது. இத்தொகையை எந்த கணக்கில் எழுதுவது என்ற சிக்கல் உள்ளதால், மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியம்,12 பேரூராட்சி, மூன்று நகராட்சிகள் பங்கிட முடிவெடுக்கப்பட்டது. 12 ஊராட்சி ஒன்றியங்கள்,12 பேரூராட்சிகள் தலா ரூ.2 ஆயிரத்து 417ம், சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய நகராட்சிகள், தலா 9 ஆயிரத்து 670 ரூபாய் , பங்கு தொகையாக வழங்கி, ஒட்டு மொத்த செலவை ஈடு கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அந்தந்த பி.டி.ஒ., - பேரூராட்சி செயல் அலுவலர், நகராட்சி ஆணையர்களுக்கு, "பங்கு தொகை' கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு, அ.தி.மு.க., உள்ளாட்சி தலைவர்கள் இசைவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.,வினர் தலைவராக உள்ள ஒன்றியம், பேரூராட்சிகளில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை, எந்த செலவு கணக்கில் எழுதி, ஈடு கட்டுவதென அதிகாரிகள் திகைத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்திலிருந்து, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு செல்லும் வழியில், இளையான்குடி அருகே சில நிமிடங்கள் மட்டுமே ரோட்டோரத்தில் உள்ள விவசாய நிலங்களை ஆய்வு செய்த இந்த குழுவினரின், சாப்பாட்டு செலவு இவ்வளவா என கலங்கி நிற்கின்றனர் விவசாயிகள்.

- சிறப்பு நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (134)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kathir Azhagan - Sivagangai, TN,இந்தியா
10-ஏப்-201301:25:04 IST Report Abuse
Kathir Azhagan நெசமாலுமே 87000 ரூபாய்க்கு இந்த அமைச்சருங்க மட்டும் சாப்பிட்டிருப்பானுவ? இல்லவே. சாப்பாட்டு செலவு 2000 தான். வழக்கம் போல டவாலி பியூன் லேர்ந்து டாப் ஆபீசர் வரையில அவனுகளும் செந்திள்ள சாப்டானுவ? கொஞ்சம் சாப்பாடா சாப்டான். மேல வவுச்சர் எழுதி கமிஷன் சேத்து அப்படி இப்படின்னு 87000 க்கு இழுத்துட்டான். அமைச்சர் பேரையே வெச்சு கமிஷன் பாத்த அந்த ஆபீசுக்கு பெஷல் அவார்டு ஏதாச்சும் குடுங்கப்பு
Rate this:
Share this comment
Cancel
SELVAMANIKANDAN - THIRUMANGALAM, MADURAI,இந்தியா
08-ஏப்-201302:04:02 IST Report Abuse
SELVAMANIKANDAN எதுக்கு இந்த மானக்கேட்ட பொழப்பு இதுக்கு ஏன்டா வெள்ளை வேட்டி சட்டை, வேலை இல்ல வெட்டி பயலுக
Rate this:
Share this comment
Cancel
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
05-ஏப்-201301:39:01 IST Report Abuse
Mujib Rahman அரசு அதிகாரிகள் மட்டும் யோக்கியமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு பலபேர் கருத்து தெரிவித்துள்ளனர் ,,,,,,அவர்களுடைய கமிசனையும் சேர்த்து தான் இந்த தொகை
Rate this:
Share this comment
Cancel
rajamohan.v - singapore,சிங்கப்பூர்
05-ஏப்-201300:45:23 IST Report Abuse
rajamohan.v திண்ணிப்பயலுக....
Rate this:
Share this comment
Cancel
M.Srinivasan - SADHURVEDHAMANGALAM,இந்தியா
05-ஏப்-201300:15:09 IST Report Abuse
M.Srinivasan மாண்புமிகு முதல்வர் "அம்மா" அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படவேண்டிய தகவல் இது
Rate this:
Share this comment
Cancel
desadasan - mumbai,இந்தியா
04-ஏப்-201321:14:06 IST Report Abuse
desadasan அங்க மழை தான் கொட்டப்போவுதையா...அம்மா கட்சிக்கு எதிராக தினமலர் செய்தியா? தெரிஞ்சு சாப்பிட்டதற்கு இவ்வளவு அதிர்ச்சிப் படற ஜனங்க தெரியாம சாப்ட்டவங்களை என்ன செய்வாங்க?
Rate this:
Share this comment
Cancel
Sathiya Sothanai - Pattanathu Pichandi,இந்தியா
04-ஏப்-201319:47:29 IST Report Abuse
Sathiya Sothanai ரூபாய் 87,000.20 மதிய உணவுக்காக செலவிடப்பட்டுள்ளது ஏனில் சிவகங்கை மாவட்டத்துல அவளோ பெரிய 5 ஹோடேல்களும் 3 ஹோடேல்களும் எங்கயுமே இல்லையே. என்ன சும்மா கதை விட்ரிங்கள
Rate this:
Share this comment
Cancel
Selvi - Bangalore,இந்தியா
04-ஏப்-201318:48:47 IST Report Abuse
Selvi Please do show little justice to your work...ppl hv elected you to represent them and to do good things...87K for one-time-meal :( this is really too much.... if you ppl would have not come for visit, at least this 87K could hv been saved and used for the people who are really in need... everyone born to live and enjoy life...don't suck poor ppl's blood for your enjoyment.... Life will never be the same....days will come where u will be nowhere... Live and let others to live...
Rate this:
Share this comment
Cancel
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201318:15:57 IST Report Abuse
Jeyaseelan ஒருவேளை வறட்சியால் அங்கே சோறு கிடைக்காமல் பணத்தை சாப்பிட்டிருப்பார்களோ ...............?
Rate this:
Share this comment
Cancel
Raju Rangaraj - Erode,இந்தியா
04-ஏப்-201317:44:16 IST Report Abuse
Raju Rangaraj தேர்தல் பணிக்கு நாங்கள் கிராமங்களுக்கு சென்ற காலங்களில் அங்கே உள்ள மணியகாரர்கள் சாப்பாடு செய்து போடுவார்கள்இல்லையென்றால் ஊரில் உள்ள பணக்காரரிடம் உரிய ஏற்பாடு செய்து சோறு போடுவார்கள்அதுவே கஷ்டமாக இருந்தது ஆனாலும் வேறு வழி இல்லாததால் ஏற்க வேண்டி இருந்ததுஇந்த காலத்தில் அது குறைந்து விட்டது வாகன வசதிகள் உள்ள காரணத்தால் சாப்பாடு பிரச்னை இல்லை ஆனால் மந்திரிகளை நினைத்தால் இப்படி சாப்பிடுவதை நினைத்தால் மிக கஷ்டமாக இருக்கிறதுஆட்சியின் பெயரை கெடுத்திடவே இதை போன்ற செய்திகள் உதவும் அம்மா அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை