Special flight service to workers, whose lost their jobs in Saudi | வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை| Dinamalar

வேலை இழக்கும் தொழிலாளர்களை அழைத்து வர இலவச விமான சேவை

Added : ஏப் 03, 2013 | கருத்துகள் (49)
Advertisement
Special flight service to workers, whose lost their jobs in Saudi

திருவனந்தபுரம்: ""சவுதி அரேபிய அரசின், புதிய சட்டத்தால், அங்கு பணியாற்றும் இந்திய தொழிலாளர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழந்தவர்கள், கேரளாவுக்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே, செலுத்த முன்வந்துள்ளது,'' என, கேரள முதல்வர், உம்மன் சாண்டி கூறினார்.
புதிய சட்டம்: கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவர்களில் ஒருவருமான, உம்மன் சாண்டி கூறியதாவது: சவுதி அரேபிய அரசு, புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, அங்குள்ள நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில், 10 சதவீதத்தை, அந்த நாட்டை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்க வேண்டும்.

அபாயம்: சவுதி அரேபிய அரசின், இந்த புதிய சட்டத்தால், அங்கு பணிபுரியும் ஏராளமான இந்தியர்கள், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வேலை இழக்கும் இந்திய தொழிலாளர்கள், இந்தியா திரும்புவதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான், சவுதி அரேபியாவில், அதிக அளவில் பணிபுரிகின்றனர்.


இதுகுறித்து, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான, மத்திய அமைச்சர், வயலார் ரவியிடம், ஆலோசித்தோம். இதையடுத்து, வேலை இழக்கும் தொழிலாளர்கள், கேரளா திரும்ப விரும்பினால், அவர்களுக்கான விமான பயண கட்டணத்தை, மத்திய அரசே ஏற்கும் என, அவர் தெரிவித்து உள்ளார்.

உதவி மையம்: இந்த விவகாரம் குறித்து, கேரள அமைச்சக கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. கேரளாவைச் சேர்ந்தவர்கள், சவுதியில், வேலை இழந்து திரும்பினால், அவர்களுக்கான மறு வாழ்வு பணிகளை மேற்கொள்வது குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஒவ்வொரு மாவட்ட, கலெக்டர் அலுவலகங்களிலும், உதவி மையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, உம்மன் சாண்டி கூறினார்.

இதற்கிடையே, புதிய தொழிலாளர் சட்டத்தால், இந்திய தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து பேசுவதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர், வயலார் ரவி, விரைவில், சவுதி செல்லவுள்ளார். இப்பிரச்னை குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்குடனும், வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித்திடனும், வயலார் ரவி, ஏற்கனவே ஆலோசனை நடத்தியுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
04-ஏப்-201321:02:01 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi மலையாளிகளைப் பார்த்து தமிழன் நிறைய படிப்பினை பெற வேண்டி இருக்கிறது. அவர்களது ஒற்றுமை அபரிதமானது.அங்கே பெயரளவில் சொல்லிக் கொள்ளும்படி எந்த கட்சியும் இல்லை.காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,பி.ஜே.பி என்று தேசிய கட்சிகளே பிரதானமாக உள்ளது.ஆனால் அவர்களுக்கு இருக்கும் மொழி உணர்வு,இன உணர்வு,மாநில உணர்வு உண்மையிலேயே பிரமிக்க வைக்கும். இதில் ஊடகத்துறையின் பங்கு பிரதானமானது.நமது தமிழ் நாட்டில் நிலைமை தலைகீழ்.இங்கே உள்ள மாநில உள்ள மாநில கட்சிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.அதிமுக திமுக தேமுதிக என்று எந்த தேசிய கட்சியும் ஆட்சிக் கட்டிலை நெருங்க முடியாத அளவுக்கு தமிழ்நாடு மக்கள் இந்த மாநில கட்சிகளை ஆதரிக்கின்றனர்.ஆனால் இவர்கள் தமிழ்,தமிழ்நாடு.தமிழினம் ஈழம் இந்தி எதிர்ப்பு அது இது என்று மக்களின் உணர்சிகளை தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்து இவர்கள் தம்ழுக்கும் தமிழ்நாட்டிற்கும் இவர்கள் செய்த நன்மைகள் என்ன என்று பார்த்தால் மனம் கொந்தளிக்கும்.இவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலை செய்யும் ஒரு தமிழன் ஒரு பொருட்டே அல்ல.இந்த பிரச்சினையில் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு அடுத்த தமிழ் நாட்டை சேர்ந்தவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.அவர்களுக்காக கிடைக்கும் குரல் சுரத்தே இல்லாமல் கேட்கிறது.
Rate this:
Share this comment
Cancel
04-ஏப்-201320:41:12 IST Report Abuse
மேன்சியன் ஹவுஸ் மாணிக்கம் இதுவும் சட்ட விரோதமே. இந்தியாவில் மலையாளிகள் மாத்திரம் தான் இருகிறார்கள? மற்றவர்கள் இல்லையா ? இந்த நாடு தொடர்ச்சியாக தவறான பாதைலையே போய் கொண்டு இருக்கிறது . இது நல்லதல்ல .
Rate this:
Share this comment
Cancel
Sivakumar Manikandan - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201318:47:00 IST Report Abuse
Sivakumar Manikandan மத்திய அரசை ஆட்டிப் படைப்பதே மலையாளிகள் தான் .............விட்ட ரயில் விடுவானுக .............அப்பறம் திரும்பி வரவனுக்கு வீடு பணம் கேட்கலைய .............
Rate this:
Share this comment
Cancel
Shekar - Nellai,இந்தியா
04-ஏப்-201316:35:45 IST Report Abuse
Shekar ஏதோ இவராவது தம் மாநில மக்களுக்காக பேசுகிறார். ஆனால் நம் அரசியல்வாதிகளோ நாம் மாநில மக்களுக்கு சோறு இல்லை என்றாலும் பரவாஇல்லை இலங்கை தமிழர்கள்தான் இவர்கள் உயிர்
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
04-ஏப்-201315:36:07 IST Report Abuse
K Sanckar சவூதி நாட்டில் வேலை இழக்கும் இந்தியர்களுக்கு விமானம் போய் அழைத்து வரும். ஏனெனில் அவர்கள் அனைவரும் மலையாளிகள். வயலார் ரவி ஒரு மலையாள அமைச்சர் அவர் அப்படித்தானே கூறுவார். ஆனால் தமிழ் நாட்டில் மீனவர்கள் இலங்கையில் அடி பட்டால் , சிறை வைக்க பட்டால் அதை தட்டி கேட்க ஒரு நாதி கிடையாது. ஜெயலலிதா கடிதங்கள் கருணாநிதியின் ஓலங்கள் செவி சாய்க்க மத்திய அரசில் தமிழன் யாரும் இல்லை. கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மீனவர்கள் இலங்கை கடற் படையினரால் தாக்கபடுகின்றனர் டி வி யில் பார்த்து பார்த்து அலுத்து போய் விட்டது. . சிதம்பரம், வாசன் போன்ற காங்கிரஸ் அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள். அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்கள் உடம்பில் தமிழ் ரத்தம் ஓட வில்லையா? தி மு க அமைச்சர்கள் ஆட்சில் இதனை ஆண்டுகள் இருந்தபோது அவர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள். இந்த அக்ரமத்தை கேட்பாரே இல்லையா? ஈழம் பிறக்குமோ இல்லையோ,, தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் தி மு க வை கை கழுவி விடும் காலம் வெகு தொலைவில் இல்லை. .
