தி.மு.க., பேரூராட்சி தலைவரை கண்டித்து ஆயக்குடியில் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., பேரூராட்சி தலைவரை கண்டித்து ஆயக்குடியில் கவுன்சிலர்கள் உண்ணாவிரதம்

Added : ஏப் 03, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பழநி: திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி பேரூராட்சி தலைவர் சுந்தரத்தை, பதவிநீக்கம் செய்யக்கோரி, கவுன்சிலர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயக்குடி பேரூராட்சியில் 18 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்த சுந்தரம் தலைவராக உள்ளார். கவுன்சிலர்கள் ஆதரித்த தீர்மானத்தை, தீர்மானப்புத்தகத்தில் அங்கீகரிக்கவில்லையென, தலைவர் சுந்தரம் பதிவுசெய்துள்ளார் என்பது உட்பட பல புகார்களை தெரிவித்து, சுந்தரத்திற்கு எதிராக, தி.மு.க., உறுப்பினர்கள் 5 பேர், உட்பட 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டனர். நம்பிக்கையில்லாத தீர்மானம் கொண்டுவர, மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனரிடம் மனு தரப்பட்டது. இதற்காக நேற்று, சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
உதவி இயக்குனர், கரூர் மாவட்ட வறட்சி நிவாரணப் பணிகள் ஆய்வு கூட்டத்திற்கு செல்வதாக கூறி, நேற்றைய சிறப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

உண்ணாவிரதம்: நம்பிக்கையில்லாத தீர்மான சிறப்பு கூட்டத்தை உடனே நடத்த வேண்டும் எனக்கூறி துணைத்தலைவர் சிவஞானம்(காங்.,) மற்றும் 14 கவுன்சிலர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேரூராட்சி தலைவர் சுந்தரம் கூறுகையில்,"" துணைத்தலைவர் சிவஞானம் தூண்டுதல்படி, கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவரை பதவிநீக்கம் செய்ய முடியாது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு நடக்கிறது,"' என்றார்.

துணைத்தலைவர் சிவஞானம் கூறுகையில்,""சுந்தரம், ஆளும் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளதால், நம்பிக்கையில்லா தீர்மான சிறப்பு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவித்தபடி, சிறப்பு கூட்டம் நடத்தவேண்டும். அதுவரை உண்ணாவிரதம் தொடரும்,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை