Vasan plans to meet Sonia and Rahul | மீனவர் பிரச்னை: சோனியா, ராகுலை சந்தித்து பேச வாசன் திட்டம் | Dinamalar
Advertisement
மீனவர் பிரச்னை: சோனியா, ராகுலை சந்தித்து பேச வாசன் திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தியதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகிய இருவரையும் சந்தித்து, மத்திய அமைச்சர் வாசன் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.
அதிருப்தி: தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயத்தில், டில்லி மேலிடத்தில், தன் குரலை ஓங்கி ஒலிக்க வைப்பதன் மூலம், காங்கிரஸ் மீது, மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்கும் நடவடிக்கையில், வாசன் ஈடுபடுகிறார் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, காங்கிரஸ் மீது, கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக, காங்கிரஸ் அக்கறை செலுத்தவில்லை என்றும், இலங்கையில் போர் நடந்த போது, தமிழக மக்களை கொன்று குவிப்பதற்கு, இலங்கைக்கு தேவையான ஆயுத உதவிகளை, இந்தியா மறைமுகமாக செய்தது எனவும், இலங்கை தமிழர் ஆதரவு இயக்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

அடிதடி: தமிழக காங்கிரஸ் சார்பில் நடத்தும் பொதுக் கூட்டங்களில், கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம், முட்டை வீச்சு போன்ற சம்பவங்களையும், கல்லூரி மாணவர்கள் அரங்கேற்றி வருகின்றனர். திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்கும், காங்கிரசாருக்கும் அடிதடி, மோதல் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் நடக்க இருந்த, பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோரிக்கை: பிரதமரை, மத்திய அமைச்சர் வாசன் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். அப்போது, "இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழக மீனவர்களை விடுவிக்க, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்; இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது' என, பிரதமரிடம், வாசன் வலியுறுத்தினார். தமிழக மீனவர்கள் மற்றும் தமிழக மக்களின் நலன் சார்ந்த விவகாரம் தொடர்பாக, பிரதமரிடம், வாசன் கோரிக்கை வைத்தது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.

காங்கிரசுக்கு எதிராக இது குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசாருக்கு எந்த அக்கறையும் இல்லை என்ற பிரசாரத்தை, வைகோ உள்ளிட்ட சிலர் பரப்புகின்றனர். காங்கிரசுக்கு எதிராக, மாணவர்களையும் சில இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தூண்டி விடுகின்றனர். தமிழக மக்களின் நலன் சார்ந்த விஷயத்தில் காங்கிரசுக்கு அக்கறை உண்டு என்பதை வெளிப்படுத்தும் வகையில், பிரதமரை, வாசன் சந்தித்து, இலங்கை தமிழர் பிரச்னையில், மத்திய அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார். நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள, காமன்வெல்த் மாநாட்டில், பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என, வாசன் கோரிக்கை வைத்துள்ளார். தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை ராணுவத்தினருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என, அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை, அரசு ரீதியாக, பிரதமரிடம், வாசன் வலியுறுத்தினார். இனி கட்சி ரீதியாக, சோனியா, ராகுலிடம் வலியுறுத்தவும் வாசன் திட்டமிட்டுள்ளார். தற்போது சோனியா, வெளிநாடுக்கு சென்றுள்ளார். வரும், 22ம் தேதி, பார்லிமென்ட் கூட்டம் துவங்குவதற்கு முன், டில்லி வரும் சோனியாவை சந்திக்க, வாசன் அனுமதி கேட்டுள்ளார். இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (76)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-ஏப்-201318:18:25 IST Report Abuse
விருமாண்டி virumandi அப்போ இன்னும் பேசலையா ?? இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு மட்டும் சர்ர்ர்ர்ன்னு விமானத்துல பறந்து டெல்லிக்கும் ஐநா சபைக்கும் போறீங்க , மீனவர்கள்னா அவ்வளவு கேவலமா ...?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-ஏப்-201318:18:05 IST Report Abuse
விருமாண்டி மீனவர்களுக்காக போராட போறோம் .. இதுக்கு மாணவர்கள் யாராச்சும் போராட வர்ர்ர்றீங்களாப்பா ...? உங்களுக்கு இலங்கை தமிழன் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்.ஆனா நம்ம விவசாயிகளையும் மீனவர்களையும் மறந்துட்டீங்க .