Rate this:
Share this comment
Cancel
ravi france - sevran,பிரான்ஸ்
04-ஏப்-201315:31:09 IST Report Abuse
ravi france இது என்ன கொடுமை இந்தியாவிலேயே ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒவ்வொரு சட்டம் ,,,இது தன ஜனநாயகமா , அல்லது காங்கிரஸின் நயவஞ்சகமா
Rate this:
Share this comment
Cancel
selva - chennai,இந்தியா
04-ஏப்-201315:28:29 IST Report Abuse
selva தமிழ் ஆட்களும் வேலை செய்கிறார்கள். ஆனால் தமிழ் எம் ல் எ & எம் பி என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ப. சிதம்பரத்திற்கு வரி மட்டும் வேணும். ஆனால் தமிழர்களுக்கு ஏதும் பிரச்சினையா என்று பார்பதில்லை. அவர்களை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. அவர்களுக்கு வோட்டு போடும் தமிழ் மக்களை சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
Kathir Azhagan - Sivagangai, TN,இந்தியா
04-ஏப்-201315:23:23 IST Report Abuse
Kathir Azhagan மக்கள் வரிப்பணம்ன கடை தேங்காயோ வழிப் பிள்ளையாரோ தான். இவனுவ சவுதில நல்லாத் தான சம்பாதிச்சானுவ? சவுதியிலையும் வரி கெடயாது. என் ஆர் ஐ ன்னு சொல்லி இந்தியாவுலயும் வரி கெடயாது. இங்க இளையாங்குடில வேல போயி திருபோனம் திரும்ப பஸ் சத்தம் இல்லாம தவிக்கிரவுனகளக் கண்டுக்க நாதியில்ல. சவுதிகாரனுக்கு இலவச விமானமா? என்ன அநியாயம்வே? சிறீ லங்காவுல சிறி மாவோ பண்டாரனாயகான்னு ஒருத்தன் கொண்டு வந்தான் சிங்களவுனுக்கு இட ஒதுகீடுன்னு 1960/1950கள் வாக்கில. அப்போ புடிச்சுதுவே இலங்கைக்கு சனி. (20% ஈழத் தமிழர்கள் 80% அரசு வேலைகளை வெச்சுகிட்டு இருந்தானுவ.அப்போ ) தமிழ் நாட்டுல 68% இட ஒதுக்கீடு வந்து சீரழிஞ்சு போச்சு. இப்ப சவுதில இட ஒதுக்கீடா? இனிமே சவுதியும் அம்பேல் தான்.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
04-ஏப்-201315:22:23 IST Report Abuse
amukkusaamy முதலில் உம்மன் சாண்டியின் செய்தி பாதி தவறு. நான் எனது நண்பரை தொடர்பு கொண்டு விசாரித்தேன். அவரை வேலைக்கு எடுத்த நிறுவனம் குறிப்பிட்ட அளவு சவுதிகளை பணிக்கு அமர்த்தி உள்ளதாகவும், மேலும் அவர் என்ன விசா காரணத்துக்காக கொண்டு வரப்பட்டாரோ அதே வேலையைத்தான் செய்து வருவதாகவும், இது போன்ற பிரச்சினைகள் வீட்டு வேலைக்கு என்ற விசாவின் அடிப்படையில் (ப்ரீ விசா என்று சொன்னார்) தனிப்பட்ட அராபியரிடம் பணம் கொடுத்து (நம்ம ஊர் கணக்குக்கு சுமார் 1 லட்சம்) வேலைக்கு வந்தவர்களுக்குத்தான் ஆபத்து. இது போல வந்தவர்களில் பெரும்பான்மை மலையாளிகள்தான். அடுத்து பங்களா தேசிகள் என்றும் சொன்னார். எனவே இவர்கள் வேலை இழந்ததற்கு இவர்களும் ஒரு காரணம். கிட்ட தட்ட 25 லட்சம் தொழிலாளிகள் வெளியேற்றப்படலாம் என்றும் சொன்னார். அப்படியானால் எல்லா தொழிலாளிக்கும் மத்திய அரசு பணம் கொடுக்க வேண்டும். வயலார் ரவி ஒரு மலையாளி. இதுக்கு உதவி செய்ய நிதி ஒதுக்கித்தரப்போவது நமது தமிழன் ப.சி. ஆனால் ஆப்பு நமக்குத்தான்.
Rate this:
Share this comment
Cancel
Raj Raj - salem,இந்தியா
04-ஏப்-201314:31:50 IST Report Abuse
Raj Raj மலையாளிகளுக்கு மட்டுமே விமான சேவை தமிழக மந்திரிகள் .............. புடிங்கி கொண்டு இருக்கிறார்களா? சவுதியில் ஒரு தமிழனும் வேலை செய்ய வில்லையா? இல்லை தமிழர்கள் வேலை இழக்கவில்லையா? என்னடா ஜனநாயக நாடு இது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை