காட்டு பகுதியில் வனவிலங்கு நடமாட்டத்தை அறிய கருவி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காட்டு பகுதியில் வனவிலங்கு நடமாட்டத்தை அறிய கருவி

Added : ஏப் 03, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: ""காட்டுப் பகுதியில், மனித, வன விலங்குகள் மோதலைத் தடுக்க, வன விலங்கு நடமாட்டத்தை முன்கூட்டியே அறியும் கருவி பொருத்தப்படும்,'' என, வனத்துறை அமைச்சர் பச்சைமால் கூறினார்.
வால்பாறை பகுதியில், வன விலங்குகள், மனித மோதல்கள் தொடர்வதும், உயிர் பலிகளைத் தடுக்கவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எம்.எல்.ஏ., ஆறுமுகம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு, அமைச்சர் பச்சைமால் சட்டசபையில் நேற்று அளித்த பதில்: வால்பாறை, ஆனைமலை பகுதிகளில் ஏற்பட்ட மனித, வன விலங்குகள் மோதலில், கடந்த ஆண்டில், ஐந்து பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு, 9.50 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு மோதலைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மின்வேலி அமைத்தல், அகழி வெட்டுதல், மின் விளக்குகள் மூலம் வெளிச்சம் ஏற்படுத்துதல், தனித்தனி குடியிருப்புகளை அகற்றுதல், கான்கிரீட் கட்டடத்தில் ரேஷன் கடை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், காப்புக் காடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், மனிதர்கள் செய்யக் கூடாத பணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மனித குடியிருப்புகள், சாகுபடி பரப்பில், வன விலங்குகள் புகா வண்ணம், 130 கி.மீ., தூரத்துக்கு மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. 40 கி.மீ., தூரத்துக்கு யானை புகா அகழி வெட்டப்பட்டுள்ளது.
வன விலங்குகளின் நடமாட்டத்தை முன்கூட்டியே அறியும், தொழில்நுட்ப கருவிகள், காட்டுப் பகுதியின், 30 இடங்களில் அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்ட வரப்படுகிறது. இதன்மூலம், மனித, வன விலங்கு மோதலை பெருமளவு தடுக்கலாம். இவ்வாறு, அமைச்சர் பச்சைமால் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை