அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: "ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், அமைச்சர் வளர்மதி வெளியிட்ட அறிவிப்பு:


* சேவை இல்லங்களில், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்கி பயனடைகின்றனர். அதிக பெண்கள் பயன் பெற, 1.38 கோடி ரூபாயில், பெரம்பலூர், கிருஷ்ணகிரியில் புதிதாக சேவை இல்லங்கள் துவக்கப்படும்.


* அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு, 2.72 கோடி ரூபாய் செலவில், "தன் சுத்தம் பேணும் சுகாதாரப் பை'கள் வழங்கப்படும்.


* 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில், 1.20 கோடி ரூபாய் செலவில், முன்பருவ கல்விக்கு, உட்புறச் சுவர்களில், விளக்கப் படத்துடன் நீதிக் கதைகள் அச்சிட்டு தரம் உயர்த்தப்படும்.


* சென்னை, தாம்பரம் சேவை இல்லத்தில், ஆசிரியர் பயிற்சி பயிலும் மாணவியருக்கு, 1 கோடி ரூபாய் செலவில், தங்கும் விடுதி கட்டப்படும்.


* குழந்தைத் திருமணத்தை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாக்கும் விழிப்புணர்வு பிரசார விளம்பரப் படங்கள் தயாரிக்கப்படும்.


* அங்கன்வாடி குழந்தைகளின் எடையை கண்காணிக்க, 50 லட்சம் ரூபாய் செலவில், 2,000 எடை கருவிகள் வழங்கப்படும்.


* ஊட்டச்சத்து பற்றாக்குறை சதவீதம் அதிகமாக உள்ள அரியலூரில், முன்னோடி திட்டமாக, ஐந்து மாதங்களுக்கு, 1.29 கோடி ரூபாய் செலவில், சிறு தானியங்களின் கலோரி மதிப்பு குறையாமல், குழந்தைகள் விரும்பும் வண்ணம், தினசரி, 50 கிராம் லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்.


* அரசினர் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் சிறப்பு இல்லங்களில், சூரிய சக்தி உபகரண தெரு விளக்குகள், 35 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.