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-ஏப்-201318:13:51 IST Report Abuse
விருமாண்டி திரு செந்தமிழ் கார்த்திக் எங்களை பிரித்து பார்க்க வேண்டாம், முதல்ல நம் தமிழ் நாட்டு மக்களுக்காக போராடுவோம் .. ஏழை மக்கள் வீடு இல்லாமல் சாலை ஓரத்தில் தான் உறங்குகிறார்கள் , ஊருக்கே உணவை கொடுக்கும் நம் விவசாயிகள் மற்றும் நம் மீனவர்களுக்கு போராட ஆள் இல்லை, இவர்கள் தங்களுக்கு தானே தான் போராட வேண்டும் .. ..நீங்கள் போராட்டம் நடத்த உங்கள் உடம்பில் சக்தியை கொடுத்தது நம் விவசாயிகள் அவர்களை மறந்துவிட வேண்டாம்
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
04-ஏப்-201318:06:53 IST Report Abuse
Rss நண்பர் செந்தமிழ் நாமெல்லாம் ஒன்றுதான் ....ஈழத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்பதுதான் எங்கள் கருது .. தமிழகத்தில் எத்தனை கொடுமைகள் நடக்கின்றது ? விவாசாயிகள் தற்கொலை சிறுமி பலாத்காரம் என்று இதற்க்கு முதலில் போராடுவோம் .
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
04-ஏப்-201316:34:00 IST Report Abuse
Rss சப்ப்ப்ப்பா எப்ப பாத்தாலும் இலங்கை தமிழர்கள் பேச்சுதான் ..நமக்கு சோறு போட்ட தமிழ்நாட்ட மறந்துட்டிங்கலப்பா ..உங்களுக்கு மனசாட்சியே இல்லையா ?? ஹலோ மாணவர்களே வாங்க மீனவர்களுக்கு போராடலாம் .. ஹலோ உங்களைதான்..
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-ஏப்-201316:28:08 IST Report Abuse
விருமாண்டி அப்போ இன்னும் பேசலையா ?? இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்கு மட்டும் சர்ர்ர்ர்ன்னு விமானத்துல பறந்து டெல்லிக்கும் ஐநா சபைக்கும் போறீங்க , மீனவர்கள்னா அவ்வளவு கேவலமா ...?
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
04-ஏப்-201316:27:53 IST Report Abuse
விருமாண்டி மீனவர்களுக்காக போராட போறோம் .. இதுக்கு மாணவர்கள் யாராச்சும் போராட வர்ர்ர்றீங்களாப்பா ...? உங்களுக்கு இலங்கை தமிழன் மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்.ஆனா நம்ம விவசாயிகளையும் மீனவர்களையும் மறந்துட்டீங்க .
Rate this:
2 members
0 members
2 members
Share this comment
Cancel
Mohamed Riswan - chennai,இந்தியா
04-ஏப்-201314:54:35 IST Report Abuse
Mohamed Riswan R.Subramanian - சென்னை, மிகச்சரியான பேச்சு. "காங்கிரஸ் கட்சி மட்டுமே இலங்கை தமிழர்களின் வாழ்கையை வைத்து அரசியல் செய்யாமல் உண்மையில் இலங்கை தமிழருக்கு உதவிகளை செய்கிறது இன்று காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம் என்று பேசுபவர்கள் நாளை காங்கிரஸ் கட்சியின் உதவி இல்லாமல் இலங்கை பிரச்னையை தீர்க்க முடியாது "
Rate this:
5 members
0 members
4 members
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
04-ஏப்-201313:39:24 IST Report Abuse
ANBE VAA J.P. ஏதோ பழைய கணக்கு படி காங்கிரசை விட்டு விலகி வர்ற மாதி தெரியுதே உங்களுடைய சமீப காலத்து நடவடிக்கைகள் யாரு திமுகவின் பெரியண்ணன் அ .. ...வின் ஆலோசனையா ? குரு யாரு ப. சி .யா ?த.மா.க வை தாமாக உருவாக்க இந்த ஐடியாவா ?/ அப்படி உருவாக்குனா கரை ஏறுமா உங்கள் த.மா.க கப்பல் ??/
Rate this:
1 members
0 members
5 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
04-ஏப்-201312:57:14 IST Report Abuse
amukkusaamy இவ்வளவு நாளும் புடுங்கின ஆணியெல்லாம் எங்க இருக்கு?
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்