* பெரம்பலூரில், 370 சத்துணவு மையங்களில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, 3.71 லட்சம் ரூபாய் செலவில், கூடுதலாக, தினசரி, 500 கலோரி ஊட்டச்சத்து கொண்ட உணவு பொருட்கள், 220 வேலை நாட்களில் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (31)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapathy - khartoum,சூடான்
04-ஏப்-201316:28:31 IST Report Abuse
ganapathy கடலை, அவல், நிலகடலை, சுண்டல் போன்றவைகள் கொடுக்கலாம். கொய்யா பழம், வாழைபழ்ம், வெள்ளரிக்காய், காரட் போன்றவை கொடுக்கலாம். அல்வா காரசேவ் எல்லாம் எண்ணை பலகாரங்கள். ஊட்ட சத்து என்று சொல்ல முடியாது. என்னமோ காசுக்கு புடிச்ச கேடு.
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
04-ஏப்-201316:03:31 IST Report Abuse
naagai jagathratchagan அப்போ திருநெல்வேலிக்கு ....?
Rate this:
Share this comment
Cancel
Dhandapani Shanmugam - riyadh,சவுதி அரேபியா
04-ஏப்-201315:34:37 IST Report Abuse
Dhandapani Shanmugam ஒன்று மட்டும் உண்மை, இந்த திட்டத்தால் பயன் அடைவது அங்கண் வாடி ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள், இதில் ஒரு சிலரை தவிர, மற்ற அனைவருக்கும் பொருந்தும். எந்த ஒரு அங்கண் வாடி ஊழியராவது எடை குறைந்து உள்ளார்களா?
Rate this:
Share this comment
Cancel
saravanakumar - coimbatore,இந்தியா
04-ஏப்-201312:57:04 IST Report Abuse
saravanakumar இதையெல்லாம் கொடுத்து 2014 ல மக்களுக்கு அல்வா கொடுக்க போரங்க .......................................டும் டும் டும் டும்
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201312:53:10 IST Report Abuse
Mohandhas தமிழ மக்களுக்கு அம்மா வீட்டில் பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட அல்வா தரப்படும்..
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
04-ஏப்-201312:51:01 IST Report Abuse
Mohandhas "தன் சுத்தம் பேணும் சுகாதாரப் பை'கள் அப்படின்னா என்ன?,,அது சரி,, எனக்கு அந்த காண்ட்ராக்ட் கிடைக்குமா..?..எத்தன நாள் தான் அடுத்தவன் கம்பெனியில குப்ப கொட்டி அஞ்சும் பத்தும் சம்பாதிக்கிறது..
Rate this:
Share this comment
Cancel
prakash appurao - kuwait,குவைத்
04-ஏப்-201312:14:38 IST Report Abuse
prakash appurao தயவு செய்து யாரும் திட்டத்தை தவறாக பேசவேண்டாம். தங்கள் குடும்பத்ஹை பற்றியே யோசிக்கும் இந்த காலத்தில் இந்த ஆட்சியில் எல்லோருக்கும் ஒருவேளை சோறு கிடைக்க வீண்டும் என்ற முயற்சி தொடங்கியுள்ளது. இது வரவேற்கபடவேண்டிய ஒன்று. நிச்சயமாக ஆண்டவனின் அருள் இவர்களுக்கு கிடைக்கும்,
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
04-ஏப்-201311:41:20 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் வாசகர்கள் பெரும்பாலும் ஆண்கள் என்பதால் அவர்களுக்கு புரியவில்லை தாய்மார்கள் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்குள் அவர்கள் படும் கஷ்டம்.. வேண்டுமானால் கேட்டு பாருங்கள் உங்கள் வீட்டில்.. உங்கள் குழந்தைகள் வேலை தவறாமல் , விரும்பி சாப்பிடுகிறதா என்று ?? எல்லாவற்றையும் அரசியல் கண்ணோடு பார்த்தால் இப்படி தான் தெரியும். மேலோட்டமாக பார்த்தல் இந்த திட்டம் காமெடி தான்.. உள்ளே சென்று தீர ஆராய்ந்தால் தான் தெரியும் இது உண்மையாலும் மிக நல்ல திட்டம் என்று... போதுமான கலோரிகள் உடன் சேர்த்து தான் கொடுக்கிறார்கள்.. எனவே பாராட்ட பட வேண்டியது தான்.. எந்த குழந்தையும் அல்வா , லட்டு வேண்டாம் என்று சொல்லாது , ஆகவே இதில் வேஸ்ட் கூட ஆகாது.. அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும்.. இல்லை என்று மறுக்க முடியுமா ???
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
04-ஏப்-201310:09:52 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டும் நல்லா அல்வா கொடுக்குறாங்க..
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
04-ஏப்-201308:42:24 IST Report Abuse
kumaresan.m " நம் நாட்டு அரசியல் வாதிகள் குழந்தை பருவத்திலே அல்வா கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் . இவர்களுக்கு அல்வா மற்றும் லட்டு கொடுத்தால் ஊட்டச்சத்து கிடைக்கும் என்று எந்த உணவியல் மருத்துவர் கூறினார் என்று தெரியவில்லை " முதலில் அங்கன் வாடி மையங்களில் போடப்படும் உணவு வகைகளில் சரிவிகித உணவு உள்ளதா மற்றும் தரமானதாக உள்ளதா என்று யார் ஆய்வு செய்கிறார்கள் ??? தேவையான கலோரி-வெப்பம் ( கார்போஹைரெட் ) சர்க்கரை சத்துகள் மற்றும் புரத சத்துக்கள் ,கொழுப்பு சத்துக்கள் ,வைட்டமின் நிறைந்த காய்கறிகள் மற்றும் சுகாதாரமான குடி நீர் ) போடப்போகும் அல்வா மற்றும் காரவகைகள் என்ன என்ன தானியங்கள் உள்ளது ? என்று வெளியிட்டு இருந்தால் மிக்க நன்றாக இருந்திருக்கும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்